வன்மவாதிகளுக்குப் பாடம் எடுத்த மாரி செல்வராஜ்!
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் இந்த ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜிற்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. பெரியார் மீது வன்மக் கணைகளை வீசும் கூட்டத்துக்கு அப்போது தக்க பதிலடி கொடுத்த மாரி செல்வராஜின் பேச்சு இணையத்தில் கவனம் பெற்றது. அவரது பேச்சில் இருந்து. “திருமணத்திற்கு என் இணையர் வீட்டில் எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். ஏனென்றால் அவர்கள் வீட்டில் பெரியார் இருந்தார். எனக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தியதே என் இணையர்தான். நான் பெரியாரை விட மிகச்சிறந்த சிந்தனையாளன் என என்னை நிரூபிக்க வேண்டும் என்றால் பெரியாரைத் திட்டி நிரூபிக்க கூடாது. அதற்கும் மேலானதாக சிந்திக்கவேண்டும். பெரியாரை புரிந்து கொள்வது சாதாரணமான விஷயம் கிடையாது. அவர் எப்போதும் நம்மை மேம்படுத்துவதற்கான விஷயங்களையே சொல்லி இருக்கிறார். இன்னும் பெரியாரை வாசிக்க வாசிக்க, நன்றாகப் பேச கற்றுக் கொள்ளலாம். பின்பு அவரையே எதிர்த்துப் பேசலாம். இன்னொன்று அவரைப் பற்றி பேசும்போது மட்டும்தான் நீங்கள் பெரிய ஆளாக...
