நெமிலியில் மக்கள் மன்றம் நடத்திய அம்பேத்கர் நினைவு நாள்

மக்கள் மன்றம் சார்பில் காஞ்சி மாவட்டம் நெமிலியில் அம்பேத்கர் நினைவு நாள் கூட்டம் டிசம்பர் 17ஆம் தேதி மக்கள் மன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது.

காவிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக சமத்துவம்-சகோதரத்துவம் காண உறுதி ஏற்போம் என்கிற முழக்கத்தோடு நிகழ்வு நடைபெற்றது.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அம்பேத்கரின் இந்து எதிர்ப்பு, இராமாயண எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்புகளையும் ஜாதி – ஜாதியமைப்பு – ஜாதி ஆணவப் படுகொலை குறித்தும் உரையாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நிறைவுரையாற்றினார்.

மக்கள் மன்றத்தில் பத்தாண்டுகளாக இணைந்துள்ள தோழர் உமாவின் தந்தையார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது அம்பேத்கர் – பெரியார் சிலைகளுக்கு பறை முழக்கத்துடன் மாலைகள் அணிவிக்கப் பட்டன.

பெரியார் முழக்கம் 10012019 இதழ்

You may also like...