”ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்யவேண்டியது என்ன?” – கருத்தரங்கம் திருச்சி
9-4-2016 சனிக்கிழமை மாலை, திருச்சி, புத்தூர் நால்ரோடு, சண்முகம் திருமண மண்டபத்தில், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில், ”ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்யவேண்டியது என்ன?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கத்தின் தொடக்கத்தில்,விரட்டு கலை பண்பாட்டு மையக் குழுவினரால் பறை முழக்கமும்,வீதி நாடகமும் நிகழ்த்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இளந்தமிழகத் தோழர் ஜாசெம் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எவிடென்சு அமைப்பின் இயக்குனர் கதிர், கர்நாடக தலித் சுயமரியாதை இயக்கத்தின் பேராசிரியர் சிவலிங்கம்,கம்யூனியூஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் செல்வி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க துணைப் பொதுச்செயலாளர் நந்தலாலா, இளந்தமிழகம் இயக்கத்தின் தோழர் நாசர் ஆகியோர் உரையாற்றினர்.
அனைவரும் எராளமான புள்ளிவிவரங்களோடும், அக்கறையோடு சேகரித்துவந்த செய்திகளோடும் மிகச் செறிவாக உரையாற்றியது வந்திருந்தோருக்கு பயனுள்ளதாகவும், தொடர்ந்து செயலாற்றுவதற்கு பெரும் ஊக்கமாகவும் அமைந்தது.
நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக்த் தலைமைக் குழு உறுப்பினர் புதியவன், மாவட்ட செயலாளர் கந்தவேல்குமார், பொருளாளர் மனோகரன், மூத்த தோழர் திருவரங்கம் டாக்டர் எஸ்.எஸ்.முத்து, அசோக், அறிவியல் மன்றத் தோழர் ஞானம், விருதுநகர் கனேசமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும் பங்கேற்றிருந்தனர்