கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

சென்னையில் : டாக்டர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாளான 14.04.2019 காலை 9 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழகத் தோழர்கள் ஜாதி, மத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் கழகத்  தோழர்கள் ராஜீ, சங்கீதா, அம்பிகா, பூர்ணிமா ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.

திருப்பூரில் :  திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வாக 14.04.2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழகப் பொரு ளாளர் துரைசாமி சிலைக்கு  மாலை  அணிவித்தார். கவிஞர் கனல் மதி ஜாதி ஒழிப்பு உறுதி மொழி கூற தொடர்ந்து தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன், கழக பொறுப்பாளர்கள் சங்கீதா, தனபால், ராமசாமி, மாதவன், கனல் மதி, கதிர் முகிலன், முத்துலட்சுமி, பரிமளராசன் உள்ளிட்ட 25 பேர் கலந்து கொண்டனர். பெரியார் பிஞ்சுகள் முத்தமிழ், யாழினி ஆகியோர் பிறந்த நாளும் இந்நிகழ்வின் ஊடே கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

கோவையில் :  கோவையில் புரட்சியாளர் அம்பேத்கரின் 128ஆவது பிறந்த நாளில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் இட்டு மரியாதை செலுத்தினர். இதில் தோழர்கள் நேரு தாசு, வெங்கட், கிருஷ்ணன், சிவலிங்கம், நிர்மல், சுரேஷ், ரஞ்சித், ஜின்னா மச்சு, மாதவன் சங்கர் முற்போக்கு வழக்கறிஞர்கள் தோழர்கள் ரமேஷ், ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டனர்.

மதுரையில் : திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மணி அமுதன் தலைமையில் மே 17 இயக்கம்  – நாணல் நண்பர்கள் -அம்பேத்கர் எழுச்சி இயக்க தோழர்கள் இணைந்து 1442019 அன்று காலை பெரியார் சிலையிலிருந்து பேரணியாகச் சென்று அவுட் போஸ்ட் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு ஜாதி ஒழிப்பு உறுதி மொழிகளை முன்னெடுத்தனர்.

மயிலாடுதுறையில் : மயிலாடுதுறை யில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை இயக்கம், மக்கள் அரசு கட்சி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து ஜாதிக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.

காஞ்சிபுரத்தில் : புரட்சியாளர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கூடுவாஞ்சேரியில் உள்ள சட்ட மேதை அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டு பாசிசத்தை ஒழித்து சனாதனத்தை வேரறுக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 18042019 இதழ்

You may also like...