சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி 08072016

திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் !

மத்திய மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருச்சி ராமகிருஷ்ணா திரையரங்க பாலம் அருகில் (நாகநாதர் டீ கடை எதிரில்), நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆரோக்கிய சாமி தலைமை தாங்கினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி,த.பெ.தி.க,ஆதித்தமிழர் பேரவை,சிந்தனையாளர் கழகம்,புதிய தமிழகம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,மா.பெ.பொ.கட்சி,பெரியார் பாசறை அமைப்புகளை சார்ந்த தோழர்கள் உள்ளிட்ட கழக தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

13590233_1770639203219972_2717159875897270840_n 13599829_1770639043219988_3877668152684764297_n 13615460_1770639106553315_8368182251201899132_n 13654228_1770638959886663_3639926357347781385_n

You may also like...