திருச்சியில் பேரெழுச்சியுடன் நடந்த பெரியார் எனும் பெரும்நெருப்பு

திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் எனும் பெரும்நெருப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் 04.10.2025 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் திருச்சி, அருண் ஹோட்டலில் உள்ள சுமங்கலி அரங்கத்தில் தலைமைக் குழு உறுப்பினர் இரா. உமாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வி. சி. க. (திருச்சி மண்டலச் செயலாளர்) அ. க. தமிழாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி (திருச்சி மாவட்டச் செயலாளர்) ராயல் ராஜா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி (திருச்சி மாவட்டச் செயலாளர்) ராயல் சித்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர்) செ. ராஜ்குமார், ம. க. இ. க (மாநில பொதுச்செயலாளர்) கோவன், மக்கள் அதிகாரம் (மாநில பொதுச் செயலாளர்) செழியன், த. பெ. தி. க (மாநில கொள்கை பரப்புச் செயலாளர்) சீனி விடுதலை அரசு, அங்குசம் செய்திகள் (பொறுப்பாசிரியர்) பேராசிரியர். நெடுஞ்செழியன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை (திருச்சி மாவட்டச் செயலாளர்) மணிவண்ணன், சாமானிய மக்கள் நல கட்சி (திருச்சி மாவட்டச் செயலாளர்) முகமது. காசிம், நாம் திராவிடர் முன்னேற்றக் கழகம் (பொதுச்செயலாளர்) முபாரக், ஆசிரியர் அரஞ்செழியன், இல. கோவிந்தசாமி, து. மனோகரன், பண்ணன் ஈகவரசன், தேன்மொழி, தி. வி. க. (பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்) துரை தாமோதரன் ஆகிய தோழர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

பண்ணன் ஈகவரசன், திராவிட மகிழன் ஆகியோர் பெரியார் பற்றிய பாடல்கள் பாடினர். தலைமைக் குழு உறுப்பினர் இரா. உமாபதி, பொன்ராஜ், ஞானவேல் குழுவினரின் நையாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்டச் செயலாளர் மனோகரன் வரவேற்புரையாற்றினார்.

*U2 BRUTUS மைனர் “யார் இந்த ஆண்ட பரம்பரை” என்ற தலைப்பில் ஜாதி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக பல கருத்துக்களையும், அரசியல் நடிகரால் கரூரில் நடந்த உயிரிழப்பு துயர சம்பவத்தை பற்றியும் மிக விரிவாக கருத்துரையாற்றினார்.
*பேரலை இந்திரகுமார் தேரடி “தீ பரவட்டும்” என்ற தலைப்பில் திராவிட இயக்க வரலாறுகளையும், திராவிட இயக்கத் தோழர்கள் தமிழ்நாட்டிற்காக தன்னுயிர் நீத்த தியாகங்கள் பற்றியும் கருத்துரையாற்றினார்.

*தி.மு.க மாநில மாணவரணிச் செயலாளர் இராஜீவ் காந்தி “தமிழும் திராவிடமும்” என்ற தலைப்பில் தமிழும் திராவிடமும் தமிழ்நாட்டு மக்களை தலைநிமிரச் செய்து கொண்டிருப்பதை பற்றி கருத்துரையாற்றினார்.

நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெரியார் மீதான அவதூறுகளைப் பற்றி விளக்கத்தையும், பார்ப்பனரல்லாதவர்களுக்கு வேதசாஸ்திரத்தில் இருக்கும் கட்டுப்பாடுகளைப் போல, பார்ப்பனர்களுக்கும் வேதசாஸ்திரங்களில் போடப்பட்டிருக்கும் கட்டுபாடுகளை பற்றி பார்ப்பனர்களிடம் பேசி அவர்களின் ஆணி வேரில் கைவைத்து மக்களிடம் பார்ப்பனர்களுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி நிறைவுரையாற்றினார்.
திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், சிவகங்கை, தஞ்சாவூர், சென்னை, கடலூர் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த கழகத் தோழர்களும், திமுக, தபெதிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 09102025

You may also like...