தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தாக்களை புதுப்பிக்கும் பணிகளை தோழர்கள் விரைந்து தொடங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். – நிர்வாகி பெரியார் முழக்கம் 26122019 இதழ்
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தாக்களை புதுப்பிக்கும் பணிகளை தோழர்கள் விரைந்து தொடங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். – நிர்வாகி பெரியார் முழக்கம் 26122019 இதழ்
அயோத்திப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி ஜி. இராமகிருட்டிணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிந்தனைச் செல்வன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலரும் பேசினர். அதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். பெரியார் முழக்கம் 26122019 இதழ்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 23ஆம் தேதி நடந்த மாபெரும் பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். தி.மு.க. கூட்டணி கட்சிகளைத் தவிர, இஸ்லாமியர் அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள் பங்கேற்றன. திராவிடர் விடுதலைக் கழகம் பேரணியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் பங்கேற்றது. அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் இரா. உமாபதி, அய்யனார், அன்பு தனசேகர் மற்றும் மயிலை சுகுமார், வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏசுகுமார், ராஜீ, தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை உள்ளிட்ட சென்னை மாவட்டக் கழகத் தோழர் கள் ஏராளமாகப் பங்கேற்றனர். ஈரோட்டிலிருந்து 20க்கும் மேற்பட்ட தோழர்களும் குடியாத்தம் பகுதி, காஞ்சிபுரம் பகுதி கழகத்தினரும் பேரணியில் பங்கேற்றனர். கழகக் கொடிகளுடன் ஒலி பெருக்கி வழியாக கழகத் தோழர்கள்...
“வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில், பாபர் மசூதி தீர்ப்பு ஒரு பார்வை” என்ற தலைப்பில் 14.12.2019 அன்று மாலை 6:30 மணியளவில், சென்னை பிராட்வே பிரகாசம் சாலையிலுள்ள ஹயாத் மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். நிகழ்வில், பேராசிரியர் ஜவாஹிருல்லா (மாநில தலைவர், தமுமுக), பேராசிரியர் அ.கருணானந்தன் (வரலாற்றுத் துறை தலைவர்(ஓய்வு) விவேகானந்தா கல்லூரி, சென்னை), எஸ்.எம். பாக்கர் (மாநில தலைவர், ஐசூகூது), எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம் (மாநில செயலாளர், வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்), செய்யது முஹம்மது புஹாரி (மாநிலத் தலைவர், வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்) ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். பெரியார் முழக்கம் 26122019 இதழ்
திருவள்ளுவர் இலக்கியப் பேரவை மற்றும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில், திண்டுக்கல்லில் அரசின் ஆணையிருந்தும் 20 ஆண்டுகளாகத் திறக்க முடியாமல் முடங்கியிருக்கும் திருவள்ளுவர் சிலையை உடனே நிறுவிட அரசின் ஒப்புதலை வேண்டி, 13.12.2019 அன்று காலை 10 மணியளவில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பெரியார் சரவணன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), கோவை இராமகிருட்டிணன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி) உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26122019 இதழ்
1971ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அசாமில் சட்ட விரோதமாக குடியேறிய வங்க தேசத்தவரை குடிமக்களாக ஏற்க முடியாது என்ற அடிப்படையில் அசாமிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 19 இலட்சம் பேர் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது குடும்ப வாரிசுகள், கார்கில் போரில் போராடி குடியரசுத் தலைவரிடமிருந்து வீரப்பதக்கம் பெற்ற இஸ்லாமியர் குடும்பத்தினரும் சட்ட விரோத குடியேறிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்துக்களும் ஏராளம் உண்டு. இந்த 19 இலட்சம் பேரில் இந்துக்களை மட்டும் மீண்டும் குடிமக்களாக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அனுமதிக்கிறது. 2014ஆம் ஆண்டு வரை அசாமில் வாழ்ந்த இஸ்லாமியர் அல்லாதவருக்கு இந்த உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இது தங்களின் வாழ்வாதாரத்தையும் அசாமியர் என்ற அடையாளத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று அசாமியர்கள் போராடி வருகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாமைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும்...
பள்ளிபாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) இதற்கு முன்பாக மண்டல அளவில் தான் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்து பணியில் அமர்த்தப்பட்டார்கள். இந்தியாவை ஒன்பது மண்டலங்கள் மற்றும் இரண்டு துணை மண்டலமாக பிரித்திருந்தார்கள். அதில் தேர்வு நடக்கும். நமக்கு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு சேர்ந்தது மண்டலமாக இருந்தது. இப்போது அதை மாற்றி ஒரே நாடு கொள்கைப் படி அகில இந்திய தேர்வாக மாற்றி விட்டார்கள். இப்போது இந்திய அளவில் தேர்வுகள் நடைபெறுவதால் கேள்வித்தாளை இரண்டே மொழியில் தான் கொடுக்கிறார்கள். ஒன்று ஆங்கிலம் மற்றொன்று இந்தி. இதில் இந்தி பேசத் தெரிந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் தாய் மொழியில் தேர்வெழுதுவான். நாமெல்லாம் அந்நிய மொழியில் தேர்வெழுதுவோம். ஆங்கிலமும் நமக்கு அந்நிய மொழி தான். மோடி ஆட்சிக்கு வந்த பின்...
பள்ளிப்பாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. இரண்டு செய்திகளை முன் வைத்து தான் இந்த பயணம். ஒன்று எங்களுடைய கல்வி உரிமைகளை பறிக்கிறாய், வேலை வாய்ப்புரிமையை பறிக்கிறாய். வேலை வாய்ப்பு உரிமை என்பது, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் நமக்கு உரிமை வேண்டும் என்பது தான். அப்படித் தான் 2014இல் நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம். அன்பு தனசேகர் (தி.வி.க. தலைமைக் குழு உறுப்பினர்) பல்வேறு தகவல்களை திரட்டிக் கொடுத்தார். அதனடிப்படை யில், பல்வேறு இயக்கங்களை உடனழைத்துக் கொண்டு சாஸ்திரி பவன் எதிரே ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். தமிழ்நாட்டில் இயங்குகிற மத்திய அரசு அலுவலகங்களில், வெளி மாநிலத்து ஆட்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து அந்த போராட்டத்தை நாம் நடத்தினோம். அதைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் இப்போதும் அது...
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை; எதிர்க் கட்சிகள் வதந்திகளைக் கிளப்புகின்றன என்று பா.ஜ.க. வினர் எதிர்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இதே குரலில் பேசுகிறார். இப்போது கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களிடம் அச்சத்தை உருவாக்கியிருக் கிறது. தாங்கள் எதிர்காலத்தில் இரண்டாம் தர குடிமக்களாக்கப் படுவோம் என்று நியாயமாகவே உணருகிறார்கள். காரணம் இந்தச் சட்டத் திருத்தம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ் தான் நாடுகளிலிருந்து இந்தியா வுக்கு வரும் இஸ்லாமியர் களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று கூறுகிறது. இப்படி மத அடிப்படையில் குடிமக்களை தனிமைப் படுத்துவது, அரசியல் சட்டத் துக்கும் மதச் சார்பின்மைக்கும் எதிரானது. எனவே ஒதுக்கப் பட்ட இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று, ஒரு அவசரச் சட்டம் பிறப்பித்தாலே போதும். இதை மோடி அரசு செய்வதற்கு எந்த சட்டரீதியான தடையும் இல்லை. இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; மத நம்பிக்கையற்ற நாத்திகர்களுக்கும் குடி...
2019ஆம் ஆண்டில் திராவிடர் விடுதலைக் கழகம் ஆற்றிய களப்பணிகளை திரும்பிப் பார்க்கிறது. வழக்கமாக கழகத் தோழர்கள் நடத்தும் பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள், தமிழர் திருநாள் விழா நிகழ்ச்சிகள், தெருமுனைக் கூட்டங்களைத் தவிர, ஏனைய நிகழ்வுகள், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளி வந்த பதிவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏடுகளுக்கு சந்தாக்கள் சேர்க்கும் பணிகளில் பல மாவட்டங்களில் தோழர்கள் முனைப்புக் காட்டி செயல்பட்டனர். செயல்படாத மாவட்டங்களும் உண்டு. கழகத்தின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் இதற்காக மாவட்டம் தோறும் கழகப் பொறுப்பாளர்களை சந்தித்து சந்தா சேர்ப்பு இயக்கத்தை விரைவுபடுத்தினர். கழகத்துக்காக சொந்தமாக தலைமைக் கழகம் உருவானது – 2019ஆம் ஆண்டில். இது மிகவும் குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கான தேர்தல் நடந்ததும் 2019ஆம் ஆண்டில்தான். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடிந்தது....
2019ஆம் ஆண்டு கழகத் தோழர்கள் செயல்பாடுகளில் முன்னுரிமை பெற்றிருப்பது கழகத்துக்கு சொந்தமாக தலைமைக் கழகம் ஒன்றை வாங்கியதில் காட்டிய முனைப்பான செயல்பாடுகளாகும். கழகத் தோழர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒவ்வொருவரும் குறைந்தது ரூ.20,000 நிதி திரட்ட வேண்டும் என்று கழக தலைமைக் குழுவால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பெரும்பான்மைத் தோழர்கள் இலக்கை எட்டிக் காட்டினர். கழகத்தின் செயல்பாடுகள் மீது நம்பிக்கையும் கழகத்தின் மீது மதிப்பும் கொண்ட ஆதரவாளர்கள் தாமாகவே முன் வந்து நிதி வழங்கியதோடு, நிதி திரட்டும் இயக்கத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர். இது கழகத்திற்குக் கிடைத்த மிகச் சிறந்த பெருமையாகும். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏடும், ‘நிமிர்வோம்’ மாத இதழும் தடையின்றி வெளி வந்து கொண்டிருப் பதற்குக் காரணம் தோழர்கள் திரட்டிய சந்தாக்கள் தான். பெரியார் முழக்கம் 26122019 இதழ்
ஈழத் தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக் கும் புதிய குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி சட்டத் திருத்த நகல் எரிப்புப் போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஒருங்கிணைப்பில், 12.12.2019 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் எதிரில் (தர்ஹா அருகில்) நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மனிதநேய ஜன நாயகக் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டப் பொறுப்பாளர் குமரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன், தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழகப்...
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததற்கு நீதிக் கேட்டு போராடிய நாகை திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தி, பொய் வழக்குகள் பதிந்து சிறையிலிட்டதைக் கண்டித்து பெரியாரிய உணர் வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப் பாட்டம் 09.12.2019 அன்று மாலை 3 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், சுவர் கட்டிய சிவசுப்ரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவனை தாக்கிய காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவன் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளும் திரும்ப பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி...
அமேசான் கிண்டில் (Amazon Kindle) என்பது மின்னூல்கள் (E-Books) வாசிக்க உதவும் கருவி (Device). கிண்டில் என்பது ஒரு படிப்பான் (Reader). அமேசான் தளத்தில் இக்கருவியை வாங்கலாம். 4000 ரூபாயிலிருந்து 16000+ எனப் பல ரகங்களில் கிடைக்கிறது. எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கிண்டில் கருவிகளுக்கு ஆஃபர் போடுகிறார்கள். கவனித்துக் கொண்டே இருந்தால் வரும்போது வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது கணினியில் கிண்டில் செயலியை (APP) இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொண்டும் அதன்மூலம் நூல்களை வாங்கிப் படிக்கலாம். கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்ற இடங்களில் கிண்டில் ஆப் இலவசமாகக் கிடைக்கும். உங்கள் மொபைலில் கிண்டில் செயலி (Kindle App) டவுன்லோடு செய்து எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம். வாசிக்கும்போது இணைய இணைப்புகூட அவசியமில்லை ஆனால் கிண்டில் கருவிக்கென சில பிரத்யேக மேன்மைகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் – உதாரணம்: கண் கூசாது, கவனம்...
முடிவெய்திய கழகத்தின் பெரியாரியப் பணியாளர் இராவணன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 15.12.2019 அன்று காலை 10 மணியளவில் திண்டுக்கல், தலைமை அஞ்சலகம் அருகில் உள்ள வாழ்க வளமுடன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை மாநில அமைப்புச் செயலாளர் புலேந்திரன் தலைமை தாங்கினார். ஆனந்த் முனி ராசன், மரிய திவாகரன், கி. இரவிச்சந்திரன், கோபி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, பெரியார் நம்பி வரவேற்புரையாற்றினார். இராவணன் படத்தைத் திறந்து கழகத் தலைவர் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மீ.த. பாண்டியன், துரை சம்பத் (த.பெ.தி.க.), பொள்ளாச்சி விஜயராகவன், உள்ளிட்ட அமைப்பு களைச் சேர்ந்த தோழர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக நிகழ்வு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 19122019 இதழ்
மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நவம்பர் 25 அன்று மாலை 4 மணிக்கு தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர்.மீ.த.பாண்டியன்; தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பேரறிவாளன்; தமிழக வாழ்வுரிமை கட்சி பரப்புரைச் செயலாளர் பெரியார் சரவணன்; மகாமுனி – மே 17; குமரன் – புரட்சிகர இளைஞர் முன்னணி; கிட்டு ராசா- தபெதிக; பரிதி -தமிழ் தமிழர் இயக்கம்; மணிபாபா- தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். அன்று மாலை 6 மணிக்கு “ஜாதியை பாதுகாக்கும் சட்ட எரிப்பு நாள்” கருத்தரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர்.மதிமாறன் சிறப்புரையாற்றினார். நிகழ்விற்கு திவிக மதுரை மாவட்ட செயலாளர் மணி அமுதன். மா.பா தலைமை தாங்கினார். மாநகர் தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் – சட்ட கல்லூரி மாணவர்கள் -ஆதித்தமிழர் பேரவை , அகில இந்திய...
மத்திய அரசுத் துறை செயலாளர்களில் 82 பேர்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வெறும் 4 பேர்களே. 20 அய்அய்எம் நிறுவனங்களில் தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர் வெறும் 11 பேர்களே என்கிற அதிர்ச்சிகர தகவல் நாடாளுமன்றத்தில் வெளியாகியுள்ளது. மத்திய அரசுத்துறைகளில் உயர் பதவி களுக்கானப் பணியிடங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனமாகிய அய்அய்எம் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கான பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினர்கள், முசுலீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.சோமநாத்பிரசாத் எழுப்பிய கேள் விக்கு, மத்திய பணியாளர், பொது குறைகளை மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிடுகையில், மத்திய அரசுத் துறைகளில் செயலாளர் பதவிக்கான 82 பணியிடங்களில் நான்கு இடங்களில் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் உள்ளதாக வும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாகிய 20 அய்அய்எம் நிறுவனங்களில்...
மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தமசோதாவுக்கு, நாட்டின் புகழ்பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், வரலாற்று ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வேதியியல் துறைக்கான ‘நோபல் பரிசு’ பெற்ற இந்திய வம்சாவளி தமிழரும், இலண்டன் ‘ராயல் சொசைட்டி’ தலைவருமான வெங்கட் ராமன் ராமகிருஷ்ணனும், குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்துள்ளார். இந்தச் சட்டம் மூலம், ஜெர்மனியில் தேசிய இனவாதத்தைத் தூக்கிப் பிடித்த பாசிஸ்ட் ஹிட்லரின் பாதையில் இந்தியா பயணிப்பதாகவும், இது இந்தியாவுக்கு ஆபத்து என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “நான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நான் இந்தியாவை மிகவும் விரும்புகிறேன். இந்தியா ஒரு சிறந்த சகிப்புத் தன்மையுள்ள இலட்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நான் எப்போதும் நம்புகிறேன். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். நாடு விடுதலையடையும்போது, எந்தவொரு மதத்திற்கும்...
பார்ப்பனர் – திராவிடர் போராட்டம் ரொம்பவும் வளர்ந்துவிட்டது; பார்ப்பனர்களும் துணிந்துவிட்டார்கள்; துணியக் காரணமும் இல்லாமல் இல்லை. இன்று ஆட்சி அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறது. அநேகமாக அவர்கள் ஆதிக்கத்திற்கு இதுவே கடைசி காலமாகவும் இருக்கக் கூடும். இன்று தவறின், நாளை ஆட்சி யார் கைக்குச் செல்லுமோ என்று அஞ்சுகிறார்கள். ஆகவே ஆட்சி தம் ஆதிக்கத்தில் உள்ள போதே நம்மீது பாய்ந்து தம் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். – பெரியார், ‘விடுதலை’ 19.03.1948 இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைத்து வேத பார்ப்பன புரோகிதக் கும்பல் இந்துக்களை அணி திரட்டுகிறது. இதுவே ‘அவாளின்’ நீண்டகால தந்திரம். பார்ப்பனரல்லாத ‘இந்து’க்களை ‘வர்ணம்-ஜாதி’களாக்கி, ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ என்று இழிவு படுத்தும் பார்ப்பனர்கள், தங்களின் சமூக-புரோகித மேலாதிக்கத்தை வெகு ‘இந்து’ மக்களிடம் மறைப்பதற்கு ஓர் எதிரியைக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ‘இஸ்லாமியர்கள்’ பலிகடாவாக்கப்படுகிறார்கள். காஷ்மீரில் 370ஆவது பிரிவை நீக்கி இஸ்லாமியர் களின் சிறப்புரிமையை பறித்தார்கள். அயோத்தியில் 400 ஆண்டுகளுக்கு மேலாக...
30.11.19 அன்று மாலை 6 மணிக்கு திவிக தலைமை அலுவல கத்தில், முடிவெய்திய முழு நேரப் பெரியாரிய தொண்டர் இராவணன் அவர்களின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி திறந்து வைத்தார். தோழர் இராவண னுடனான நட்பு குறித்தும் அவர் பெரியார் கொள்கைக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்தும் தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். இந்த மரணம் நமக்கு என்ன உணர்த்துகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? என்றும் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவரைப் போல் கொள்கையை முன்னெடுத்து செல்வதிலேயே உள்ளது என்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார்கள். மனிதி அமைப்பைச் சார்ந்த செல்வி, இராவணன் குடியிருந்த இல்லத்தின் உரிமையாளர் கவிதா, ஊடகவியலாளர், பாலிமர் ரமேஷ், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி ஆகியோர் உரையாற்றினர். அய்யனார் தலைமை தாங்கினார். பெரியார் முழக்கம் 12122019 இதழ்
முற்போக்கு எண்ணம் கொண்ட, பெரியாரிய கொள்கையுடைய முதுகலைப் பட்டதாரிப் பெண்ணுக்கு, அதே கொள்கைகள் கொண்ட 26-29 வயதும், 160-175 செ.மீ உயரமும் கொண்ட மணமகன் தேவை. மத்திய மாநில அரசுப் பணியில் பதவியில் உள்ள / பயிற்சியில் உள்ளோர் விரும்பத் தக்கவர். சுயவிவரக் குறிப்பு புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: stargalaxy9013@gmail.com கைப்பேசி : 9442301312 (வி.ம்) பெரியார் முழக்கம் 12122019 இதழ்
டிசம்பர் 22 இல் கோவையில் நடக்கவிருந்த நீலச்சட்டைப் பேரணி, உள்ளாட்சித் தேர்தல்களைக் கருதி ஒத்தி வைக்கப்படு கிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும். பெரியார் முழக்கம் 12122019 இதழ்
சென்னை : புரட்சியாளர் டாக்டர்அம்பேத்கர் 63 ஆவது நினைவு நாளான டிசம்பர் 6 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர். அதன் பின் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ மாலை அணிவித்தார். இராயப்பேட்டை, பத்ரி நாராயணன் நினைவு நூலகத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு சைதை அன்பரசன் மாலை அணிவித்தார், கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோவை : கோவை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் வடகோவை, உணவு கிடங்கில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கொள்கை முழக்கங்கள் எழுப்பி மாலை அணிவிக்கப்பட்டது, இராதாகிருஷ்ணன் சாலையில் வாழக்காய் மண்டியில் அம்பேத்கர் அவர்களின் உருவப் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. தோழர்கள் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், நிர்மல் குமார், வெங்கட், லோகு, மாதவன் சங்கர், இயல், விஷ்ணு, பார்த்திபன் ...
7.12.2019 சனிக்கிழமை அன்று பெங்களூர் ‘கற்பி, ஒன்று சேர்’ அமைப்பின் ஏற்பாட்டில், பெங்களூர் சேஷாத்திரிபுரம் ஏ.வி. வரதாச்சாரி நினைவு அரங்கில் வேலூர், அங்கராங்குப்பம், கலா-கோவிந்தன் இணையரின் மகன் சிவக்குமார் – திருவள்ளூர் மாவட்டம் மாலம்மாள்-ஆனந்தன் இணையரின் மகள் அன்னபூரணேசுவரி ஆகியோரின் ஜாதி, சடங்கு, தாலி மறுப்பு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்தார். அன்று காலை 11 மணியளவில் பகுத்தறிவு, ஜாதியொழிப்பு இன்னிசை நிகழ்வோடு நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவை ஹெப்பால் பழங்குடி மக்களின் கலை நிகழ்வு, ‘நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறையிசை நடந்தது. நண்பகல் உணவுக்குப் பின்னர் நாத்திகனின் ‘மந்திரமல்ல! தந்திரமே!’ நிகழ்ச்சி நடந்தது. பிற்பகல் 4.30 மணியளவில் கழகத் தலைவர் தலைமையில் வாழ்க்கை ஒப்பந்த விழா தொடங்கியது. விழாவின் தொடக்க உரையை மைசூர் உரிலிங்கப்பட்டி மடத்தின் அருட்திரு ஞானப் பிரகாச சாமிகள் ஆற்றினார். தனது உரையில்...
சாதி செல்வாக்கு, பண பலம் உள்ளவர்களை காவல் துறை அவ்வளவு எளிதாகக் கைது செய்துவிடாது. அப்படியானவர்கள் மீது வழக்குப் பதிவு செயவதற்கே பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். போராட்டச் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து, மக்கள் கவனம் பெற்ற பிறகு ஏற்படும் அழுத்தம் காரணமாக, வேறு வழியின்றி தொடர்புடையவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்யும் – அதுவும் எளிதில் ஜாமீன், விடுதலை கிடைக்கக்கூடிய சட்டப் பிரிவுகளில். இதுதான் சுதந்திர இந்தியாவில் தொடர்ச்சியான நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது, இப்போது மாணவி பாத்திமா தற்கொலைக்குத் தூண்டப்பட்ட வழக்கிலும் இதுதான் நடந்து வருகிறது. கேரள மாணவி பாத்திமா தனது தற்கொலைக்குக் காரணம் அய்.அய்.டி. பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் என்று குறிப்பு எழுதி வைத்திருந்தும், இதுவரை சுதர்சன் பத்மனாபன் கைது செய்யப்படவிலை. இந்தியாவில் பார்ப்பனர்களை அவ்வளவு எளிதாகக் கைது செய்யவோ, தண்டித்து விடவோ முடியாது. அதிகார மட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து இருக்கும் பார்ப்பனர்கள் அதை அவ்வளவு...
மகாராஷ்டிரா பா.ஜ.க.வுக்குள் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் போராட்டம் தொடங்கி விட்டது. முதல்வராக இருந்த பார்ப்பனர் பட்னாவிசை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க் கொடி உயர்த்தி யுள்ளனர். இது குறித்து ‘தி பிரின்ட்’ ஆங்கில இணைய தள இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை: “பா.ஜ.க. ஏனைய கட்சிகளைப் போன்றது அல்ல; நாங்கள் வேறுபட்டவர்கள் என்று சொல்லிக் கொள்கிறது. அந்தக் கட்சிககுள் தான் இப்போது ‘வேறுபாடுகள்’ தலைதூக்கியிருக்கின்றன. 105 மகாராஷ்டிரா பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் களில் குறைந்தது 15 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வராக இருந்த பட்னாவிசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளதோடு, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைத்துள்ள எம்.வி.டி. கூட்டணியுடன் (மகா விகாஸ் கூட்டணி) பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. மகாராஷ்டிராவின் முன்னாள் பெண் அமைச்சர் பங்கஜ்முண்டே, பா.ஜ.க.விலிருந்து விலகப் போவதாக ஒரு வாரத்துக்கு முன் அறிவித்தார். இவர் மோடி அமைச்சரவையில் அமைச்சராக...
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 8.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமை குழுவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, இணைய தள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈசுவரன், மடத்துக்குளம் மோகன், சூலூர் பன்னீர்செல்வன், அய்யனார், இரா. உமாபதி, பாரி சிவக்குமார், மேட்டூர் சக்தி ஆகியோர் பங்கேற்றனர். கழகத்தின் பரப்புரைத் திட்டங்கள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், கழக அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. டிசம்பர் 28 சனிக்கிழமை சென்னையில் கழகச் செயலவைக் கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. செயலவையில் தோழர்களின் கருத்துகளைக் கேட்டு, செயல்...
மேட்டுப்பாளையம் நடுவூரில் 17 தலித் மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து நீதி கேட்டுப் போராடிய தோழர்கள், பொது மக்கள் மீது காவல்துறை மூர்க்கத்தனமாக தடியடி நடத்தி கைது செய்தது. தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகக் கோவை மாநகர கழகத் தலைவர் நேரு தாசு, திராவிடர் தமிழர் கட்சியைச் சார்ந்த வெண்மணி, வழக்கறிஞர் கார்க்கி உள்ளிட்ட 28 தோழர்கள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 5 நாளுக்குப் பிறகு டிசம்பர் 7 அன்று நாகை திருவள்ளுவன் தவிர மற்ற தோழர்கள் பிணையில் விடுதலையானார்கள். பெரியார் முழக்கம் 12122019 இதழ்
அரசியல் சட்ட எரிப்பு நாளில் காணொளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி தஞ்சை மாநாட்டில் பெரியார் ஜாதி ஒழிப்பைப் பற்றி மிக ஆவேசமாகப் பேசுகிறார். தன்னுடைய தொண்டர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஜாதியை ஒழிப்பதற்கு ஆயிரம் பாப்பனரைக் கொன்றால்தான் முடியும் என்றால் கொல்லத் தயாராக இருக்கிறீர்களா? என்று கேள்வியெழுப்புகிறார். மக்கள் ஆரவாரித்து உடன்பாடான பதிலைக் கொடுக்கிறார்கள். அந்த மாநாட்டில் தான் ஜாதியைப் பாதுகாக்கிற இந்தச் சட்டப் பிரிவுகளை நீக்கவில்லை யென்றால் வருகிற நவம்பர் 26 நாளன்று அரசியல் சட்டத்தில் ஜாதியை பாதுகாக்கும் பிரிவுகளை எரிப்போம் என்று அறிவிக்கிறார். ஏன் நவம்பர்26ஐ அவர் தேர்ந்தெடுத்தார் என்றால், அரசியல் சட்ட வரைவு எழுதப்பட்டு அதை நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தில் நம்முடைய பெரும் மதிப்பிற்குரிய அம்பேத்கர் அவர்களால் முன் வைக்கப்பட்டு அதற்கான ஒப்புதலை கொடுக்குமாறு நாடாளுமன்றத்தைக் கோருகிறார்; 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் தான் அந்த...
டிசம்பர் 2 அன்று மேட்டுப்பாளையம் அருகே தலித் மக்கள் கண்களில்படக் கூடாது என்ற நோக்கில் கட்டப்பட்ட ஜாதிச் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரமான மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியது. சென்னை மாவட்டக் கழக சார்பில் டிசம்பர் 3ஆம் தேதி அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை : திராவிடர் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் மற்றும் கரு. அண்ணாமலை, மயிலைப் பகுதி தோழர்கள் சுகுமார், இராவணன், மனோகர், கன்னியப்பன், எட்வின் பிரபாகரன், திருவான்மியூர் வெங்கடேசன், வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்றனர். தமிழ்த் தேச மக்கள் முன்னணி சார்பில் செந்தில், மே 17 இயக்கத் தோழர்கள் மற்றும் எஸ்.டி.பி.அய். மக்கள்...
நீலம் பண்பாட்டு மய்யம் சார்பில் ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்’ நவம்பர் 26ஆம் தேதி மாலை சென்னை சேத்துப்பட்டு உலக பல்கலைக் கழக சேவை மய்யத்தில் நடந்தது. ‘பிளாக் பாய்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இயக்குனர் ரஞ்சித் அறிமுக உரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரசியலமைப்பு நகலை அறிமுகம் செய்து, புரட்சியாளர் அம்பேத்கர் நிகழ்த்திய ஆழமான உரையை சுட்டிக் காட்டிப் பேசினார். அம்பேத்கர் மொழி வழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு எழுதிய நூலில் வடநாடு பிற்போக்கானது; தென்னாடு முற்போக்கானது. இந்தி பேசும் மாநிலங்கள் தென்னகத்தை அடக்கியாளுவதற்கேற்ப மாநிலப் பிரிவினை நடத்தியிருக்கிறது. இந்தியாவுக்கு தென்னாட்டில் ஹைதராபாத்திலும் ஒரு தலைநகரம் உருவாக்க வேண்டும் என்று எழுதியிருப்பதை சுட்டிக்காட்டினார். நிகழ்வில் ஆம்ஸ்ட்ராங் (பகுஜன் சமாஜ் கட்சி), சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), திருமுருகன் காந்தி (மே 17), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஜக்கையன் (ஆதி...
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சேலம் கொளத்தூர் புலியூர் பிரிவில் உள்ள பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 26.11.2019 அன்று மாலை 5 மணிக்கு மாவீரர் நாள், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவீரர் நாள் பாடல் மாலை 6 மணிக்கு ஒலிக்க, மெழுகுவர்த்தி ஏந்தி தோழர்கள் நினைவு கூர்ந்தனர். சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு மாவீரர் நாள் உரையாற்றினார். புலிகள் பஞ்சர் கடை சுப்பிரமணி நன்றி கூறினார். கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என 1000 ற்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 05122019 இதழ்
தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் 65ஆம் பிறந்த நாள் நவம்பர் 26ஆம் தேதி பகல் 11 மணியளவில் அம்பத்தூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் நடிகர் சத்திய ராஜ், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர். ‘கற்க’ அறக்கட்டளை சார்பில் கழகப் பொறுப்பாளர் அண்ணாமலை பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகப் பை, நோட்டுகளை வழங்கினார். மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் உமாபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 05122019 இதழ்
திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவுகளை எரித்த நாள் பொதுக் கூட்டம் திருப்பூர், 15 வேலம்பாளையம் பகுதியில் 26.11.2019 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சங்கீதா வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக முடிவெய்திய தோழர் இராவணன் படத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தார். இராவணனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுக் கூட்டத்திற்கு இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மேட்டூர் டி.கே.ஆர். கலைக் குழுவினர் பகுத்தறிவுப் பாடல்கள் பாடினர். அவர்களுடன் பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோரும் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினார்கள். அதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்ட நிகழ்வில், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மடத்துக்குளம் மோகன் ஆகியோரும், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தோழர்கள் கனல்மதி, பிரசாந்த், தேன்மொழி, சந்தோஷ் ஆகியோரும் சட்ட எரிப்பு நாளைப் பற்றி பேசினார்கள். தொடர்ந்து தமிழ்நாடு சாக்கிய அருந்ததிய...
அரசியல் சட்ட எரிப்பு நாளில் காணொளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிக்கு சமூக மேம்பாட்டிற்கு காரணமாக இருந்த தந்தை பெரியார் எடுத்த போராட்டங்களில் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏறத்தாழ நாம் அறிய உலகில் எந்த நாட்டிலும் , அந்த நாட்டின் போராட்டங்களில் அரசியல் சட்டம் எரித்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. அப்படி ஒரு போராட்டத்தை பெரியார் முன்னெடுத்தார். அதற்கு என்ன காரணம் என்பதையும் அதைநோக்கி பெரியார் நகர்வதற்கான சூழலையும் சற்று நாம் பார்த்து விடுவது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்தியாவில் பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த பொழுது ஈரோடு அளவில் இருந்த பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு வந்து அதன் தலைவராக பணியாற்றிய ஆறாண்டு காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் போராடு பவர்களைப் பற்றி ஒரு கருத்து உருவாகிறது. இந்திய விடுதலை போராட்டம் என்பதே...
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், ஷிப்பிங் கார்ப்பரேசன், கன்டெய்னர் கார்ப்பரேசன், தெரி நீர்மின் உற்பத்தி கார்ப்பரேசன், வடகிழக்கு மின்சக்தி கார்ப்பரேசன் ஆகியவற்றைத் தனியாருக்கு விற்க முடிவெடுத் துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். இவையனைத்தும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள். மத்திய அரசு எதிர் கொள்ளும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப் பதற்காகத் தான் இந்த முடிவு என்கிறார் அமைச்சர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை பொதுத்துறை நிறுவனங்கள். அவற்றைத் தனியாருக்கு விற்பது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமே பாதிக்கப்படுவதில் போய்த்தான் முடியும். வளர்ச்சியின் அடித்தளம் பொதுவாக கச்சா எண்ணெய், சுத்திகரிப்பு, எரிவாயு, உருக்கு, மின்சாரம், நிலக்கரி, சிமெண்ட், உரம் ஆகிய 8 தொ ழில்களை பொருளாதாரத்தின் முதன்மையான தொழில்கள் என்று அரசு அடையாளப்படுத்துகிறது. இதன் பொருள், ஒட்டுமொத்தத் தொழில் வளர்ச்சிக்கு இவை அடிப்படையானவை என்பதே. இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள்தான் கடந்த 72 ஆண்டுகளில் நமது தேசம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு அடித்தளமாக...
குடியரசுத் தலைவர், ஆளுநர், பிரதமர் பதவிகளுக்கான அதிகாரங்களை அப்பட்டமாக முறைகேடாகப் பயன்படுத்தி முகத்தில் கரியைப் பூசிக் கொண்டிருக்கிறது, நடுவண் ஆட்சி. மகாராஷ்டிராவில் சிவசேனையுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் சிவசேனையிடம் நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு முதல்வர் பதவியைத் தன் வசமே வைத்துக் கொள்ள பா.ஜ.க. செய்த முயற்சியை சிவசேனை ஏற்கவில்லை. பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்தார்கள். சிவசேனை தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடந்தன. திடீரென்று தேசியவாத காங்கிரசிலிருந்த சரத்பவார் அண்ணன் மகன் அஜித் பவாருடன் பேரம் பேசி அவர் மூலமாக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க. ஆட்சி அமைக்க குறுக்கு வழியில் முயற்சித்தது. சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி பதவி ஏற்க தயாரான நிலையில் நள்ளிரவில் குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளைத் தட்டி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி...
திருச்சி : சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைச் சென்று சிறையிலேயே உயிர்நீத்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் நினைவிடத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பும், அண்மையில் முடிவெய்திய இராவணனுக்கு வீரவணக்க நிகழ்வும் 26.11.2019 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகக் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் சீனி. விடுதலையரசு பங்கேற்று வீர வணக்க உரை நிகழ்த்தினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் புதியவன் உறுதி மொழி வாசிக்க தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர். இறுதியாக மனோகர் நன்றி கூறினார். நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய பண்பாட்டு...
இலங்கை அதிபராகியுள்ள ‘போர்க் குற்றவாளி’ கோத்தபய ராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது இலங்கை அரசின் இராணுவ செயலாளராக செயல்பட்டவர் கோத்தபய ராஜபக்சே. அவர் இப்போது சிங்கள பெரும்பான்மையினரின் ஓட்டுகளைப் பெற்று அதிபராகி விட்டார். இனப் படுகொலை நடந்தபோது அதிபராக இருந்த ராஜபக்சே பிரதமர் பதவிக்கு வந்து விட்டார். ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே சகோதரர்கள் மீது போர்க் குற்ற விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று உலகம் முழுதும் தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசின் வரவேற்பையேற்று கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். இந்தியா அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் ஜந்தர் மந்தர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். சென்னையில் நவம்பர் 29...
பெரியாரியலையே முழு நேரப் பணியாக ஏற்றுத் தொண்டாற்றிய பெரியாரியல் போராளி இராவணன் (45) முடிவெய்தி விட்டார். திருப்பூரிலிருந்து அவரது பெரியாரியல் பயணம் தொடங்கியது. தமிழ்நாடு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்று தொடர்ந்து செயல்பட்டவர். மதுரைக்கு அருகே உள்ள அதிகாரப்பட்டி என்ற கிராமத்தைச் சார்ந்த இராவணன், திருப்பூருக்குப் பணிக்கு வந்தபோது, ‘பெரியாரிஸ்டாக’ மாறினார். 15 ஆண்டுகாலம் தனது குடும்ப உறவுகளைத் துண்டித்துக் கொண்டு இயக்கத்தோடு இணைந்து முழு நேர ஊழியராக பெரியாரியக்கங்களில் களப்பணியாற்றினார். 2007ஆம் ஆண்டு தஞ்சையில் அன்றைய பெரியார் திராவிடர் கழகம், ஜாதி ஒழிப்பு மாநாடு-பேரணி ஒன்றை நடத்தி சட்ட எரிப்பில் சிறைச் சென்ற போராளிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தது. அப்போது திருப்பூரில் தனது வேலையை உதறிவிட்டு, முழு நேரப் பணியாற்ற கழகத்துக்கு வந்து மாநாட்டு அலுவலகப் பொறுப்பேற்று செயல்பட்டார். அது முதல் எந்தப் பயனையும் எதிர்பார்க்காது முழு நேரப் பணியாற்றி வந்தார்....
பச்சை என்றால் எப்படிப் பசுமையையும், உழவையும் குறிக்குமோ… வெள்ளை என்றால் எப்படித் தூய்மையையும், அமைதியையும் வெளிப்படுத்துமோ, கருப்பு என்றால் எப்படி அடக்குமுறைகளின் எதிர்ப்பை அடையாளப் படுத்துமோ…. சிவப்பு என்றால் எப்படி எழுச்சியையும் புரட்சியையும் புலப்படுத்துமோ… அப்படி நீலம் என்றால் சாதிய ஒடுக்குமுறைகளால் புறந்தள்ளப்பட்ட வாழ்க்கையையும், அச்சாதிய அடக்குமுறைகளை மறுத்த எழுச்சியையும் அடையாளப்படுத்துகிறது… காணாமை, தீண்டாமை, புறந்தள்ளல், ஒதுக்கி வைத்தல் அடக்குமுறை செய்தல், கல்வி வேலை வாய்ப்புகளை மறுத்தல், நட்பு, காதல் ஈடுபாடுகளைத் தடுப்பதோடு பிரித்தல், கொலையும் செய்தல் – என்றெல்லாம் இன்றைய அளவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எத்தனை எத்தனை வடிவங்கள்… இத்தனையையும் மீறி படிப்படியாகத் தன்னை, தன் அறிவை, தன் வாழ்வை அடையாளப்படுத்திக் கொள்ளவும், மீட்டுக் கொள்ளவும் வேண்டிய நிலையில் இருக்கின்றனர், சாதியால் புறந்தள்ளப்பட்ட மக்கள்… பொதுப்பட மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளைக் காட்டிலும் சாதியால் புறந்தள்ளப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் அதிகம்… இன்றைய பார்ப்பனிய இந்திய அரசும் பன்னாட்டு மூலதன...
கடந்த 06.11.2019 அன்று முடிவெய்திய திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப் பாளர் தோழர் அகிலன் தாயார் முனியம்மாள் அவர்களின் இல்லத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்று குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில் ராசு, அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாதவன், அய்யப்பன், பல்லடம் சண்முகம், உள்ளிட்ட தோழர்கள் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 28112019 இதழ்
அய்.அய்.டி. நிறுவனங்களில் நடந்தேறி வரும் பார்ப்பனியக் கொடூரங்கள் குறித்து திராவிடர் இயக்கங்களும், முற்போக்கு சக்திகளும் தொடர்ச்சியாகப் பேசியும், போராடியும் வந்துள்ளனர். ஆனால், அவற்றின்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முந்தைய காங்கிரஸ் அரசும், தற்போதைய பாஜக அரசும் துணிந்ததில்லை. அய்.அய்.டி. என்றில்லை, நடுவண் அரசு நிறுவனங்கள், கோயில்கள், நீதிமன்றங்களில் பார்ப்பனிய மேலாண்மையை மறைமுகமாக அங்கீகரித்தே நடுவண் அரசுகள் சுதந்திர காலம் தொட்டு இயங்கி வந்திருக் கின்றன. பார்ப்பனரல்லாதார் மீது பார்ப்பனியம் தொடுக்கும் கொடுமைகளின் வரலாற்றுத் தொடர்ச்சியாகத் தான் ஃபாத்திமாவின் தற்கொலையையும் பார்க்க வேண்டியிருக்கிறது. நந்தன், வள்ளலாரைக் கொன்றுவிட்டு, ‘ஜோதியில் அய்க்கியமானார்கள்’ என்று பொய்யுரைத்த பார்ப்பனியம்தான், இன்று மாணவர்களின் தற்கொலையை ‘பாடத் திட்டங்களின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என நாக்கூசாமல் கூறுகிறது. கடந்த 2019, நவம்பர் 9ஆம் தேதி சென்னை அய்.அய்.டி.யில் விடுதியில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு சுதர்சன் பத்மநாபன் என்ற...
இரா. மூர்த்தி; வயது : 50; மணமாகாதவர்; பத்தாம் வகுப்பு; மாத வருமானம் – ரூ. 20,000/-. பனியன் நிறுவனத்தில் தொழிலாளி; சொந்த வீடு; தனிநபர்; பெரியார் பணியில் ஆர்வமுடையவர். விரும்புவது : 40 வயதுக்கு மேற்பட்ட இணையர். குழந்தைகள் இருப்பது விரும்பத் தக்கது. இயக்கப் பணிக்கு குழந்தைகளுடன் வர ஈடுபாடு உடையவராக இருத்தல் நலம். தொடர்புக்கு : மூர்த்தி – 9843604153 (வி-எம்.) பெரியார் முழக்கம் 28112019 இதழ்
‘காவி’ப் புனிதம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளுவருக்கும் ‘காவி’ உடை போர்த்தி ‘இந்து மதக் காவலர்’ என்கின்றன, சங்பரிவாரங்கள். இந்து மதம், பார்ப்பனரல்லாத மக்களை வேத அதிகாரத்துக்கு அடிமைப்படுத்தி ‘சூத்திரா’ என்ற இழிவைத் திணித்து, ‘கடவுள் – மதம்’ என்ற நம்பிக்கை மாயைக்குள் நமது மக்களை மூழ்கச் செய்திருக்கிறது. உள்ளே மறைந்து கிடப்பது பார்ப்பனியம் என்ற நச்சுப் பாம்பு. இந்த உண்மைகளைப் பேசினால் இந்து மத எதிர்ப்பாளர்கள் என்று ஓலமிடுகிறார்கள். வீதிகளில் இறங்கி இவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிறார், எச். ராஜா என்ற பார்ப்பனர். ‘காவிப் புனிதம்’ பேசும் கூட்டங்கள், அந்தப் புனிதங்களுக்குள் பதுங்கிக் கொண் டிருக்கும் மோசடிக்காரர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? நித்தியானந்தா காவி உடை ‘ஆன்மீக’க்காரர். இளம் பெண்களைக் கடத்தி ஆசிரமத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருக்கிறார். புகார் தந்த இளம் பெண்களின் பெற்றோர், எச். ராஜா ‘குல’ வம்சமான பார்ப்பனர்கள் தான். குஜராத் காவல்துறை, காவி நித்தியானந்தா...
மொழிக்கு மதம், ஜாதி அடையாளங்கள் கிடையாது. அது மக்களுக்கானது. ஆனால் மொழியையும் பார்ப்பனர்கள் விட்டு வைக்கவில்லை. இந்திய மொழிகளுக்கு எல்லாம் ‘தாய்மொழி’ கடவுளுக்கான மொழி என்று இவர்கள் கூறும் ‘சமஸ்கிருதம்’, மக்களுக்கான மொழியல்ல. அது ‘தேவபாஷை’. எனவே “பிராமணர்”களுக்கான மொழி என்று வர்ணாஸ்ரமத் திமிர் பேசுகிறார்கள். உ.பி.யில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத் துறையில் ஃபெரோஸ்கான் என்ற இஸ்லாமியர் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இளம் வயது முதலே சமஸ்கிருதம் படித்து, அந்த மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர். உரிய கல்வித் தகுதி அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வானார். ஆனால் பல்கலைக்கழகப் பார்ப்பன மாணவர்கள் பார்ப்பன பேராசிரியர்கள் இஸ்லாமியர் சமஸ்கிருதத் துறையில் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். இரண்டு வாரம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. உ.பி. முதல்வர் காவி உடை சாமியார் ஆதித்யநாத் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான வினய் பாண்டியா, போராடிய...
மருத்துவப் பட்டமேற்படிப்பிற்கான அகில இந்திய NEET PG 2020ஆம் ஆண்டிற்கான தேர்வில், அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இல்லை… நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்டமேற் படிப்பிற்கான இடங்களுக்கு (MD, MS) அகில இந்திய நீட் பீஜி தேர்வு ஜனவரி மாதம் மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில் மொத்தமுள்ள 30,774 இடங்களில் 50% அதாவது, 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இடஒதுக்கீடு முறையில் 50 சதவீதம் (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவீதம் (3,462 இடங்கள்) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், 27 சதவீதம் (4,155 இடங்கள்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்க வேண்டும். ஆனால், இந்த அறிவிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு OBC மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும்,...
பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் அயோத்திப் பிரச் சினையில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 21.11.2019 அன்று மாலை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி, ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), தெஹலான் பாகவி (எஸ்.டி.பி.அய்.), தனியரசு (சட்டமன்ற உறுப்பினர்) உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் உரையாற்றினர். அயோத்திப் பிரச்சினையில் சட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, நம்பிக்கை அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, என்றும் மறு சீராய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திருமாவளவன் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள், கழக மாவட்ட செயலாளர் இரா....
சமூக அமைதியைக் குலைக்கும் நோக்கத்தோடு இரு பிரிவினருக்கு மிடையே மோதலையும் பதற்றத்தையும் உருவாக்கிடும் கருத்துகளைத் தெரிவித்த பார்ப்பனர்கள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில் 22.11.2019 அன்று நடந்த சென்னை செய்தியாளர் சந்திப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டார். புகார்கள் தரப்பட்டு வழக்குப் பதிவு செய்த பிறகும் கைது செய்யப்படாததோடு, புகார் மனுவைப் பெற்றுக் கொண்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுப்பதையும் பேட்டியில் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். பேட்டி விவரம்: “கேரளாவில் நடந்த பிராமணர் உலக மாநாட்டில் பேசிய வெங்கடகிருஷ்ணன் என்ற பேராசிரியர் ஜாதி ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தியதோடு ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை நாயுடன் ஒப்பிட்டும் பேசினார். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நாகை திருவள்ளுவன் நேரில் காவல்துறையிடம் புகார் அளித்தார். 153ஏ, 153பி, 5.5ஏ, 5.5பி உள்ளிட்ட பிரிவுகளில் முதல் தகவல்...
2000ஆம் ஆண்டில் சென்னை அய்.அய்.டி. யில் நடந்த ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட வேண்டும். பழங்குடி-தலித் இணையர்களுக்குப் பிறந்த சுஜி என்ற பழங்குடி பெண், 12ஆம் வகுப்பில் ஆந்திராவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று, மாநில அரசின் விருது பெற்றவர். மாதம் ரூ.17,500 உதவித் தொகை பெற்று, 4 ஆண்டு பொறியியல் படிப்பை முடிக்க முடியும். ஆந்திராவிலே தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் சேர்ந்து படிக்க அழைப்பு விடுத்தும்கூட, அந்தப் பெண், சென்னை அய்.அய்.டி.யிலேயே படிக்க விரும்பினார். (பொதுவாக அய்.அய்.டி.களில் மாணவர்கள் சேர்க்கை தான் அதிகம் இருக்கும். மாணவிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்க்கப்படுகிறார்கள். இதிலும்கூட மனுதர்மக் கொள்கைதான்) தலித் மாணவர் என்றால் அவர்களுக்காக ஓராண்டு கூடுதல் படிப்பு. அதற்குப் பெயர் ‘தயாரிப்புப் பயிற்சி’. மாநிலத்திலே முதலிடம் பெற்ற மாணவியாக இருந்தாலும்கூட தலித் என்றால் அவருக்கும் தனிப் பயிற்சி கட்டாயம். இயற்பியல் (ஞாலளiஉள) மிகச் சிறந்த அறிவு பெற்றவர் சுஜி....