காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் வண்டலூர் ‘தலைநகர் தமிழ்ச் சங்க அரங்கத்தில்’ 30.8.2015 ஞாயிறு பிற்பகல் 5 மணியளவில் நடந்தது. சு.செங்குட்டுவன், கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். செ.க. தெள்ளமிழ்து வரவேற்புரையாற்ற, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார்.
மேடவாக்கம் இரவிக் குமார், கூடுவாஞ்சேரி பன்னீர்செல்வம்,குகன், செங்கல்பட்டு சரவணன், சு. செங்குட்டுவன், தினேசுகுமார் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர்.
“பகவத் கீதையில் ‘பெண்களை’ இழிவுபடுத்தும் சுலோகங்களையும்,‘வர்ணா°ரமத்தை’ நியாயப்படுத்தும் சுலோகங்களையும் தீயிட்டு எரிக்கும்போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றும், “ராமலீலாவுக்கு எதிர்ப்பாக ‘ராமன்’உருவத்தை எரிக்கும் ‘இராவணலீலா’ நடத்த வேண்டும்” என்றும் தோழர்கள்கருத்து தெரிவித்தனர்.
3 நாள்கள் காஞ்சி மாவட்டத்தில் பரப்புரைப் பயணம் நடத்துவதாக தினேசுகுமார் தெரிவித்தார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில், “தோழர்கள் கூறிய போராட்டங்களை திடீர் என நடத்துவதில் பயனில்லை. இது குறித்து மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தில் நடத்தியதுபோல் மக்களிடையே தொடர்ந்து பரப்புரை இயக்கங்களை நடத்தி, இறுதிக்கட்டமாக போராட்டம் நடத்த வேண்டும்” என்று விளக்கமளித்து, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்.

பெரியார் முழக்கம் 03092015 இதழ்

IMG_7312 IMG_7313 IMG_7319 IMG_7323 IMG_7328

You may also like...

Leave a Reply