யாவையும் நிறுத்திக் கொள் காவியே! – பெ. கிருஷ்ணமூர்த்தி
வெறிமிகு வேகத்தில் பயணிக்காத வாகனங்கள். தனிமனிதத் துதியும், வெறுப்புமற்ற , சமூகநீதி வேண்டித் தாகமுடன் களம்காணும் வேட்கை பொதிந்தப் பயணம் ! மகிழுந்தும், பெருவாகனமும்… தும்பை வெள்ளையும்… பட்டை மோதிரமும்… அத்தர் நெடியும்… பட்டைச் சங்கிலி சகிதம் மதுக்கடையை மொய்க்காதக் கூட்டம்.! நோட்டுகளை எண்ணுகிறதும், எண்ணுகிற நோட்டுக்காய் எச்சில் விழுங்கிக் கையேந்தாதக் கரங்கள்.! மனமெல்லாம் தாடிக்கிழவனை நிரப்பி… பசியென்னும் உணர்வையே பறையிசையில் நிறைத்து… நரம்பு நாணை சுயமரியாதைப் பாட்டால் மீட்டும் கூட்டம்! எம் கரமேந்தும் கருங்கொடி … சூரியனையும் மிஞ்சும் சுடரொளி! எங்கள் கருந்தேகத்தைக் கிழித்திட்டால் சிவப்பு நட்சத்திரமாய் மினுங்கும் புது ஒளி! வரலாறைச் சுமந்த மூளை. அடக்குமுறை எதிர்க்கும் தேகம். சமூகநீதிக்காய் நடந்து… நடந்து உரமேறியக் கால்கள். தீமைக்கெதிரான சொற்கள். தீர்வு கிட்டும்வரை துஞ்சாதக் கண்கள். இவையே எங்கள் அடையாளம். போதையின் ஆக்கத்தால் ஆட்டமோ.. மாநாடுத் திடலில் குழாய் விளக்குடைக்கும் நாட்டமோயின்றி… அரைக்கல் அளவே இடமாயினும்… நெஞ்சுநிமிர்த்தி அமர்ந்து… பகலவனின்...