நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? புத்தக வெளியீட்டு பரப்புரை விழா திருச்சி
நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா !
தோழர் பசு.கவுதமன் அவர்கள் தொகுத்துள்ள ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்.” எனும் நூலின் நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா 04.03.2017 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் திருச்சி,சத்திரம் பேருந்து நிலையம்,கலைஞர் அறிவாலையம் அருகில் உள்ள சுசி ஹாலில் நடைபெற்றது.
4000க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ள A4 அளவு தாளில் அச்சிடப்பட்ட ரூபாய் 4000 மதிப்புள்ள இத்தொகுப்பு நூல் முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 2000த்திற்கு இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்டது.
இவ்விழாவிற்கு நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் இயக்குனர் தோழர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார்.
ஜனசக்தி இதழின் பொறுப்பாசிரியர் தோழர் இந்திரஜித் அவர்கள், சி.பி.எம். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூல் குறித்த செய்திகளை பகிர்ந்து கொண்டு நூலின் முன் வெளியீட்டுத்திட்டத்திற்கு ஆதரவளித்து புத்தகத்தை வாங்கி பயன் பெற வேண்டுமாய் கேட்டுக் கொண்டார்.
நூலின் தொகுப்பாசிரியர் தோழர் பசு.கவுதமன் அவர்கள் நூலின் தேவை மற்றும் ஆக்கம் குறித்து விவரித்து ஏற்புரை வழங்கினார்.
நிகழ்வில் 69 புத்தங்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
நிகழ்வின் நிறைவாக நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பொது மேலாளர் தோழர் தி.ரெத்தினசபாபதி நன்றியுரையாற்றினார்.