எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு
நாமக்கல் : நாமக்கல் மாவட்ட திவிக கலந்துரையாடல் கூட்டம் பள்ளிபாளையம் ஐந்து பனையில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட சமுதாயக் கூடத்தில் 14.08.2024 மாலை 05.00 மணி அளவில் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.சரவணன், மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, ராசிபுரம் நகரச் செயலாளர் பிடல் சேகுவாரா, காளிப்பட்டி பெரியண்ணன், திருச்செங்கோடு பொறுப்பாளர் பூபதி, கீற்று இணையதளப் பொறுப்பாளர் கார்த்தி, குமாரபாளையம் நகரத் தலைவர் மீ.தா.தண்டபாணி, செயலாளர் செ வடிவேல், தோழர்கள் மோகன், சந்திரா, மணியம்மை, மாதேஸ்வரன், ஆ பிரகாஷ், நாகராஜ், கடச்சநல்லூர் அமைப்பாளர் செல்வகுமார் ஐந்து பனை வாசகர் வட்ட சக்திவேல் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைக் பகிர்ந்து கொண்டனர்.
ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட சட்ட நடவடிக்கைகளை எடுப்பது, மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம், போதைப்பொருட்களுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. நிறைவாகக் கௌதமன் நன்றி கூறினார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 16.8.2024 அன்று விழுப்புரம் சாந்தி நிலையத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன், மாவட்டச் செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், விஜயக்குமார் ஆகியோர் தொடக்கவுரையாற்றினர்.
நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பயிலரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தி.வி.க. கலந்துரையாடல் கூட்டம் 21.08.24 அன்று காலை 10:30 மணி அளவில் திருப்பூர் வீரபாண்டி பிரிவில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.
தமிழ்நாட்டில் பெருகிவரும் குறிப்பாக மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான பரப்புரை செய்வது குறித்தும், ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றை இயற்ற தமிழக அரசைக் கோருவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் இரா.உமாபதி, சூலூர் பன்னீர்செல்வம், சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் மற்றும் மாவட்டக் கழகத் தலைவர் முகில் ராசு, மாவட்டச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா மேலும் மாநகர ஒன்றியப் பொறுப்பாளர்கள் கழகச் செயல் வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் தலைமைக் கழகம் அறிவித்துள்ள போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பயணத்தைத் திருப்பூர் மாநகர, ஒன்றிய, கிராமங்கள் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை செய்வது எனவும் மற்றும் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கச் சட்ட நடவடிக்கைகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தனிச் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றத் தமிழக அரசைக் கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
நிறைவாக உரையாற்றிய கழகத் தலைவர், கழகத்தின் அடுத்தகட்டச் செயல்பாடுகள் குறித்தும் நாம் செய்ய வேண்டிய பரப்புரைகள் குறித்தும் விரிவாகப் பேசினார். மேலும் கழகத்தின் பொறுப்பாளர்கள் பெயரையும் புதிதாகப் பொறுப்பேற்று இருக்கும் தோழர்களின் பெயர்களையும் அறிவித்தார். நிறைவாக மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது.
மாவட்டத் தலைவர் முகில்ராசு, செயலாளர் நீதிராசன், அமைப்பாளர் சங்கீதா, மாநகரத் தலைவர் தனபால், செயலாளர் மாதவன், அமைப்பாளர் முத்து, திருப்பூர் தெற்கு பகுதி அமைப்பாளர் ராமசாமி, பல்லடம் நகர அமைப்பாளர் கோவிந்தராஜ், பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சண்முகம், மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன், செயலாளர் சிவானந்தம், அமைப்பாளர் கடத்தூர் அய்யப்பன். திருப்பூர் மாநகர அமைப்பாளர் சரஸ்வதி, மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், தாராபுரம் நகர அமைப்பாளர் தாரை செல்வராசு மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர் மடத்துகுளம் சங்கீதா, ருத்ராபாளையம் பகுதி அமைப்பாளர் இராசேந்திரன். தமிழ்நாடு மாணவர் கழக திருப்பூர் மாவட்டச் செயலாளராக கனல்மதி, அமைப்பாளர்களாக ஓவியா, பல்லடம் கௌதம், மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளராக இலக்கியன் ஆகியோர் கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டனர்.
கோவை : கோவை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 21.8.2024 அன்று தமிழ்ப்புலிகள் கட்சி அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. இதில் கழக செயல்பாடுகள் மற்றும் எதிர்காலச் செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் கோவை மாவட்டக் கழகத் தலைவராக மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், மாவட்டச் செயலாளராக சூலூர் பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளராக சூலூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கோவை மாநகரத் தலைவராக நிர்மல் குமார், செயலாளராக வெங்கடேசன், அமைப்பாளராக கிருஷ்ணன், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளராக நவீன், காந்திபுரம் பகுதி அமைப்பாளராக லோகு, பீளமேடு பகுதி அமைப்பாளராக இராஜாமணி, கணபதி பகுதி அமைப்பாளராக சதீஷ், உக்கடம் பகுதி அமைப்பாளராக கண்ணன், வடவள்ளி பகுதி அமைப்பாளராக ஸ்டாலின், சிங்காநல்லூர் பகுதி அமைப்பாளராக இராமகிருஷ்ணன், சூலூர் பகுதி அமைப்பாளராக கார்த்தி, நீலாம்பூர் பகுதி அமைப்பாளராக தங்கராசு, பெரிய நாயக்கன்பாளையம் பகுதி அமைப்பாளராக கணேசன், காரமடை பகுதி அமைப்பாளராக ஜெகதீசு, மேட்டுப்பாளையம் பகுதி அமைப்பாளராக அமுல்ராஜ், அன்னூர் பகுதி அமைப்பாளராக வைத்தீஸ்வரி மற்றும் மனோரஞ்சிதம், கிணத்துக்கடவு ஒன்றிய அமைப்பாளராக இராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை: மதுரை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 22.08.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டச் செயலாளர் மா.பா.மணி அமுதன் வரவேற்புரையாற்றினார்.
கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர் உமாபதி ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
நிறைவாகக் கழகத் தலைவர் கழகத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் தொடரும் ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள், போதைப் பொருட்களுக்கு எதிராக பரப்புரை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்.
மதுரை மாவட்டக் கழகக் காப்பாளர் தளபதி, மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, வாசுகி, கண்ணன் காமாட்சி, அழகர், வேங்கை மாறன், பாரத், பிரகாஷ், மதன், அகில், முருகேசன், மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தோழர் அகில் கழகத்தில் இணைந்து கொண்டார். மணிமேகலை – மா.பா.மணிஅமுதன் இணையரின் குழந்தைக்கு மகிழ் நிலா என்று பெயரைச் சூட்டினார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 23.8.2024 அன்று சேதுபாவாசத்திரம், மரக்காவலசை தோழர் கா. பெரியசாமி அவர்களின் சக்கரவர்த்தி நினைவு பெரியார் இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொருளாளர் திருப்பூர் சு. துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் கழகத் தலைமைக்குழ உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், தஞ்சை மாவட்டக் கழகச் செயலாளர் கு. பாரி, மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் சா. வெங்கடேசன், திருவிடைமருதூர் ஒன்றியச் செயலாளர் கரிகாலன், ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் சிவசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் கவிமணி, பேராவூரணி ஒன்றியத் தலைவர் மருத. உதயகுமார், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் அ.சி.கோவேந்தன், பேராவூரணி நகர அமைப்பாளர் தா. கலைச்செல்வன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய அமைப்பாளர் சுப. ஜெயச்சந்திரன், பகுத்தறிவுப்பாடகர் அ. நாவலரசன், தோழர்கள் சீனி. கண்ணன், பெ. அறிவுச் செல்வன், சோ. பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிறைவாகக் கழகத் தலைவர், கழகத்தின் கடந்தகாலச் செயல்பாடுகள் பற்றியும், செயல்திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
தா. கலைச்செல்வன் நன்றி கூறினார். பெரியசாமியின் தாயார் வீரம்மாள் காமாட்சி அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அம்மையாரின் படத்தினைக் கழகத் தலைவர் திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகக் கொடியை ஏற்றி வைத்து பின்னர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்