கழக ஏட்டுக்கு சந்தா: கழகக் கிளைகள் தீவிரப் பணி

கொளத்தூர் : 04.12.2021 சனி மாலை 5.30 மணியளவில், கொளத்தூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்ட தோழர்கள் நியமிக்கப்பட்டனர்.

கொளத்தூர் நகரம்: நகரத் தலைவர் -இராமமூர்த்தி, நகரச் செயலாளர் – பா.அறிவுச்செல்வன், பொருளாளர் – சூ. இனியன், காவலாண்டியூர் கிளைக் கழகத் தலைவர் – இராசேந்திரன், துணைத் தலைவர் – சேகர், செயலாளர் – தங்கராசு, இணைச் செயலாளர் – சந்தோஷ், பொருளாளர் – சின்ராசு, உக்கம்பருத்திக்காடு செயலாளர் – செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் – கோமதி, சித்ரா, ஒன்றிய குழு ஒருங்கிணைப்பாளர்கள் – சித்துசாமி, விஜயகுமார், ஒருங்கிணைப்பு குழு தோழர்கள் – சுதா, இளவரசன், சுரேஷ், சக்தி குமார், இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் – செல்வேந்திரன், இளைஞர் குழு தோழர்கள் – சூ. இனியன், பா.அறிவுச்செல்வன், சந்தோஷ், இராமன், இலட்சுமணன்.

தீர்மானங்கள் : 1) 09.11.2021 அன்று இயற்கை எய்திய திராவிடர் கழக மண்டல பொறுப்பாளர் பிரகலாதன்  மறைவிற்கு கொளத்தூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

2)         2022 ஆம் ஆண்டு ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தாவினை சேலம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி சந்தா சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது.

3)         2022ஆம் ஆண்டு முதல் கிளைக் கழகங்களில் தெருமுனை கூட்டங்களை நடத்தி புதிய தோழர்களை சேர்ப்பதென தீர்மானிக்கப்பட்டது.

நிறைவாக புதிதாக பொறுப்பேற்ற நகர செயலாளர் பா.அறிவுச்செல்வன் நன்றியுரை கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவடைந்தது.

மதுரை : மதுரை மாவட்டக் கழக புதிய பொறுப்பாளர்கள் நியமனம் – புறநகர் மாவட்ட தலைவர் – மாளவிகா; புறநகர் மாவட்ட செயலாளர்- பிரபாகர், புலிப்பட்டி பகுதி செயலாளர் – கருப்பையா, வில்லாபுரம் பகுதி செயலாளர் மற்றும் மாவட்ட இணையதள பொறுப்பாளர் – செந்தில் நாதன், மாவட்ட செயலாளர் மா.பா.மணிஅமுதன் பரிந்துரையின்படி,  மாவட்ட கழக காப்பாளர் தளபதி, மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி உள்ளிட்ட தோழர்களின் ஆலோசனையின் பெயரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்னிலையில் மேற்கண்ட புதிய பொறுப்பாளர்கள் 21.08.2021 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இளம்பிள்ளை: சேலம் கிழக்கு மாவட்டம் இளம்பிள்ளையில் 05.12. 21 ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணியளவில் முத்து மாணிக்கம் கடையில் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் கா. சக்திவேல் தலைமையில் மாவட்ட செயலாளர் டேவிட் முன்னிலையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் இளம்பிள்ளை பகுதி சார்பாக 150 பெரியார் முழக்கம் சந்தாக்களை டிசம்பர் இறுதிக்குள் முடித்துக் கொடுப்பதாகவும் பிரச்சார தெருமுனை கூட்டங்கள் நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது இறுதியாக இளம்பிள்ளை பகுதிப் செயலாளர் தங்கதுரை நன்றி உரை கூற கூட்டம் முடிந்தது.

சேலம் மாநகர் : 06.12. 2021 அன்று மாலை 6 – மணி அளவில் சேலம் மாநகர கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட செயலாளர் டேவிட் தலைமையில் பிரபு இல்லத்தில் நடைபெற்றது கூட்டத்தில் இயக்க வளர்ச்சி குறித்து விவாதிக்கப் பட்டது பெரியார் முழக்கம் சந்தா நகர சார்பாக 200 சந்தாக்கள் முடித்துக் கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு பிரபு நன்றி உரை கூற கூட்டம் முடிந்தது.

சென்னை – திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி பகுதி கலந்துரையாடல், டிசம்பர் 5 அன்று மாலை 6 மணியளவில், வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில் திருவல்லிக்கேணி பகுதி பொறுப்பாளர் அருண் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலில், பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடத்துவது குறித்தும், கழகத்தின் வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான அதிகப்படியான சந்தா சேர்ப்பது, பகுதி கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நங்கவள்ளி : நங்கவள்ளி பகுதி கலந்துரையாடல் கூட்டம் கழகத் தோழர் செந்தில் இல்லத்தில் 13.12.2021 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சூர்யகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.

கலந்துரையாடலில் – 1) புதிய பொறுப்பாளர்கள் நியமனம்; 2)  2022ஆம் ஆண்டு ‘புரட்சி பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தீர்மானங்கள் :  1) கூட்டத்தில் 2022ஆம் ஆண்டுக்கான ‘புரட்சி பெரியார் முழக்கம்’ டிசம்பர் 26ஆம் தேதிக்குள் சந்தா சேர்ப்பு கொடுக்கப்படும். 2) தந்தை பெரியார் நினைவு நாள் கூட்டம் டிசம்பர் 26ஆம் தேதி நங்கவள்ளியில் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்வில் நங்கவள்ளி – ஒன்றிய பொறுப்பாளர்கள்- கிருஷ்ணன், ராஜேந்திரன்,  நகர தலைவர் – கண்ணன்,  நகர செயலாளர் – பிரபாகரன் ஆகி யோருக்கு பொறுப்புகள் வழங்கப் பட்டன. நகர செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

 

பெரியார் முழக்கம் 16122021 இதழ்

You may also like...