கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை: கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு 2009ஆம் ஆண்டு கொண்டு வந்த அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனைக் கொண்டாடும் விதமாக 02.08.2024 அன்று மதுரை மாவட்டக் கழக சார்பில் மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமையில் சிம்மக்கல்லில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் திராவிடத் தமிழர் கட்சி மாநிலச் செயலாளர் விடுதலை வீரன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் சந்துரு, கழக மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, வேங்கை மாறன், அழகர், கண்ணன் காமாட்சி மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

You may also like...