கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்வுகள்

கவிஞர் ரம்யாதங்கம் அவர்களின் “புதுமையில் புதைந்த புதையல்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா 17.08.2025 அன்று காலை 9 மணி அளவில் லட்சுமி திருமண மண்டபம் கொளத்தூரில் நடைபெற்றது.

தலைவர் மேட்டூர் தமிழ் சங்கம் ஆசிரியர் கு. பாரி, சமூக ஆர்வலர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் K. P. N. மகேஷ்வர், செயலர் இந்திய பல் மருத்துவச் சங்கம் மேட்டூர் கிளை மருத்துவர் மோ. சிவசுப்பிரமணியன், அஞ்சல் துறை (ஓய்வு) சஞ்சீவி, பொருளாளர் மேட்டூர் கிளை நூலக வாசகர் வட்டம் எழுத்தாளர் மே. கா. கிட்டு ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

கழகத் தலைவர் நிகழ்ச்சியில் தலைமையேற்று “புதுமையில் புதைந்த புதையல்கள்” கவிதை நூலை வெளியிட்டார். பழனியப்பா சில்க்ஸ் PEP சந்திரசேகரன் அவர்கள் நூலை பெற்றுக் கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் கா. ஜோதி மற்றும் உதவி பேராசிரியர் கற்பகம் பொறியியல் கல்லூரி கோவை வி.ஜெயபிரகாஷ் இந்நூலை பற்றி உரையாற்றினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், மாரண்டபள்ளி பகுதியைச் சார்ந்த குட்டியப்பன் – செல்வி இணையரின் மகள் கு. கீர்த்தனா அவர்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், பைபூர் ஊராட்சி, கீழ்பைபூர் பகுதியைச் சார்ந்த வே. கருட்டையன்- அ. இலட்சுமி இணையரின் மகன் சு. உதயன் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா (29.08.2025) காலை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் கே.ஆர்.வி திருமண மஹாலில் நடைபெற்றது. மரணத் தண்டனை ஒழிப்புப் போராளி, அற்புதம் குயில்தாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேரறிவாளன் வரவேற்புரையாற்றினார். (பெரியார் திருவள்ளுவர் மானுட ஒன்றிய நிறுவனர்) குயில்தாசன் முன்னிலை வகித்தார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கு. கீர்த்தனா- சு. உதயன் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா நடத்தி வைத்து கருத்துரையாற்றி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, தேப்பெருமாநல்லூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த M. மகாலிங்கம் -M. சந்திரா ஆகியோரின் மகன் காஸ்ட்ரோ அவர்களுக்கும், திருவாரூர் மாவட்டம், புலிவலம், வெங்கடேசவபுரம் பகுதியைச் சார்ந்த R. சரவணன்- S. சாந்தி அவர்களின் மகள் ச. காவியா ஆகியோரின் சுயமரியாதை திருமணம் 28.08.2025 அன்று காலை டிஜெஎஸ் மஹால் கும்பகோணத்தில் நடைபெற்றது.

மாத்தூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திராவிட முன்னேற்ற கழகம் செந்தில் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கோவை கு. ராமகிருஷ்ணன் (பொதுச் செயலாளர் தபெதிக) கருத்துரையாற்றி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ராஜ்முகமது (ம.ம.க மா.செ.உ), சு. விஜயகுமார் (தி.க), ரா. சாத்தையன் (மக்கள் உரிமை கூட்டணி), கோயம்புத்தூர் கலையரசன் (விசிக) கோயம்புத்தூர் குடந்தை விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கழகத் தோழர்கள் சோலை மாரியப்பன் (தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர்), சா. வெங்கடேசன் (குடந்தை ஒன்றிய அமைப்பாளர்) மற்றும் பலர் கலந்து கொண்டு இணையர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தழிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் நாகராஜ், நிவேதா அவர்களுடைய மகள் கவி(1) பிறந்தநாள் விழா (20.08.2025) மேட்டூர் தங்கமாபுரிபட்டினத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கலந்துகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதில் சேலம், மேட்டூர், கொளத்தூர், காவலாண்டியூர், ஆர். எஸ், நங்கவள்ளி, இளம்பிள்ளை, கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு கோரி புதுவையில் கருத்தரங்கம்
புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் தங்கவேல் பாஞ்சாலி அரங்கத்தில் 30.08.2025 மாலை 6 மணி அளவில் தமிழீழ மக்களுக்கான தீர்வு வாக்கெடுப்பு என்ற தலைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பேராசிரியர். சரசுவதி தலைமையில் நடைபெற்றது.

அ.ச.தீனா(புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) வரவேற்புரையாற்றினார். பெரியார் பிஞ்சு திராவிட மகிழன் விடுதலைக்கு மரணம் இல்லை, புலிகளுக்கு தோல்வி இல்லை என்ற பாடலை பாடினார்.

மக்கள் வழக்கறிஞர் ப.பா மோகன், ருத்திரகுமார் (நாடாளுமன்ற உறுப்பினர்,நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்) ஆகியோர் காணொளி வாயிலாக கருத்துரையாற்றினார்கள்.

இரா. மங்கையர் செல்வன் (தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனத் தலைவர்), நாடாளுமன்ற உறுப்பினர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழர்கள் வழக்குரைஞர் கோ. பாவேந்தன், கார்த்திக் கணேசன், வீர. மோகன்(தபெதிக தலைவர்), மா. ஏகாம்பரம் (புதுச்சேரி பழங்குடியினர் விடுதலை இயக்கத் தலைவர்), சி. சு. சுவாமிநாதன் (புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர்), பி. பிரகாஷ் ( புதுச்சேரி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்), கி. மகேந்திரன் (புதுச்சேரி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி செயலாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழீழ மக்கள் இலங்கை அரசாங்கத்தால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட பிரச்சினைகளை பற்றி பேசினார். தமிழீழ மக்களின் உரிமைக்காக தமிழின மக்களுக்கான தீர்வு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழீழ மக்கள் அவர் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து வாக்கு செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கையாக முன் வைத்து கருத்துரையாற்றினார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பேராசிரியர் சரசுவதி அவர்கள் தமிழீழ மக்களுக்கான உரிமைகளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயலாற்றி வருவதை பற்றியும் தமிழீழ மக்களுக்கான தீர்வு பொதுவாக்கெடுப்பு பற்றியும் இறுதியாக கருத்துரையாற்றினார். இந்தக் கருத்தரங்கில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பால் தங்கள் வாழ்வுரிமையை இழந்து நிற்கும் தமிழின மக்களுக்கு தீர்வு கிடைக்க பாதிப்புக்கு உள்ளான தமிழீழ பகுதியிலும், புலம்பெயர் தமிழர்கள் வாழும் பகுதியிலும் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கூறுகின்றது.

இந்த கோரிக்கையை தொப்புள் கொடி உறவுகளான தமிழ் மக்கள் வாழுகின்ற தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றங்களில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று இந்த கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முகேஷ் தங்கவேலு நன்றியுரையாற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சிற்பி ராஜன், இரா,உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), ப.அருண் (சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), இளையரசன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), சிவக்குமார் (கடலூர் மாவட்ட தலைவர்), ராஜேந்திரன், ஸ்ரீதர் திருஞானம், அறிவழகன், புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அபிமன்னன், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 18092025

You may also like...