தொடர்ந்து விவாதிப்போம்
அனைவருக்கும் வணக்கம், 28.9.2025 அன்று கோவையில் நடந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் பயிலரங்கின் நிறைவில் என்னிடம் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நான் அளித்த பதிலை மையமிட்டு பல்வேறு பதிவுகள் வெளிவந்த வண்ணமாக இருந்தன. அது குறித்து நான் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்று “ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் தோழர் ஜீவா அவர்கள் எழுப்பிய கேள்வி குறித்து உங்கள் விளக்கம் என்ன? என்பதுதான். அந்த நூல் ஏற்கனவே ‘தமிழன் தொடுத்த போர்’ என்ற தலைப்பில் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து எழுதி இருந்த தோழர் மா. இளஞ்செழியன் அவர்களால் எழுதப்பட்ட 1947 ஆண்டு பிற்பகுதியில் வெளியான ஒரு நூலை விமர்சித்து எழுதப்பட்டதாகும். அவர் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து 1944 வரையான காலத்தை நான்கு கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் எழுதியிருந்த “ஈரோட்டுப் பாதை” என்ற நூலுக்கு எதிராக...
