பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு திருச்சி 24122018
பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று அனைத்து பெரியாரிய இயக்கங்களும், உணர்வாளர்களும் இணைந்து முக்கியமான அரசியல் நிகழ்வு ஒன்றினை நடத்த வேண்டும் என்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
நாள்: 10-11-2018, சனிக்கிழமை
இடம்: சென்னை நிருபர்கள் சங்க கட்டிடம்
- டிசம்பர் 24 அன்று மாலையில் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு நடத்துவதென்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
- மாநாட்டிற்கான பெயர் விவாதிக்கப்பட்டு“தமிழின உரிமை மீட்போம்!” என்ற முழக்கத்தின் பெயரில் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.
- இயக்கங்கள் மற்றும் இயக்கங்களை தாண்டிய பெரியாரிய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், உணர்வாளர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வது.
- திருச்சியில் அனுமதி பெறுவதற்கான பொறுப்பினை தோழர் குடந்தை அரசன் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
- ஒன்பது மண்டலங்களாக பிரித்து மாநாட்டிற்கான வேலைகளை பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டு, ஒவ்வொரு இயக்கத்திற்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
ஒன்பது மண்டலங்கள்
1.சென்னை – தோழர் பொழிலன்(தமிழக மக்கள் முன்னணி, -: 8608068002) , தோழர் பிரவீன் (மே 17 இயக்கம்- 9884072010 )
- மதுரை – தோழர் தளபதி, மே பதினேழு இயக்கத் தோழர்கள் (8526837763), திவிக
- திருச்சி – தோழர் நிலவழகன் (தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் -9942546468), தோழர்கள் செங்கை குயிலி மற்றும் எழில் புத்தன் (ஆதித்தமிழர் பேரவை- 7598157814 – 8610993151)
- கோவை – தோழர் டைசன் (தமிழர் விடியல் கட்சி- 9840120233)
- நெல்லை – தோழர் நாகை திருவள்ளுவன் (தமிழ்ப்புலிகள் கட்சி- 9952626353)
- சேலம் – திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள்
- வேலூர் – தோழர் செவ்வேள் (த.ஒ.வி.இ)
- கடலூர், புதுச்சேரி – தோழர் வீர மோகன் ( தந்தை பெரியார் திராவிடர் கழகம்)
- தஞ்சை – தோழர் அரங்க.குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்-9047521117 )
அனைத்து மண்டலங்களிலும் உள்ள அனைத்து ஆதரவு இயக்கங்களின் பொறுப்பாளர்களையும் அழைத்து மாநாட்டிற்கான மண்டலக் கூட்டத்தினை நவம்பர் 20–ம் தேதிக்குள் நடத்திட வேண்டும் என்பது முடிவானது.
முதல்கட்ட பிரச்சாரங்கள்
- துண்டறிக்கை – முதல் கட்டமாக 50,000 முன்னோட்டத் துண்டறிக்கைகள் அச்சிடுவது.
- சுவரெழுத்து – ஒவ்வொரு மாவட்டத்திலும் வாய்ப்பிருக்கும் அனைத்து இடங்களிலும் எழுதப்பட வேண்டும்.
- Single Bit சுவரொட்டி’- டிசம்பர் 6ம் தேதிக்குப் பின்னர் ஒட்டப்பட வேண்டும்.
நிதிப் பொறுப்பேற்பு
முதல் கட்ட நிதியாக அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொண்ட தொகை.
- தமிழ்ப்புலிகள் கட்சி – 10,000
- விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி – 10,000
- திராவிடர் விடுதலைக் கழகம் – 10,000
- தந்தை பெரியார் திராவிடர் கழகம் – 10,000
- தமிழர் விடியல் கட்சி – 10,000
- மே பதினேழு இயக்கம் – 10,000
- தாளாண்மை உழவர் இயக்கம் – 10,000
- பெரியார் சிந்தனையாளர் பேரவை – 5,000
- தமிழ்நாடு திராவிடர் கழகம் – 5,000
- ஆதித் தமிழர் பேரவை – 5,000
- டிசம்பர் 3 இயக்கம் – 5,000
மொத்த தொகை – 90,000.00 – முதற்கட்ட நன்கொடை.
நவம்பர் 28 புதன் அன்று திருச்சியில் அடுத்த கட்ட விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்பது முடிவெடுக்கப்பட்டது. அமைப்புகள் தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட முதல்கட்ட தொகையினை நவம்பர் 28 அன்று கையளிப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டில் அமைப்புகள் தங்கள் கொடிகளோ, அடையாளங்களோ இல்லாமல் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
முழக்கப் பதாகைகள் பொதுப்பெயரில் இருத்தல் வேண்டும் என்றும், கருப்பு சட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
மாநாட்டினை ”பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு” என்ற பெயரில் நடத்துவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
————————————————————————————————
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பொறுப்பாளர்கள்:
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன்,
புதுச்சேரி திவிக தலைவர் லோகு அய்யப்பன்,
தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன்,
தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன்,
ஆதித் தமிழர் பேரவையின் மாநில மகளிரணி செயலாளர் செங்கை குயிலி மற்றும் பொறியியலாளர் அணி செயலாளர் எழில் புத்தன்,
விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன்,
மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன்,
தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன்,
அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் தோழர் தெய்வமணி,
டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் முனைவர் தீபக் மற்றும் சரவணன்,
பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீனா,
தாளாண்மை உழவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோ.திருநாவுக்கரசு,
தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.சு நாகராசன்,
தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி,
தமிழக மக்கள் முன்னணியின் தோழர் செல்வமணி,
இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்,
திவிக தலைமை நிலைய செயலாளர் தபசிகுமரன்,
தபெதிக சென்னை மாவட்ட தலைவர் குமரன்,
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் பிரவீன்குமார்.
நன்றி
தோழமையுடன்
திருமுருகன். கா.
9444146806