விஜயேந்திரன்-எச். ராஜா பார்ப்பனத் திமிர் காஞ்சி சங்கர மடம் முற்றுகை

சமஸ்கிருத விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த காஞ்சி விஜயேந்திரன், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த எச். ராஜா மன்னிப்புக் கேட்கக் கோரி தமிழகம் முழுதும் கழகத்தினரும், இன உணர்வாளர்களும் முற்றுகை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

சேலம்: சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் 25.1.18 மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தைக் கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக் கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந் திரன், எச்.ராஜா செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

மேட்டூர் : 26.01.18 அன்று மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழக சார்பில்  விஜயேந்திரன், எச்.ராஜா ஆகியோரின் திமிர் போக்கைக் கண்டித்தும் வள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் மேட்டூர் தந்தை பெரியார் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் கழக மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார் தலைமையில், மேட்டூர் நகரத் தலைவர் செ.மார்ட்டின், கொளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் க.ஈசுவரன் முன்னிலையில் தோழர்கள் அ.சக்திவேல் (செயற்குழு உறுப்பினர்), வைகோ. முருகன் (ம.தி.மு.க.), மேட்டூர் சி.கோவிந்தராசு, நங்கவள்ளி அன்பு, டைகர் பாலன், கி.முல்லைவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், காவேரிகிராஸ், மேட்டூர் ஆர்.எஸ். நங்கவள்ளி ஆகிய பகுதிகளிலிருந்து  80 தோழர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் : தமிழை அவமதித்த விஜயேந்திரனை கண்டித்து, நாமக்கல் மாவட்டம் சார்பில் விஜயேந்திரன் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் பள்ளி பாளையத்தில், கடந்த சனவரி 25 ஆம் தேதி, மாலை 5 மணிக்கு  மாவட்டப் பொருளாளர் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது. மேலும், மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் வைரவேல் போன்ற மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் போன்ற பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், உருவ பொம்மை எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட சஜீனா, மீனா, மணிமேகலை உள்ளிட்ட பெண் தோழர்கள் உட்பட 15 தோழர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஈரோடு தெற்கு மாவட்டம் மற்றும் தமிழ்நாடு மாணவர்க் கழகம்: தமிழை அவமதித்த விஜயேந் திரன் மற்றும் எச். ராஜாவைக் கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்டம் மற்றும் தமிழ்நாடு மாணவர்க் கழகம் சார்பாக சனவரி 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு, ஈரோடு வீரப்பன் சத்திர  பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சௌந்தர் தமிழ்நாடு மாணவர்க் கழகம் மற்றும் ஈரோடு திராவிடர் விடுதலைக் கழக தெற்கு மாவட்ட அமைப்பாளர் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கண்ணன் (சட்ட பஞ்சாயத்து இயக்கம்), தமிழ் இன்பன் (மாநில ஒருங்கிணைப்பாளர், விடுதலை வேங்கைகள் கட்சி), சண்முகப்பிரியன் (ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் திவிக), முத்துப்பாண்டி (நாமக்கல் மாவட்டப் பொருளாளர் திவிக) ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும், ஈரோடு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மற்றும் தமிழ்நாடு மாணவர்க் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சி சங்கர மடத்துக்கு எதிரே : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த தோழர்கள், மக்கள் மன்றத்தைச் சார்ந்த தோழர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளைச் சார்ந்த தோழர்கள் ஒருங்கிணைந்து 25.01.2018 காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் பெரியார் சிலை முன்பு, சங்கர மடத்துக்கு எதிரே விஜயேந்திர சரஸ்வதியைக் கண்டித்து, தமிழையும், தமிழர்களையும் அவமதித்ததற்காக விஜயேந்திர சரஸ்வதி மற்றும்

எச். ராஜா ஆகிய இருவரும் திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முழக்கத்தோடு, காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டத்தில் தோழர்கள் ஈடுபட்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு திருநீலகண்டன் திருமண மண்டபத்தில் அடைக்கப் பட்டனர்.

குமரி மாவட்டம் :  திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் சார்பாக 27-01-2018,சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மார்த்தாண்டம், காந்தி மைதானத்தில் வைத்து  மதவெறியைத் தூண்டுகிற வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற எச்.இராஜாவையும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரனைக் கண்டித்து  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வே.சதா தலைமைத் தாங்கினார். ம.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் அ.ஜெயராஜ் முன்னிலை வகித்தார். பெரியார் தொழிலாளர் கழக மாவட்டத் தலைவர் நீதிஅரசர் வரவேற்புரை யாற்றினார்.

மாவட்டச் செயலாளர் தமிழ் மதி  கண்டன உரையாக தமிழகத்தின் அசாதரண சூழ்நிலையைப் பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் வன்முறையைத் தூண்டி கலவரம் ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கின்றனர் என்று உரை நிகழ்த்தினார். மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த கேரளாபுரம் முருகன் (மாநிலத் துணைத் தலைவர், நி.மீ.இ), மேசியா (பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர்), சத்தியதாஸ் (நி.மீ.இ.குமரி மே.மா.செயலாளர்) வழக்கறிஞர். சிபு,கேரளா பகுத்தறிவாளர் சங்க தலைவர் தனுவச்சப்புரம் சுகுமாறன், அறிவுக் களஞ்சியம் செபக்குமார், கிறித்து தாஸ், பிரான்சீஸ் சேவியர், ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட   தமிழரசன் நன்றியுரைக் கூறி முடிவுற்றது. கூட்டத்தில் தோழர்கள் சூசையப்பா, சி.இளங்கோ, ஜெயன், சேகர், சுந்தர மணி, கேரளா பகுத்தறிவாளர்கள் கலந்துக் கொண்டு எச்.இராஜாவையும், விஜயேந்திரனையும் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

மதுரை : தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய விஜயேந்திரன் மற்றும் எச்.ராஜா திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி 27.01.2018 அன்று மதுரையில் சங்கர மடத்தை இழுத்து மூடும் போராட்டத்திற்க்கு திருவள்ளுவர் சிலையில் இருந்து ஊர்வலமாக செல்ல முயன்ற தோழர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது விஜயேந்திரன் உருவ படங்களை தோழர்கள் எரித்தனர்.

1

பெரியார் முழக்கம் 02022018 இதழ்

You may also like...