தூத்துக்குடி படுகொலை-வேல்முருகன் கைதைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்
மேட்டூரில் : தூத்துக் குடி படுகொலைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் 23.5.2018 அன்று மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்த ராசு தலைமை தாங் கினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் அப்துல்கபூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பண்ணன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கோ. சூரியக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், நாம் தமிழர்க் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, கழகத் தோழர் மா.சுந்தர் ஆகியோரின் கண்டன உரைகளைத் தொடர்ந்து இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார். குமரேசன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தோழர்களும் பொறுப்பாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
காஞ்சியில் : திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் பாலாறு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைந்து தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்தும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கைதினைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் 31.5.2018 மாலை 5 மணிக்கு காஞ்சி பெரியார் தூண் அருகே நடைபெற்றது. ரவி பாரதி திவிக தலைமையில் மு.டில்லி பாபு (பாலாறு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்) வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தினேஷ், செங்குட்டுவன், ஏழுமலை முன்னிலை வகித்தனர்.
கண்டன உரையாற்றியவர்கள் காஞ்சி அமுதன் (அமைப்பாளர் தமிழக எழுச்சி இயக்கம்), செந்தமிழ் குமரன் (அமைப்பு செயலாளர் தமிழ்த்தேச மக்கள் கட்சி), தீனன் (மாநில செயலாளர், தமிழக வாழ்வுரிமை கட்சி), சாஜகான் (காஞ்சி மாவட்ட தலைவர், தமுமுக), துரை அருண் (திவிக, வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றம்), பாசறை செல்வராஜ் (நாடாளுமன்ற தொகுதி செயலாளர் விசிக), மகேஷ் (காஞ்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மதிமுக), உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர் திவிக), கொண்டல் (மே17 இயக்கம்), தஞ்சை தமிழன் (மக்கள் மன்றம்), ஆ.மோகன் (பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம்), தாண்டவ மூர்த்தி (தன்னாட்சி தமிழகம்), வெற்றித் தமிழன் (பாலாறு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்), கழகத் தோழர் ராமஜெயம் நன்றியுரை கூறினார்.
பெரியார் முழக்கம் 07062018 இதழ்