அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

திருப்பூர் : மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது.

கழக பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் கனல் மதி வாசிப்பில் கழகத் தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்களால் ஏற்கப்பட்டது. நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகி யோரின் பிறந்த நாள் அவ்விடத் திலேயே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநில அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர் கழக தேன்மொழி, இணைய தள பொறுப்பாளர் விஜயகுமார், மாநகர அமைப்பாளர் ராமசாமி, பரிமள ராஜன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

விருதுநகர் :  புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாளை முன்னிட்டு 14.04.2018 சனிக்கிழமை காலை விருதுநகர் மாவட்டத்திலுள்ள வடமலைக்குறிச்சி யில் அம்பேத்கர் படத்திற்கு ஆசிரியர் செயக்குமார் தலைமையில் மரியாதை செலுத்தி  பேசி முடித்தவுடன் சத்தி ரெட்டியா பட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு  சாதி ஒழிப்பு, மத மாய்ப்பு முழக்கங் களுடன்  மாலை அணிவித்தோம். திவிக, திக, திமுக, காங்கிரஸ், ஆதித் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சென்னை : டாக்டர்.அம்பேத்கர் பிறந்த நாளான்று (14.04.2018) காலை 8 மணிக்கு சேத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் உருவச்சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்பு, அம்பேத்கர் மணிமண்ட பம், மயிலாப்பூர், இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் உருவச்சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து, முழக்கங்களோடு மரியாதை செலுத்தப் பட்டது. கழகத் தோழர்கள் பலரும் வந்திருந்து மரியாதை செலுத்தினர்.

நாமக்கல் : ஏப்ரல் 14, காலை 9 மணிக்கு நாமக்கல் மாவட்டம்  திருச் செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல் உட்பட நகர பொருப் பாளர்கள்  மற்றும் நகர தோழர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை : திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி விக்கப்பட்டு மரியாதை செலுத்தப் பட்டது. மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி ஒழிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில்  தமிழ்த் தேச மக்கள் முன்னணி,

திவிக, தபெதிக, நாணல் நண்பர்கள், குறிஞ்சியர் விடுதலை இயக்கம், இளந்தமிழகம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.

காஞ்சிபுரம், கோவை, சேலம், விழுப்புரம் : திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காஞ்சிபுரம், கோவை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் 14.04.2018 அன்று காலை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கழகப் பொறுப்பாளர்கள், தோழர் களால் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பெரியார் முழக்கம் 19042018 இதழ்

You may also like...