குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்
குடந்தையில்: ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கும்பகோணம் மீன் மார்க்கெட் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மண்டல மாநாடு 16.5.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு. இளங்கோவன் தலைமையில் சா.வெங்கடேசன் (ஒன்றிய அமைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. கு. பாரி (தஞ்சை மாவட்ட செயலாளர், தி.வி.க.), தெ. மகேசு (மாவட்டச் செயலாளர்), திருச்சி நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்தவரும், திராவிடர் கழகத் தோழருமான பவுண்டரீகபுரம் முருகேசன், பொறியாளர் திருநாவுக்கரசு (உழவர் இயக்கம்), சி.த. திருவேங்கடம் (மாவட்ட அமைப்பாளர்),
சா. விவேகானந்தன் (மண்டல செயலாளர் வி.சி.க.) உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர்.
முன்னதாக, பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி மற்றும் தி.க. தோழர்கள் குணா, சங்கர், கழகத் தலைவர்-பொதுச் செயலாளருக்கு துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர். கரிகாலன் நன்றி கூறினார். தொடர்ந்து 20 தெருமுனைக் கூட்டங்கள் ஒருவாரகாலம் நடை பெற்றன. இறுதியாக, கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்கள். திவிக ஒன்றிய அமைப்பாளர் மா.கரிகாலன் நன்றி கூறினார்.
கீழப்பாவூரில்: திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் மண்டல மாநாடு 14.05.2022 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் சவுந்திரபாண்டியனார் திடலில் நடைபெற்றது.
மாநாட்டின் துவக்கமாக பள்ளத்தூர் நாவலரசு, யாழினி ஆகியோர் பகுத்தறிவு பாடல்கள் பாடினர். மாநாட்டிற்கு தென்காசி தி.வி.க மாவட்ட தலைவர் அ. மாசிலாமணி தலைமை வகித்தார்.
தோழர்கள் சா. மாரிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர், தூ-டி. தி.வி.க. – கடையம் சங்கர், மாவட்ட பொருளாளர் தென்காசி தி.வி.க. – சி. ஆ. காசிராசன், மாவட்டச் செயலாளர், நெல்லை தி.வி.க – செட்டியூர் சேர்மத்துரை, கீழப்பாவூர் ஒன்றிய தி.வி.க. செயலாளர் – அருணாபேரி ச. சுப்பையா கீழப்பாவூர் ஒன்றிய தி.வி.க. தலைவர் – சா.த.பிரபாகரன், தூ-டி. தி.வி.க. – ஆழ்வை உதயக்குமார், கபாலிபாறை சுரேஷ், ஆரியாங்காவூர் செ.தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி தி.வி.க மாவட்ட செயலாளர் பொ.பெ.சு.அன்பரசு வரவேற்புரை யாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாநாட்டு சிறப்புரையாற்றினார்கள்.
முன்னதாக கழகப் பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் – கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி – கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி – நெல்லை தி.வி.க.மாவட்டத் தலைவர் பா. பால்வண்ணன் – தலைமை குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் – தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் தூடி கா.கண்ணதாசன், திருப்பூர் மகிழவன் – தூடி தி.வி.க. மாவட்ட துணைத் தலைவர் ச.கா. பாலசுப்பிர மணியன் – தென்காசி தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர் ச.தமிழ்ச் செல்வன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக, தோழர்கள் கூ.சு. இராமசந்திரன், கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் – பொன். அறிவழகன், கீழப்பாவூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் – மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், மற்றும் ஆஊஞஐ (ரு) பொதுச் செயலாளர் சுலீப் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தூடி தி.வி.க மாவட்ட பொருளாளர் கோ. சந்திரசேகர் நன்றியுரையாற்றினார்.
மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள், சிறப்புரையாற்றி யவர்கள் மற்றும் மாநாட்டுப் பணியாற்றிய கழகத் தோழர்கள் ஆகியோருக்கு கழக வெளியீடான புத்தகங்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழக புத்தகங்கள் 6,700 ரூபாய்க்கு விற்பனை ஆகின.
மண்டல மாநாட்டை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சிறப்பாக நடத்தி திரளாக கலந்து கொண்டனர்.
குடியாத்தத்தில்: திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு மண்டலப் பொதுக் கூட்டம் 21.05.22 சனி மாலை 5 மணிக்கு வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் வேலூர் கவிஞர் மு.மன்னார் நினைவு மேடையில் நடைபெற்றது.
வேலூர் காஞ்சிபுரம் ராணிப் பேட்டை திருப்பத்தூர் மாவட்டங் களில் நடைபெற்ற தெருமுனை பரப்புரைகளின் நிறைவாக இம் மண்டல பொதுக் கூட்டம் நடைபெற்றது. தெருவிளக்கு கலைக் குழுவினரின் பறை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து மதுரை சித்திரைசேனன்-ரத்னா இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி, மருத்துவர் அனிதா இரவுப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, சுப்பிரமணி கலைக்குழுவினரின் சிலம் பாட்டம் ஆகியவை நடைபெற்றன.
மண்டல பொதுக்கூட்டத்திற்கு திவிக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கழக செயலாளர் இரா.பா. சிவா தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபன் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்டக் கழகத் தலைவர் ரவிபாரதி வரவேற்புரை யாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் நீல.சந்திரகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் சிவ.செல்லபாண்டியன், தமிழ்நாடு எஸ்.சி./எஸ்.டி. அரசு அலுவலர் நலச்சங்கத்தின் மாநில பொருளாளர் ஆதி முத்துகுமரன், முரசொலி தமிழ் மன்றத்தின் நிறுவனர் செம்மங்குப்பம் கோபி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக திவிக வேலூர் மாவட்டப் பொருளாளர் சதீஸ் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 26052022 இதழ்