காசாவில் இனப்படுகொலை நிறுத்து சென்னையில் பேரணி
காசா மீதான போரை நிறுத்து என்ற முழக்கத்தோடு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை புதுப்பேட்டையில் பேரணியும் அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் 19.09.2025 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
பேரணியில் பங்கேற்று கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கண்டனவுரையாற்றினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த இயக்கங்கள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டனர். இளமாறன் (தமிழர் விடியல் கட்சி) ஒருங்கிணைபிபில், திருமாவளவன் (விசிக), கோவை கு. இராமகிருஷ்ணன் (தபெதிக), பேரா.ஜவாஹிருல்லா, திருமுருகன் காந்தி(மே17), நாகை திருவள்ளுவன்(தபுக), மருத்துவர் சாந்தி, மகா (மக்கள் மன்றம்), திரைக்கலைஞர்கள் பிரகாஷ்ராஜ், வெற்றிமாறன், சத்யராஜ், தீனா, அமீர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனவுரையாற்றினார்கள். பேரணியில் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 25092025
