காஞ்சி மாவட்டத்தில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

6x4_A

1604535_852574221486942_8275927353400449904_n 10534565_853068508104180_2962386807530051899_n 12042610_852901221454242_2085607431950979301_n 12049125_852901314787566_7420709809359812171_n 12049514_1093512204007381_1456660469361341847_n 12106801_852901281454236_8756863021231527494_n

ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? நமது இளைய தலைமுறையின் கவனத்திற்க்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம்.

தமிழர்களாகிய நாம்,தாழ்த்தபட்ட ஜாதிகளாக, பிற்படுத்தபட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன்,முப்பாட்டன், காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம்.
பார்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள்.அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது.உழைப்பு ,அடிமை வேலை ,குல தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமூதாயம் விதித்த காறாரான கட்டளை.

ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படி தகர்த்தோம். ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும்,அம்பேத்கரும் போராடிப் பெற்று தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளை பெற்றதால் தகர்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவதில் காமராசர் ஆட்சியில் தொடங்கி தமிழகத்தில் தொடர்ந்தது. அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின. ‘ஜாதி’ யை காட்டி, ‘படிக்ககூடாத ஜாதி’;  ‘உழைக்க வேண்டிய ஜாதி’ என்றார்கள். அத்தகைய ஜாதி தடைகளை, அதே ஜாதி அடிப்படையில் கன்டறிந்து உரிமைகளை மீட்க வந்தது தான் இட ஒதுக்கீடு. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேக்கலாமா என்று கேட்பவர்கள் உண்டு. ஆம்; ஜாதியால் மறுக்கபட்ட உரிமைகளை மீட்டு, ஜாதி சமத்துவத்தைத் கொண்டு வருவதே இட ஒதுக்கீடு என்று நெஞ்சு நிமிர்த்து சொல்வோம்.

இப்போது சமூக நீதியின் ஊடாக ஜாதியை கடந்து செல்ல நாம் முற்படுகிறோம். ஆனால், ஜாதி வெறி மீண்டும் நம்மை பாட்டன், முப்பாட்டன் காலத்துக்கு பின்னோக்கி இழுக்கிறது. இளைஞர்களே! காலம் காலமாய் – நம்மை அடிமைபடுத்தி வந்த ஜாதியும் – ஜாதியைமைப்பும் நமது தலைமுறைக்கு வேண்டவே வேண்டாம் என்று உரக்க சொல்லுங்கள்; ஏன்?

* நாம் எந்த ஜாதியில் இருக்க வேண்டும் என்று நாம் தீர்மானிப்பது இல்லை. நீ இந்த ஜாதிக்காரர்களாகவே வாழ வேண்டும் நம் மீது தினித்து விட்டார்கள்.
* எந்த ஜாதிகாரர்களானாலும், எல்லோருக்கும் அடையாளம் ஒன்று தான். அது மனிதர்களுக்கான அடையாளம். ஜாதிக்கொரு மனித அடையாளம் இல்லை.
* ஒவ்வொரு ஜாதிகளுக்கும் தனித்தனி இரத்தம் ஒடுவது இல்லை. உலகில் எல்லா மனிதர்களின் உடல்களிலும் ஏ, பி, ஏபி, ஓ/ பாசிட்டிவ், நெகட்டிவ் என, 8 வகை இரத்தத்தில் ஏதோ ஒன்றுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் ஒரு செட்டியாருக்கும் – செட்டியார் இரத்தம் வேண்டுமென்றோ, அய்யங்காருக்கு – அய்யாங்கர் இரத்தம் வேண்டும் என்றோ கேட்கிறார்களா? இல்லை. ஒரு ஜாதிக்காரனின் உடல் வேறு ஜாதிகாரனின் ‘குருதி’ யை ஏற்கிறது. ஆம் இரத்தத்திற்க்கு ஜாதி இல்லை.

* உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதில் தமிழகம் தான் முதலிடம். இது நமக்கு ஒரு பெருமைதான். மூளை சாவு அடைந்தவர் களின் உறுப்புகள் – இருதயம், சிறுநீரகம், கல்லீரல், கண் போன்றவை பழுதடைந்து உயிருக்கு போராடுகிறவர்களுக்குப் பொருத்தப்படுகின்றன. இந்த உறுப்புகளுக்கு ஜாதி பார்க்கப்படுகிறதா? அல்லது, உயிர் பிழைக்க போராடி கொண்டுருக்கும் நோயாளிகளோ உறவினர்களோ சொந்த ஜாதிகாரர் உறுப்பு தான் வேண்டும் என்று கேட்கிறார்களா? இல்லயே. சிகிச்சை தரும் மருத்துவர்களும் நோய்க்குதான் சிகிச்சை தருகிறார்கள்.ஜாதிக்கொரு சிகிச்சை தருவதில்லை.

ஆனால், இளைஞர்கள் ஜாதி கடந்து ஒருவரையொவர் விரும்பி, திருமணம் செய்ய முன் வரும்போது மட்டும் ஜாதி வெறியை காட்டி ஏன் தடுக்கிறார்கள்? அதுவும் தலித் இளைஞர்கள் என்றால் தலையை வெட்டி தன்டவாளத்தில் வீசுகிறார்களே,ஏன்? பெற்ற மகனையே கதறக் கதறக் கொடூரமாக பெற்ற தகப்பனே கொன்று குவிக்கிறானே,ஏன் இந்த கொலை வெறி?

குடிமக்களின் வாழும் இடங்களில், தேனீர் கடைகளிலும், சுடுகாடுகளிலும், வழிபாடு இடங்களிலும் அனைவருக்கும் சம உரிமைகளை மறுப்பது ஏன்? இதற்க்கு வித்திட்டது யார்?
மனிதர்களை பிரித்து சூத்திரர், பஞ்சமர் எனறு இழிவுக்குள்ளாக்கியது #மனு_சாஸ்திரம். இந்த மேல்ஜாதி, கீழ்ஜாதி அமைப்பை கடவுளே உருவாக்கினார் என்றார்கள் பார்பனர்கள். புனித நூலாக போற்றபடுகிற #பகவத்கீதை யில் கிருஷ்ண பகவான் ‘நான்கு வர்ணங்களை நான் தான் படைத்தேன்’ என்கிறான்.( #சதுர்வர்ணம்_மயா_சிருஷ்டம்) #சம்பூகன் என்னும் #சூத்திரன், #பிராமனன் வழியாக கடவுளை நேரடியாக வணங்கியது குற்றம் என்று கூறி சம்பூகன் தலையை வெட்டினான் #ராமன்.அது தான் நமது குலஜாதி என்கிறது ராமாயணம். #ஏகலைவன் என்ற கீழ்ஜாதி காரன் வில்வித்தையில் கை தேர்ந்தவனாக மாறியபோது, அந்த உரிமை உன் ஜாதிக்கு இல்லை என்று கூறி அவனது கட்டை விரலை வெட்டி குருதட்சனை தருமாரு கேட்டு பெற்றான், வித்தையை கற்று தராத பார்பன குரு #துரோணாச்சாரி. உடல் உறுப்பை வெட்டி தருமாறு எந்த மனிதனாவது கேட்பானா? அதுவும் கட்டை விரலை தானாமாக தந்து விட்டால் வில்லை விட முடியுமா? இது தான் மகாபாரதம் வழியாக நமக்குசொல்லபட்ட ஜாதி தர்மம்.

இன்று சம்பூகன் வதையோ, ஏகலைவன் சிதைப்போ நடக்க முடியாது என்பது உண்மை தான்.ஆனால் தர்மபுரி இளவரசன் களும், திருசெங்கோடு கோகுல்ராஜ் களும் வதைப்புக்கும், சிதைப்புக்கும் உள்ளாகிறார்களே! மனு சாஸ்திரத்தை காட்டி பார்பனர் தொடங்கி வைத்த இந்த ‘ஜாதியத்தை’ நாம் அனுமதிக்கலாமா? இந்த அநீதிக்ளுக்கு எதிராக பொங்கி எழ வேண்டாமா?

2014 இல் மட்டும் தமிழகத்தில் ஜாதி வெறிக்கு 72 தலித்துகள் கொல்ல பட்டுள்ளார்கள். (20.8.15 இந்து) தமிழகம் வெட்கி தலைகுனிய வேண்டாமா?.

அன்று நம்மை ஜாதி சிறைக்குள்ளே அடைத்தார்கள்.இன்று ஜாதி சங்க தலைவர்கள்,தங்கள் சுயநலனுக்காக ஊதிவளர்க்கும் ஜாதி வெறியால் தம் தலைவர்களின் சிலையை கூட கூண்டில் அடைத்து விட்டார்கள்.அதோடு மட்டுமல்ல, கலவரத்தை தூண்டி விட்டு தம் ஜாதிகாரர்களையும் சிறைக்குள் அனுப்புகிறார்கள். ஆனால் உறுதியாக சொல்கிறோம் ஓர் ஜாதியை சேர்ந்த அனைவருமே அந்த ஜாதித் தலைவர்களின் இந்த வன்முறைகளை ஏற்பதில்லை; ஜாதித் கலவரத்தை வெறுப்பவர்கள், சமூக ஒற்றுமையை நேசிப்பார்கள்.
ஜாதியை மறுப்பவர்கள் என்று ஒவ்வொரு ஜாதியிலும் ஏராளமானோர் உண்டு.

இப்படி, ஜாதி வெறியை தூண்டிவிடும் சுயநல் ஜாதித் தலைவர்களை நோக்கி எழுப்ப வேண்டிய கேள்விகள் இருக்கின்றன.

*பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் பல லட்சம் இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளில் பதிவு செய்துள்ள தாழ்த்தபட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் 86 லட்சம். ( இது தமிழக சட்ட மன்றத்தில் தந்த தகவல்) வேலை கிடைக்காமல் நமது இளைஞர்கள் வீதியில் நிற்க காரணம் என்ன?

* பொதுத் துறை நிறுவனங்கள் ஒழிந்து, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் கார்ப்ரேட் தொழில் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்கள் படிபடியாக ஒழிவதால் அங்கே தாழ்த்தப்பட்டோருக்கு இருந்த வேலை வாய்ப்பை பறி கொடுத்து விட்டோம். எனவே தான் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் வேலை செய்யும் சட்டம் வர வேண்டும் என்று வலியுறுத்திகிறோம். இது நியாயமா? இல்லையா?

*இலாப வெறியே இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கம். நமது அரசு இலவசமாக அல்லது குறைந்த விலையில் நிலம் தருகிறது. ஏராளமான வரிச் சலுகைகள் வழங்கபடுகின்றன. இவர்களின் உற்பத்தி பொருள்களையும் நாமே விலை கொடுத்து வாங்குகிறோம். இந்த நிலையில் வேலையின்றி தவிக்கும் நமது இளைஞர்களுக்கு இங்கே வேலை வாய்ப்பை ஏன் உறுதி செய்ய கூடாது? அதற்கு ஏன் சட்டமியற்ற கூடாது? இது நியாயமா? இல்லையா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2004 ஆம் ஆண்டு பதவியேற்ற போது, கார்ப்பரேட் நிறுவனங்களில், தனியார்துறையில் இட ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை அறிவித்தது. ஆனால், கார்ப்பரேட் பெருமுதலாளிகள் எதிர்த்தார்கள். அதனால் திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். இதை தட்டி கேட்க நாதியில்லை. எந்த கட்சியும் குரல் கொடுக்க வில்லை. ஜாதிப் பெருமமைக்காக்க, கழுத்தை அறுக்க, கலவரம் செய்ய துடிக்கும் எந்த ஜாதி சங்க தலைவராவது இதை கேட்டார்களா?

*பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தி சாதனை செய்த எம்.ஜி.ஆர் தனது ஆட்சியில் தமிழ்நாட்டில் பெரும் தொழில் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு உரிமைக்காக திட்டம் தீட்டினார்  ஆனால், அப்போது அவரது ஆட்சி கவிழ்க்கபட்டது. அதற்கு பிறகு எந்த அட்சியும் கவலைபட வில்லை கருநாடகத்தில், மகாராஷ்டிராவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் அம்மாநில அரசு இடஒதுக்கீடு சட்டங்களைக் கொன்டுவந்துள்ளன. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் பலவற்றிலும் தொழில் நிறுவனங்களில் பல்கலைக்கழகங்களில் சிறுப்பான்மை மக்களான கருப்பர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு உறுதி செய்யபட்டுள்ளன. அதற்கு பெயர் உறுதியாக்க செயல்பாடு.

*பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு இருந்தும் கூட, இப்போது மத்திய அரசு பதவிகளில் பிறபடுத்தபட்டோர் 7 சதவீதம் தான். மத்திய அமைசகத்தில் துறை செயலாளர்களில் ஒரு தாழ்த்தபட்டோரோ ஒரு பிற்படுத்தபட்டோரோ இல்லை.அதிகார மய்யங்கள் அனைத்திலும் பார்பனர், உயர்ஜாதியினர் தான்.
இடஒதுக்கீட்டில் படித்து,நல்ல மதிப்பெற்றும் உயர்கல்வி வணிகமயமாகிவிட்டதால் படிப்பதற்க்கு பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். நமது இளைஞர்கள்.

எந்த ஜாதி தலைவர்கள் இந்த உரிமைக்கு குரல் கொடுத்தார்கள்? போராடினார்களா? ஜாதிகளை எதிர்க்கும் நாங்கள் தான் பிற்படுத்தபட்ட ஜாதி தலைவர்களின் ஜாதி வெறியை கண்டிக்கும் நாங்கள் தான், பிற்படுத்தப்பட்டவர்களின் சமூக நீதிகாக குரல் கொடுகிறோம். போராடுகிறோம்.
ஆதலினால்.

#எங்கள்_தலைமுறைக்கு_ஜாதி_வேண்டாம்!

#இளைய_தலைமுறைக்கு_வேலை_வேண்டும்!

என்ற முழக்கத்தோடு காஞ்சி மாவட்டத்தின் சார்பில் 2 நாட்கள் பிரச்சாரப் பயணம் அக்டோபர் 24 மற்றும் 25 தேதிகளில் மாவட்டத் தலைவர் செங்குட்டுவன் தலைமையில், செயலாளர் தினேசுகுமார் மற்றும் அமைப்பாளர் தெள்ளமிழ்து முன்னிலையில் நடந்தது

24.10.2014 காலை 10.30 மணியளவில் மறைமலைநகரில் தலைமை நிலையச் செயலாளர் நிகழ்ச்சியை துவக்கி வைக்க, சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி தொடக்கவுரையோடு பரப்பரை பயணம் நடந்தது

தோழர் அருள்தாஸ் ஜாதி ஒழிப்பு மற்றும் பகுத்தறிவு பாடல்களை பாட, தோழர் உமாபதி அவர்கள் பறையோடு இசைக் கூட்ட, அனைத்து மக்களும் ஆர்வமோடு வந்து குவிந்தனர். மேடவாக்கம் இரவி அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியில் சாமியார்களின் தில்லுமுல்லுகளை எடுத்துரைக்க மக்கள் ஆர்வமுடன் கேட்டு விழிப்புணர்வு கொண்டனர். தோழர் இராமர் அவர்கள் ஜாதி தோற்றம், இழிவு மற்றும் ஜாதி ஒழிப்பின் அவசியத்தை ஆதாரத்தோடு எடுத்து வைத்து உரை நிகழ்த்தினார்.

அதன் பின் சிங்கபெருமாள் கோயில், செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகத்தில் பிரச்சாரப் பயணம் சிறப்பாக நடந்தது. இந்த பிரச்சாரப் பயணத்தில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தோழர்கள் இராவணன், அருண், பிரபாகர், அசுரன், இயேசு மற்றம் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தோழர்கள் பெரியார் வெங்கட், ஆனந்த பெரியார், முருகன், சாமிதுரை ஆகியோரோடு தோழர்கள் நாராயணன், விஜய்குமார் கலந்துகொண்டு மக்களிடையே துண்டறிக்கையை விநியோகித்து பிரச்சாரம் செய்தனர். நிகழ்ச்சியில் கழக வெளியீட்டு புத்தகங்களை தோழர் அசுரன் விற்பனை செய்தார்

அனைவரும் இரவு செங்கல்பட்டு நகரில் தங்கி மறுநாள் 25.10.2015 காலை 10 மணியளவில் திருக்கழுக்குன்றத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர், அடுத்து திருப்போரூர், கேளம்பாக்கம் மற்றும் கண்டிகையிலும் நடைபெற்றது ஒவ்வொரு ஊரிலும் 2 முதல் 3 மணி நேரத்திற்கு குறையாமல் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது

பொதுமக்களின் பங்களிப்பு

சிங்கபெருமாள் கோயிலில் பிரச்சாரம் செய்ய முனையும் போது பிரச்சார வண்டியின் ஜெனரேட்டர் சரிவர இயங்காததால் ஒலிபெறுக்கி உபயோகப்படுத்த முடியாத சூழல் எழுந்த போது, அருகில் இருந்த கடைக்காரர் தன் கடையில் இருந்து மின்சாரம் எடுத்து பிரச்சாரம் செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தினார்

திருக்கழுக்குன்றத்தில் நமது பிரச்சார வீச்சை தாங்கிக் கொள்ள முடியாத சாதியவாதிகள் வந்து இன்னும் எவ்வளவு நேரம் ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் செய்துகொண்டேயிருப்பீர்கள் சீக்கிரம் முடியுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தோழர்கள் பயணத்திட்டத்தை எடுத்துரைத்து அவருக்கும் துண்டறிக்கை கொடுத்து அனுப்பினார்கள்.

கேளம்பாக்கத்தில் நமது பிரச்சாரம் மற்றும் தோழர் உமாபதியின் பகுத்தறிவு கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு பேஷன் சாய்ஸ் டிரஸ் என்ற கடையில் இருந்து வந்து பாராட்டை தெரிவித்து கருஞ்சட்டையை அன்பளிப்பாக தந்து ஊக்கப்படுத்தினர்.

அடுத்த கட்ட பிரச்சாரப் பயணம் விரைவில் வேறு பகுதிகளுக்கு மேற்கொள்ளப்படும்

செய்தி : ஆதனூர் விஜய்

பெரியார் முழக்கம் 29102015 இதழ்

You may also like...