களப்பணியில் கழகத் தோழர்கள்
18.03.25: புலியூர், தரங்கம்பட்டியில் “பெரியார் இன்னும் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன.
பரப்புரையின் போது கரூர் மாவட்ட எல்லையில் நொய்யல் பகுதியில் கரூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் குடியரசு கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், பரப்புரைப் பயணத் தோழர்களுக்கு குடிநீர், பிஸ்கட் வழங்கி வழியனுப்பி வைத்தனர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி மற்றும் பயணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
19.03.25: மணப்பாறை காமராஜர் சிலை, இலுப்பூர், அன்னவாசல் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றன.
20.03.25: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் 4-ரோடு, ஆலங்குடி, விராலிமலை, வடகாடு, கைகாட்டி பகுதிகளில் மக்கள் பேராதரவோடு பரப்புரைக் கூட்டங்கள் சிறப்புடன் நடைபெற்றன.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சொர்ண குமார், விசிக வழக்கறிஞர் அம்பேத்கர் வளவன், சிபிஜ முருகன் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கழக வெளியீட்டுச் செயலாளர் ராம இளங்கோவன், சிவகங்கை மாவட்ட தலைவர் பெரிய முத்து, திருப்பூர் முத்து ஆகியோர் கருத்துரையாற்றினார்.
ஆலங்குடியில் காலை உணவை உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன், வடகாட்டில் மதிய உணவை தமிழ்க்குடில் கரு காளிமுத்து, பேராவூரணியில் இரவு உணவை பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் அவர்களும் சிறப்பான முறையில் வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பரப்புரை பயண விளக்க பொதுக்கூட்டம் 20.3.2025 மாலை 5 மணிக்கு பேராவூரணி அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு கழக ஒன்றிய செயலாளர் மருத உதயகுமார் தலைமை தாங்கினார் . தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் வரவேற்புரை ஆற்றினார்.
கழக சிவகங்கை மாவட்ட தலைவர் பெரியார் முத்து, சிபிஎம் வழக்கறிஞர் கருப்பையா, சிபிஐ பன்னீர் செல்வம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேக்இபராம்சா, மோட்சக் குணவழகன் விசிக, தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் வெங்கடேசன், மனிதநேய ஜனநாயக கட்சியின் அப்துல் சலாம், அறநெறி மக்கள் கட்சியின் ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் ஒட்டங்காடு மூர்த்தி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் குமார், கழக வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன், கழக அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி கருத்துரையாற்றினர்.
நிறைவாக கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் பெரியார் ஏன் எதிரிகளை பதறப் வைக்கிறார் என்பதை விளக்கி சிறப்புரை ஆற்றினார். ஒன்றியத் தலைவர் கோவிந்தன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
கழக வார ஏடு புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு ஆண்டு சந்த 50 சந்தாவுக்கான தொகை ரூபாய் 15,000 கழகப் பொருளாளர் சுதுரைச்சாமி அவர்களிடம் வழங்கப்பட்டது.
21.03.2025: பட்டுக்கோட்டையில், ஒரத்தநாடு, மன்னார்குடி, வடசேரி பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஒன்றிய செயலாளர் சொ.சிவசுப்பிரமணியண் தலைமை தாங்கினாார். திவிக பொருளாளர் துரைச்சாமி பேச முத்து, மாவட்ட செயலாளர் கு.பாரி, நிர்மல்குமார், கொள்கை பரப்புச் செயலாளர் பால்பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். நிர்மல்குமார் பேச்சாளர் முத்து இருவரும் இணைந்து கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார்கள். விசிக மாவட்டச் செயலாளர் அரவிந்த் குமார், சிபிஐ மாவட்ட பொறுப்பாளர் பாலசுந்தரம், சிபிஐ ஒன்றிய பொறுப்பாளர் ரவி. காலை உணவினை விசிக மாவட்ட செயலாளர் அரவிந்த் குமார் வழங்கினார்.
பெரியார் முழக்கம் 01052025இதழ்
