தமிழக மக்கள் முன்னணி பரப்புரை
தமிழக மக்கள் முன்னணி சார்பாக நடத்தும் முற்றத்திகார தமிழ்நாடே முதன்மை இலக்கு என்ற முழக்கத்தோடு சென்னை மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, ராமேசுவரம், திருச்செந்தூர், ஈரோடு என 6 முனைகளில் இருந்து பரப்புரை பேரணிகள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் வந்தடைந்து 31.08.2025 மாலை 5 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. நிலவழகன் பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பு உரையாற்றினார் தமிழ்வாணன், கண குறிஞ்சி, நிலவன், செல்வவேள், தங்க குமரவேல், பாவெல், சுப்பு மகேஷ், நாகேசுவரன், சௌ. சுந்தரமூர்த்தி, எட்வின், காஞ்சனா, குணசேகரன் ஆகிய தோழர்கள் தீர்மானங்களை வலியுறுத்தி உரையாற்றினார்கள்.
ஆசிரியர் தேன்மொழி, முனைவர் மா. பூங்குன்றன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மீ. தா. பாண்டியன், தபெதிக சீனி.விடுதலை அரசு, மக்கள் கலை இலக்கியக் கழகம் கோவன், மக்கள் அதிகாரம் கழகத் குருசாமி, மார்க்சிய பெரியார் பொதுவுடைமைக் கட்சி துரை சித்தார்த்தன், திக சி. தங்கராசு, தமிழ் தேசக் குடியரசு இயக்கம் க. இரா. தமிழரசன், ஐந்திணை மக்கள் கட்சி தேவதாசு, தமிழ் தேச மார்க்சிய கழக மதியவன் இரும்பொறை ஆகியோர் தீர்மானங்களை வரவேற்று உரையாற்றினார்கள்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு இப்பொதுக்கூட்ட 6 தீர்மானங்களை முன்மொழிந்து,
ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற அமைப்புகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்துராஸ்ட்ரம், ராமராஜ்யம் அமைக்க முன் வருமேயானால் பெரியார் கூறியதைப் போல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைக்கும் என தீர்மானங்களை வரவேற்று உரையாற்றினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் தமிழக மக்கள் முன்னணி அமைப்பின் செயல்பாடுகளை பாராட்டி தீர்மானங்களை வரவேற்று, முன்மொழிந்து உரையாற்றினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழக மக்கள் முன்னணி வைத்த கோரிக்கைகள் தமிழ்நாடு எங்கும் பரவி தேவைப்பட்டால் இந்தியா முழுவதும் பரவி ஒரு அரசு உருவாகட்டும் எனக் கூறி தீர்மானங்களை வரவேற்று உரையாற்றினார்.
அற்புதம் அம்மாள், பழனிராஜன் ஆகியோர் முற்றதிகாரத் தமிழ்நாடே முதன்மை தேவை என்ற பரப்புரை பயணத்தில் கலந்து கொண்ட 6 குழுக்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
இறுதியாக தமிழக மக்கள் முன்னணி பொழிலன் பொதுக்கூட்டத்தின் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார். கபிலன் நன்றியுரையாற்றினார். இதில் கழகத் தோழர்கள் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தாமோதரன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ராஜேஷ் குமார், விஜயகுமார், சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 25092025
