மதுரையில் சிறப்புடன் நடந்த சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்
மதுரை மாவட்ட திவிக சார்பில் ஜாதியை பாதுகாக்கும் சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம் 29.11.2021 அன்று மாலை 5 மணியளவில் காஸ்மோபாலிட்டன் உணவகத்தில் மடத்துக்குளம் மோகன் நினைவு அரங்கில் நடைபெற்றது. வில்லாபுரம் பகுதி செயலாளர் செந்தில்நாதன் வரவேற்புரை யாற்றினார். மாவட்ட கழகக் காப்பாளர் தளபதி, மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி, மாநகர் தலைவர் திலீபன் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மா.பா. மணி அமுதன் தலைமை தாங்கினார்.
‘பிற்படுத்தப்பட்டோர் உரிமையும் திராவிடர் இயக்கமும்’ என்ற தலைப்பில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன். பாண்டியன் உரையாற்றினார்.
‘தமிழ் தேசிய இலக்கும் தடுமாற்றங்களும்’ என்ற தலைப்பில் தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவு எரிப்பு போராட்டங்களையும் பெரியார் தொண்டர்களின் தியாகத்தையும் விளக்கி கழக தலைவர் கொளத்தூர் மணி விரிவாக கருத்துரையாற்றினார்.
புலிப்பட்டி பொறுப்பாளர் கருப்பையா நன்றி கூறினார்.
பல்வேறு தோழமை அமைப்பு தோழர்களும், புதிய இளைஞர்களும், வழக்கறிஞர்கள் சங்கங்களைச் சார்ந்த தோழர்களும் தன்னார்வத்தோடு இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 16122021 இதழ்