பயணத்துக்கு பக்தர்கள் இன உணர்வாளர்கள் பேராதரவு
பரப்புரைப் பயணத்தில் ‘நீட்’ பாதிப்புகளையும் தமிழ்நாட்டின் மத்திய அரசுத் துறைகளில் வடநாட்டார் குவிக்கப்படுவதையும் மக்கள் பேராதரவுடன் வரவேற்கிறார்கள். துண்டறிக்கைகளை, நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.
மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் சென்னைக் குழு பரப்புரை செய்தபோது நெற்றி முழுதும் விபூதி-குங்குமம் அணிந்த தோழர், ஆர்வத்துடன் சைக்கிளில் வந்து இறங்கி கழக வெளியீடுகளை வாங்கி தோழர்களின் கரங்களைப் பிடித்து பாராட்டினார்.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகையில் பரப்புரை முடிந்து தோழர்கள் பயணப்பட்ட பிறகு, ஒரு தோழர் மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பின் தொடர்ந்து வந்து வாகனத்தை நிறுத்தி ரூ.500 நன்கொடை வழங்கினார்.
பெரியார் முழக்கம் 23082018 இதழ்