தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்கில் கழகத் தலைவர் விடுதலை

2009 – ஆம் ஆண்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தி கொலை என்று பேசாதீர்கள், ராஜீவ்காந்தி செய்த தவறுக்காக அவருக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனை என்றும், அமைதிப்படையை ஏவி எத்தனை படுகொலைகள் செய்து இருப்பார்; அதற்காக கொடுக்கப்பட்ட மரண தண்டனை அது. விடுதலைப் புலிகள் செய்திருந்தால் பாராட்டுகிறேன்; இல்லையெனில் கண்டிக்கிறேன். ஈழமக்களுக்கான பாதுகாவலர்கள் ஆன விடுதலைப் புலிகளே, நீங்கள் தானே செய்திருக்க வேண்டும். நீங்கள் செய்யாமல் வேறோருவனை ஏன் கொலை செய்ய விட்டீர்கள் என்று விடுதலைப் புலிகளைக் கண்டித்திருப்பேன் என பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. ஓராண்டுக்கான தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ச்சப்பட்டது.
3மாதம் சிறையிலிருந்தார். இவ்வழக்கை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கு 16 ஆண்டு காலம் கடந்து 29.09.2025 திங்கட்கிழமை திண்டுக்கல் மாவட்டம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை விடுவித்தது. இவ்வழக்கை நடத்தி வழக்கிலிருந்து விடுவித்த வழக்கறிஞர். ஆனந்த் முனிராஜ் அவர்களுக்கு கழகத் தலைவர் நன்றி தெரிவித்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 09102025

You may also like...