‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்

  • மகாபாரத காலத்திலேயே சோதனைக் குழாய் குழந்தை பிறப்பு முறை வந்து விட்டது என்றால் பிறகு அது ஏன் நடைமுறையில் இல்லை? வெளி நாட்டுக்காரர்கள் இந்த அறிவியல் முறையை கண்டுபிடிக்கும் வரை, ‘இந்தப் புராண அறிவியல்’ எந்தப் புற்றுக்குள் பதுங்கிக் கிடந்தது?
  • சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு-பெண்-ஆண் விந்துக்களை பரிசோதிக்கும் சோதனைச் சாலைகள் இருந்தனவா?
  • ‘ஸ்டெம் செல்’ அறிவியல் புராண காலத்திலேயே இருந்தால் அந்த ‘ஸ்டெம்செல்’ மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதா? அதற்கான மருத்துவர்கள் இருந்தார்களா?
  • தசரதன் மனைவிக்கு குழந்தை இல்லாததால் அசுவமேத யாகம் நடத்தி ‘குதிரை’யுடன் தசரதன் மனைவி உறவு கொண்டு இராமன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறதே? அப்போது ஏன் ‘சோதனைக் குழாய்’ முறை – இராமன் பிறப்புக்குப் பயன்படுத்தவில்லை?
  • அலுமினியம் இரப்பர் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு தான் விமானக் கண்டுபிடிப்பே வந்தது? இராவணன் போர் விமானங்களைப் பயன்படுத்தினான் என்றால் – இரப்பர், அலுமினியம் இல்லாமலே விமானம் வந்து விட்டதா?
  • இராம – இராவண யுத்தம் விமானப் போரா? அப்படிப்பட்ட குறிப்பு இராமாயணத்தில் ஏதும் இல்லாமல் போனது ஏன்? இராமாயண யுத்தம், விமானப் படைப் போராக நடந்தது என்றால், ‘இராமன்’ ஏன் அனுமார்களை வைத்து பாலம் கட்ட வேண்டும்? ‘இராமன் பாலம்’ என்று நீங்கள் சாதிப்பது பொய் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?
  • எந்த ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பும் – கண்டுபிடிப்புக்குப் பிறகு அடுத்தக்கட்ட வளர்ச்சி நோக்கி விரிவாகுமே தவிர, அது எப்படி முடங்கிப் போய் நிற்கும்?

போலி அறிவியல்வாதிகளே? பதில் உண்டா?

பெரியார் முழக்கம் 10012019 இதழ்

You may also like...