காஞ்சி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர்!
காஞ்சிபுரம் : பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! ஜனநாயக இந்தியாவைக் கட்டமைப்போம்! என்ற கொள்கை முழக்கத்தோடு காஞ்சி மக்கள் மன்றத்தின் பேரணி – பொதுக்கூட்டம் – கலை நிகழ்ச்சிகள் 09.03.2024 அன்று காஞ்சி பெரியார் நினைவுத் தூண் அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவிபாரதி, பெங்களூர் சித்தார்த்தன், அருண்குமார், எட்வின் பிரபாகரன், சூர்யா, மயிலை குமார், அன்னூர் விஷ்ணு, உதயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 15032024 இதழ்