அரசு தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்!

தமிழ்நாட்டின் அரசுப் பணிகளுக்கு பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

திருச்சி : திருச்சி மாவட்ட கழகச் சார்பாக 14.12.2017 வியாழன் காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தைக் கண்டித்து, அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை வகித்தார். பல் மருத்துவர் எஸ்.எஸ். முத்து, திருவரங்க நகரச் செயலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்துரை வழங்கியோர்: செந்தில் (இளந்தமிழகம்), வின்செட் (மாநகரத் தலைவர், த.பெ.தி.க.), பாலாஜி (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்), வழக்குரைஞர் தமிழழகன் (ஆசிரியர், ‘தமிழ்க்காவிரி’), அன்பழகன் (பெரியார் பாசறை), பஷீர் அகமது (மக்கள் உரிமை மீட்பு இயக்கம்), வழக்குரைஞர் பொற்கொடி ஆகியோர்.  டார்வின்தாசன் (கழக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரையாற்றினார்.  தோழர்கள் குணா, முருகானந்தம், மு.மனோகரன், டி.வி.மெக்கானிக் மணி, அவரது துணைவியார், டார்வின், அவரது துணைவியார், இளந்தமிழகம் வாசிம், மா.பெ.பொ.க.மாவட்டசெயலாளர் கலிய பெருமாள் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். த. புதியவன் (கழக மாவட்ட இணை ஒருங் கிணைப்பாளர்) நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

சேலம் : 07.12.2017  வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு சேலம் மாவட்ட கழகத்தின் சார்பாக தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வடநாட்டாருக்குத் தாரைவார்க்கும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர்  மணி தலைமை ஏற்றார். சேலம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் இரா. டேவிட் முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில்  சி.பி.எம் மாவட்ட செயலாளர் பி. தங்கவேல், சி.பி.ஐ  மாவட்ட செயலாளர் எ. மோகன், த.மு.மு.க மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவர் பி. யூனூஸ் அகமத், சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி. கோவிந்தராசு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.  நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி  உரை நிகழ்த்தினார்.  கிழக்கு மாவட்ட கழகப் பொருளாளர் பெருமாள் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.  இந்நிகழ்வில் சேலம், ஏற்காடு, இளம்பிள்ளை, ஆத்தூர், நங்கவள்ளி, மேட்டூர் ஆர். எஸ்,  மேட்டூர், கொளத்துhர், காவலாண்டியூர், காவேரி கிராஸ் பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்  :  தமிழர் வேலைவாய்ப்பை பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து  டிச-12ந்தேதி, மாலை 4.00மணிக்கு, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு குமாரபாளையம் நகரத்தலைவர் தண்டபாணி தலைமையேற்றார். மாவட்ட துணைத் தலைவர் திராவிடமணி முன்னிலை வகித்தார். நிகழ்வில் மதிமுக பொறுப்பாளர் விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேசவன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சரவணன், தமிழ் தேசிய பேரியக்கம் ஆறுமுகம், திவிக மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் சாமிநாதன், சரவணன், வைரவேல் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள். இறுதியாக திருச்செங்கோடு பகுதி பொறுப்பாளர் கவுதமன் நன்றி கூறினார்.

விழுப்புரம்  :  09-12-17 அன்று  மாலை   மாவட்டக் கழகம் சார்பில் தமிழக வேலைவாய்ப்புகளை வடநாட்டுக்கு தாரை வார்க்காதே என்று தமிழ்நாடு தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கிழக்கு மாவட்டத் தலைவர் பூஆ இளையரசன் தலைமை உரைக்குபின் மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர் செல்வன்,  கோகுல்காந்திநாத், விழுப்புரம் மருதம் இரவிகார்த்திகேயன்,  பெரியார் சிந்தனை முன்னணித் தலைவர் தீனா, மேற்கு  மாவட்ட தலைவர் மதியழகன், மாவட்ட செயலாளர் இராமர்,  தலித் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ் கண்டன உரையாற்றினார்கள்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ஜெயரட்சகன், பெரியார் வெங்கட், அறிவியல் மன்ற அமைப்பாளர் நாகராஜ், விழுப்புரம் அஜித்,  மற்றும் கலைக் கல்லூரி மாணவர்கள், தமுமுக மஜித், லாஸ்பேட் மாணிக்கம், சுனில், தினேஷ் மற்றும் மேற்கு மாவட்ட கழகத் தோழர்கள்,  விழுப்புரம் பகுதி தோழர்களும் திரளாகக்  கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 21122017 இதழ்

You may also like...