Category: பெரியார் முழக்கம்

வாலிபர்களே தயாராய் இருங்கள்!

வாலிபர்களே தயாராய் இருங்கள்!

பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. 02.05.2024 இதழின் தொடர்ச்சி… இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் மறைந்து விடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும்; தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால் போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம். அதாவது பண்டிகைக்காக ஓய்வெடுத்துக்கொண்ட மக்கள் பலர் கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ விளையாடும்போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவதுபோல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக்கும் உயிருள்ளவரை இருந்து தான் தீரும். “சரீரமில்லாத ஆத்மாவுக்கும் கண்ணுக்குத் தெரியாத சூட்சம சரீரத்திற்கும்” கூட “மோட்சமும்” “முக்தியும்” கற்பித்திருப்பதில் ஜீவனுக்கு வேலை யில்லாமலும் அநுபவமில்லாமலும் மோட்சம் – முக்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருந்து...

+2 தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு பாராட்டு

+2 தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு பாராட்டு

சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை சகோதரி நிவேதா. இவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 283/600 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கிறார். சகோதரி நிவேதா அவர்களை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். உடன் தோழர்கள் அருண்குமார், இராஜேசு, குமார், எழில், அன்னூர் விஷ்ணு. பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

உடைந்து தொங்கும் மோடி பிம்பம்

உடைந்து தொங்கும் மோடி பிம்பம்

10 ஆண்டுகால மோடி ஆட்சியில் உலக நாடுகள் கண்டு அஞ்சுகிற அளவுக்கு மிகப்பெரிய வல்லாதிக்க சக்தியாக இந்தியாவை வளர்த்துவிட்டார் என பார்ப்பனக் கூட்டம் தங்களுக்கு தாங்களே குதூகலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகளின் புள்ளி விவரங்கள் அனைத்தும் மோடி ஆட்சி இந்தியாவின் இருண்ட காலம் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிக்கொண்டிருக்கின்றன. • உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்த ஆண்டு இந்தியா 159வது இடத்துக்கு பின்தங்கிவிட்டதாக உலகளாவிய ஊடக கண்காணிப்பு நிருபர்கள் ஆய்வறிக்கை கூறுகிறது. தரவரிசையில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கையே 176-தான். இந்த பட்டியலில் 2022ஆம் ஆண்டில் 150-வது இடத்தில் இந்தியா இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. • 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 111-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. மொத்த நாடுகளின் எண்ணிக்கை 125. இந்த பட்டியலிலும் முந்தைய ஆண்டில் இந்தியா 107-வது இடத்தில் இருந்தது. • 2022ஆம் ஆண்டு...

தலையங்கம் – ஆலயத் தீண்டாமையை அகற்றுவோம்!

தலையங்கம் – ஆலயத் தீண்டாமையை அகற்றுவோம்!

சேலம் மாவட்டம் காடையம்பட்டிக்கு அருகில் இருக்கிறது தீவட்டிப்பட்டி கிராமம். இப்பகுதியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த சுமார் 500 குடும்பங்களும், அருகே இருக்கிற நாச்சினம்பட்டியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்களும் வசிக்கின்றன. இரு கிராமங்களுக்கும் நடுவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் திருவிழாவை ஒட்டி, மே 1-ஆம் தேதி இரவு உள்ளே சென்று வழிபடச் சென்ற பட்டியல் சமூகத்தினரை ஆதிக்க ஜாதியினர் தடுத்திருக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மே 2-ஆம் தேதி வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் எட்டப்படாத நிலையில், சாலையில் நின்று கொண்டிருந்த பட்டியல் சமூகத்தினர் மீது சிலர் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் அருகில் இருந்த கடைகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. இருதரப்பிலும் காவல்துறை சிலரைக் கைது செய்திருக்கிறது. தீவட்டிப்பட்டி பகுதியில் இருக்கும்...

‘தகுதி’ ‘திறமையை’ தோலுரிக்கும் ராகுல் காந்தி பெரியாரின் சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி

‘தகுதி’ ‘திறமையை’ தோலுரிக்கும் ராகுல் காந்தி பெரியாரின் சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை பெற்று விட்ட பிறகும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தினரை நோக்கி ‘கோட்டா ஜாதி’ என்று இழிவுபடுத்தும் போக்கை இன்னும் பார்ப்பனர்கள் விட்டுவிடவில்லை. இச்சூழலில் ‘மெரிட்’ குறித்து ராகுல் காந்தி அளித்திருக்கும் மிக எளிமையான விளக்கம் சமூகநீதியின்பால் அவர் கொண்டிருக்கும் அக்கறையை வெளிகாட்டுவதாய் உள்ளது. இடஒதுக்கீடு ஏன் அவசியம்? ஜாதி வாரி கணக்கெடுப்பு ஏன் அவசியம்? கல்வி உரிமைகள் – மாநில உரிமைகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்? என்றெல்லாம் தமிழ்நாட்டின் பார்வையில், குறிப்பாகத் திராவிட இயக்கத்தின் பார்வையில் மிகத் தெளிவாக, ஆழமான கருத்துக்களை கடந்த காலங்களில் தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, இப்போது ‘மெரிட்’ குறித்து அளித்திருக்கும் விளக்கம் அவர் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. இதுதொடர்பாக ராகுல் காந்தி சமீபத்தில் பேசியிருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வியும், அதற்கு அளித்த பதிலும்… கேள்வி: மெரிட் என்றால் என்ன...

தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளமான சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தில்லை!

தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளமான சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தில்லை!

திருமணத்தின் போது அக்னி குண்டத்தை 7 முறை சுற்றி வராததால், தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்கக்கோரி தம்பதி ஒன்று தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்து திருமண முறைப்படி 7 முறை அக்னி குண்டத்தை சுற்றி வர வேண்டியது அவசியம், அப்படி சுற்றி வராத திருமணங்கள் பதிவு செய்யப்பட்டாலும் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பால் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகுமா? ஆகாதா என்ற விவாதங்கள் வலுத்தன. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் விவரித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், தமிழ்நாட்டில் மட்டுமே பின்பற்றப்படுகின்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் விளக்கியிருக்கிறார். அதில் இருந்து சுருக்கமானப் பகுதியைக் காணலாம். 1952 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய இந்துக்களுக்கான திருமண வாரிசு...

நஞ்சு விதைக்கும் மாதவி!

நஞ்சு விதைக்கும் மாதவி!

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஐதராபாத் தொகுதியில் போட்டியிடுபவர் மாதவி. இவர், தேர்தல் பிரசாரத்தின் போது மசூதியை நோக்கி அம்பு விடுவது போல செய்கை செய்து வெறுப்பு அரசியலை தூண்டியதுடன், அது சர்ச்சையானதும் ‘’நான் மசூதியை பார்த்து அம்பு விடவில்லை’ என்று பின்வாங்கினார். இவரை சமீபத்தில் ஊடகர் பர்கா தத், ஒரு பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் இடஒதுக்கீடுக்கு எதிரான வன்மத்தையும், இட ஒதுக்கீட்டில் பாஜக அரசியல் நிலையையும் தெளிவுபடுத்துகிறார் மாதவி. அரசியலுக்கு எப்படி வந்தீர்கள் என்கிற கேள்விக்கு, “தான் ஏழ்மையான சூழலில் வளர்ந்தேன். ஆனால், எஸ்.சி, எஸ்.டி இல்லை. கல்லூரியில் எனக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை. நான் படித்துக்கொண்டே பல்வேறு வேலைகளை செய்து என்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொண்டேன். அதேநேரத்தில், பொருளாதாரத்தில் வசதியான தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதை அறிந்த நேரத்தில்தான் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் வலுவாக தோன்றியது’’ என்று கூறுகிறார் மாதவி. வசதி...

“திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்

“திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்

பெரியார் சிந்தனையை இலக்கியமாக்கியவர் புரட்சிக்கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி புதுவையில் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி. 1928 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் மாயவரத்தில் பெரியாரும், டாக்டர் வரதராசலு நாயுடும் பேசுவதாக அறிந்த பாரதிதாசன் ஒரு காங்கிரசுக்காரராக – சைவ பக்திமானாக அக்கூட்டத்திற்குச் சென்று மாற்றம் பெற்று அன்றோடு கடவுள், மதம் ஆகியவற்றைப் பாடுவதை விட்டுவிட முடிவெடுத்துக் கொண்டார். எதையும் ஏன், எதற்கு என்று பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து தனக்கு சரியெனப்பட்டதை ஏற்றுக் கொள்க என்று பெரியார் கூறியது கவிஞருக்கு மிகவும் பிடித்தது. அதிலிருந்து பெரியார் கொள்கையை தனது பாடல்களின் கருப்பொருளாக பயன்படுத்தி பாடல்களை எழுதினார். 1928 இல் கருத்தடைப் பற்றி முதன் முதலாகப் பெரியார் கூறியதை 1936 இல் ‘காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்’ எனப் பாட்டால் வழி மொழிந்த முதற் கவிஞர்...

சுயமரியாதை இயக்கம் ஏன்? எதற்காக? – 1- பெரியார்

சுயமரியாதை இயக்கம் ஏன்? எதற்காக? – 1- பெரியார்

பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925இல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால் தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும். எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சி யடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ (எனக்கு...

மடத்துக்குளத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

மடத்துக்குளத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் இரண்டு நாள் கோடைக்கால பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறவுள்ளது. நாள் : மே 21,22 ஆகிய தேதிகளில் இடம் : சூரியா மகால், பழனி ரோடு, மடத்துக்குளம் குறிப்பு : இந்த பயிலரங்கில் திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டத் தோழர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். முன்பதிவு கட்டாயம். கட்டணம் ரூ.100/- முன்பதிவுக்கு : 9942645497, 9842248174, 9442837666, 7373561014, 9842487766 பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

தேவேந்திரன் – நிஷா இணையேற்பு விழா

தேவேந்திரன் – நிஷா இணையேற்பு விழா

சென்னை : மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவராக பணிபுரியும் அ.வா.தேவேந்திரன் அவர்களுக்கும், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த, மயிலாடுதுறை அறம் குழந்தைகள் சிகிச்சையக இயக்குநர் இராம.ஜெனிஃபர் (எ) நிஷா அவர்களுக்கும் ஜாதி – மத மறுப்புத் திருமணம் 14.04.2024 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது. இணையேற்பு விழாவுக்கு தலைமைத் தாங்கிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இணையேற்பை நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். இந்நிகழ்வில் இயக்குநர் கோபி நயினார், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

தோழர் பத்ரியின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்

தோழர் பத்ரியின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்

சென்னை : வாழ்க்கையை கொள்கையாக்குவோம்! கொள்கையை சமூகமாக்குவோம்!! என்ற இலட்சிய வேட்கையோடு களப்பணியாற்றிய செயல்வீரர் பத்ரி நாராயணனின் 20வது நினைவுநாளை ஒட்டி மயிலாப்பூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் திராவிட முன்னேற்றக் கழக சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, விசிக மண்டலச் செயலாளர் ரூதர் கார்த்திக், திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் வெங்கடேசன், கழக மாவட்டத் தலைவர் வேழவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் கூட்டம் இராயப்பேட்டை வி.எம் தெரு பத்ரி நாராயணன் நினைவுப் படிப்பகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பத்ரி அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். தொடர்ந்து அவருடன் பயணித்த கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், விசிக மைய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சாரநாத்,...

தலையங்கம் – ‘குடிஅரசு’க்கு வயது 100

தலையங்கம் – ‘குடிஅரசு’க்கு வயது 100

உலக வரலாற்றில் அடக்குமுறைகளுக்கு எதிரான இயக்கங்கள், போராட்டங்கள் ஏராளம் உண்டு. நாட்டை மீட்க, எல்லையை மீட்க அல்லது நாட்டை பிரிக்க என மண் சார்ந்த போராட்டங்களே அவற்றில் பெரிதினும் பெரிதாக உள்ளன. அமெரிக்காவில் கருப்பர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் அல்லாதவர்களை அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவத்தில் இருந்து விலக்கி வைத்த நிறவெறிக்கொள்கைக்கு எதிரான போராட்டம் போன்ற நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்களும் உலக வரலாற்றில் உண்டு. ஆனால் இவை பேசப்பட்ட அளவுக்கு, உலக வரலாற்றில் பேசப்படாத மற்றொரு போராட்டம் உண்டென்றால் அது பெரியார் நடத்திய சுயமரியாதைப் போராட்டமே. பிறப்பின் அடிப்படையிலான இன இழிவை நீக்க பெரியார் ‘சுயமரியாதை இயக்கம் கண்டதன் நூற்றாண்டு இவ்வாண்டு நவம்பரில் தொடங்கவிருக்கிறது. சுயமரியாதை இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே பெரியார் சுயமரியாதை மீட்புக்கான போராட்டத்தை தொடங்கிவிட்டார். காங்கிரஸ் கட்சியின் 1920 நெல்லை மாநாடு, 1921 தஞ்சை மண்டல மாநாடு, திருப்பூர் மாகாண மாநாடு,...

திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்

திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது ஜிஎஸ்டி குறித்து பாஜகவினரிடம் கேள்வி எழுப்பிய திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் சங்கீதா மீது தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகிகள் சின்னச்சாமி, சீனிவாசன், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது 15 வேலம்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். வழக்குப்பதிவான நிலையில் தலை மறைவான குற்றவாளிகள் முன்பிணைக் கோரி தாக்கல் செய்த மனுவை திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 29.04.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.‌ பாதிக்கப்பட்ட சங்கீதாவுக்கு ஆதரவாக கழக வழக்கறிஞர் திருமூர்த்தி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இருப்பினும் குற்றவாளிகளான பாஜக நிர்வாகிகளுக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தியதோடு, திருப்பூர் மாநகர அமைப்பாளர் சங்கீதா மீது பொய் வழக்கினை பதிவு செய்த 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளருக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர்...

இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது! பெரியாரியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது! பெரியாரியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒருபோதும் எதிர்த்ததில்லை. பாகுபாடுகள் அகற்றப்படாத வரையில், இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்க வேண்டும். தேவை இருக்கும் வரை இடஒதுக்கீட்டை தொடர வேண்டும்” என்று பேசியிருக்கிறார். இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டுமென்று மோகன் பகவத் ஏற்கெனவே பேசிய காணொளி ஒன்று, தற்போது தேர்தல் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இக்கருத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடே இருக்காது என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்துக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் பதிலளித்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எஸ்.சி.,, எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இடஒதுக்கீட்டை பாஜக என்றைக்கும் ஆதரிக்கும். அவர்களின் உரிமையை என்றைக்கும் பாதுகாப்போம்” எனக் கூறியுள்ளார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., பாஜக இரண்டுமே கடந்த காலங்களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உறுதியாகச் செயல்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் 2015ஆம் ஆண்டில் ‘தி இந்து’ ஊடகத்திற்கு பேட்டி அளித்த...

கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

சென்னை மாவட்டக் கழக செயல்வீரர் போரூர் ‌‌‍விக்னேஷ் கடந்த ஆண்டு கழகத்தில் இணைந்த நாள் முதலே கழகம் நடத்திய ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஐடி ஊழியர், வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தோழர் விக்னேஷ். அவர் 16.04.2024 அன்று முடிவெய்தினார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தோழர் விக்னேஷின் உடலுக்கு கழகத்தின் சார்பில் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் உமாபதி, எட்வின் பிரபாகரன், இரண்யா, அருண்குமார், அன்னூர் விஷ்ணு, அட்டி அருண், புகழ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். சொந்த ஊரான திண்டிவனத்தில் தோழர் விக்னேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

எதிர்வரும் நிகழ்வு

எதிர்வரும் நிகழ்வு

இயக்கத்தின் கருப்பு மெழுகுவர்த்தி, கழக செயல்வீரர் தோழர் பத்ரி நாராயணன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9 மணியளவில் மயிலாப்பூர் மயானத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவுப் படிப்பகம் முன்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது எனவே தோழர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இரா.உமாபதி மாவட்டச் செயலாளர் – சென்னை திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

சேலம் : திராவிடர் விடுதலைக் கழகத் தோழர், கொளத்தூர், அய்யம்புதூர் சி.சுப்பிரமணியன் அவர்கள் 21.04.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடலை கழகப் பெண் தோழர்கள் சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தோழமை இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது. சுடுகாடு வரை பெண்கள் வரக்கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து, ஜாதி – மத சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தியது அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு மறைந்த சி.சுப்பிரமணியம் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மறைந்த தோழர் சி.சுப்பிரமணியன் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். இந்நிகழ்வில் கழக ஈரோடு வடக்கு...

சென்னை, மதுரை, கோவையில் கழகம் பரப்புரை

சென்னை, மதுரை, கோவையில் கழகம் பரப்புரை

சென்னை : இந்தியா கூட்டணியின் தென் சென்னை மக்களவைத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் உமாபதி – கார்மேகம் – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது. கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அன்னூர் விஷ்ணு ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். மதுரை : இந்தியா கூட்டணியின் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை மாவட்டக் கழக சார்பாக 16.04.2024 அன்று அழகர் கோவில், கிடாரிப்பட்டி, வள்ளாலபட்டி, சாணிப்பட்டி, கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி, தும்பைப்பட்டி, சந்தைப் பேட்டை, நொண்டிகோவில் பட்டி, மேலூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் பரப்புரை செய்தனர். இதில் மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, முருகேசன், ஆசிரியர் நடராசன், பிரகாஷ், சந்துரு உள்ளிட்ட கழகத் தோழர்களும், பவானி,...

பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்? – ர.பிரகாசு

பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்? – ர.பிரகாசு

(நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் சார்பில் 14.04.2024 அன்று திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 20-வது கூட்டத்தில் ர.பிரகாசு ஆற்றிய உரை) பாரதமா அல்லது இந்தியாவா? என்கிற விவாதத்தில் நாம் எந்த பக்கம் நிற்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது. அதனால்தான் பாரதமும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் என்ற தலைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன். தனித் தமிழ்நாடு கொள்கையைக் கொண்ட திராவிட இயக்கம் இந்தியா பக்கம் நிற்க வேண்டிய தேவை எங்கே எழுகிறது என்ற கேள்வியை சிலர் முன்வைக்கிறார்கள். ம.பொ.சி.-யை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற தமிழ்தேசியர்களிடம் இருந்தே இக்கேள்வி பெரும்பாலும் எழுகிறது. தெற்கெல்லை போராட்டத்தில் பெரியார் எடுத்த நிலைப்பாடுதான் இதற்கும் சரியான பதிலாகும் என்று கருதுகிறேன். தேவிக்குளம், பீர்மேடு என்ற 2 பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென்ற போராட்டம் எழும்போது, முதலில் தட்சணப் பிரதேசத்தில் இருந்து நாம் தமிழ்நாட்டைக் காக்க வேண்டுமென்று பெரியார் கூறினார். அதாவது, முதலில் தலையைக் காப்போம், பிறகு தலைப்பாகையை காப்போம் என்பது...

சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?

சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?

கொரோனாவுக்கான முதல் மருந்து என்று பொய்யான தகவல்களுடன் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவை கடுமையாகக் கண்டித்த உச்சநீதிமன்றம், செய்தித்தாள்களில் பொது மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிடுமாறு உத்தரவிட்டது. ஆனால் லென்ஸ் வைத்து தேடும் அளவுக்கு மிகச் சிறிய அளவில் விளம்பரம் வெளியிடப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கமாக பொது மன்னிப்பு வெளியிடப்படும் அளவில், மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பதஞ்சலி நிறுவனத்துக்கு மீண்டும் எச்சரித்துள்ளது உச்சநீதிமன்றம். அத்துடன், பொய் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மருந்து விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் பிரிவு 170 ஏன் திடீரென்று நீக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

கல்வி – வேலை குறித்து பேச மறுக்கும் ஊடகங்கள்!

கல்வி – வேலை குறித்து பேச மறுக்கும் ஊடகங்கள்!

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பாரதிய ஜனதா கட்சி. ஆனால் சில முன்னணி தேசிய ஊடகங்களில் இப்போதும் எதிர்க்கட்சிகளே கடும் தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டி ருக்கின்றன. இந்தியாவில் இரவு 8 மணிமுதல் 10.30 மணிவரை அதிகமானோர் செய்திகளை பார்க்கின்றனர். அதனால் இந்த நேரத்தை பிரைம் டைம் என்பார்கள். பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 12 வரை இந்த நேரத்தில் பல முக்கிய ஊடகங்கள் விவாதித்த தலைப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் குறித்து நியூஸ் லாண்டரி ஊடகம் பகுப்பாய்வு செய்துள்ளது. ரிபப்ளிக் டிவி, நியூஸ் 18, டைம்ஸ் நவ், சி.என்.என்.- நியூஸ் 18, ஆஜ் தக் உள்ளிட்ட 6 தொலைக்காட்சிகளில், 6 நெறியாளர்களின் 429 நிகழ்ச்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவே 52% விவாதங்கள் நடைபெற்றுள்ளன. வெளிப் படையாக பாஜகவுக்கு ஆதரவாக 27% விவாதங்கள் நடந்துள்ளன. ஒன்றிய அரசுக்கு எதிரான விவாதங்கள் மிகச் சொற்பமாக 1.4% அளவில் மட்டுமே நடந்திருக்கிறது. 10...

வினா விடை

வினா விடை

• கோவையில் 1 லட்சம் பாஜக ஆதரவு வாக்குகளை காணவில்லை – அண்ணாமலை புகார் பதில்: ஜூன் 4-ஆம் தேதி சொல்ல வேண்டிய பதிலை அவசரப்பட்டு சொல்லீட்டீங்களே அண்ணாமலை! • நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி – செய்தி பதில்: குரங்கு பொம்மை என்ன விலை என்ற காமெடி போல் இருக்கிறது. சுடுகாடு அமைக்க ஜி.எஸ்.டி. போட்டதே நீங்கள்தான் ஜீ • அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி வியூகம் – செய்தி பதில்: அதிமுகவை பாஜக விழுங்கி செரித்துவிட்டதே! • சூரத்தில் பாஜக வேட்பாளரைத் தவிர மற்ற எல்லோரும் மனுக்களை வாபஸ் பெற்றனர் – செய்தி பதில்: தேர்தல் ஆணையத்தை கலைத்துவிட்டால் தேர்தல் நடத்தும் வேலையே மிச்சமாகிவிடுமே! • வணிகர்கள் அவதிப்படுவதால் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்! – செய்தி பதில்: மருத்துவர்...

தலையங்கம் – ஆரிய மாடலும், திராவிட மாடலும்!

தலையங்கம் – ஆரிய மாடலும், திராவிட மாடலும்!

2023ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைத்து பிரதமர் மோடி, உள்ளே செங்கோலை நிறுவினார். அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படும் நாட்டில் செங்கோல் வைப்பது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, திறப்பு விழாவில் இந்த நாட்டின் முதல் குடிமகளே நிராகரிக்கப்பட்ட பேரவலம் நடந்தது. பாலிவுட் நடிகைகள் கூட நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு மட்டும் அழைப்பு இல்லை. காரணம் அவர் ஒரு பழங்குடிப் பெண், அதை விட மிக முக்கியமாகக் கணவரை இழந்த பெண். ஒரு விதவையை நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு அழைக்கக்கூடாது என்ற சனாதன சிந்தனையே அதற்குப் பின்னால் ஒளிந்திருந்தது. அதுதான் ஆரிய சனாதன மாடல். இப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமன விவகாரத்திலும் சனாதன தர்மம் என்றால் என்ன என்று சங்கிகள் மிக அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை...

தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!

தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!

பாஜகவினர் கழகத் தோழர் சங்கீதாவை தாக்கிய வழக்கில் குற்றவாளிகளுக்கு முன் பிணை மறுத்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜகவினரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது அங்கிருந்த தோழர் சங்கீதாவும் பாஜகவினரிடம் ஜி.எஸ்.டி. குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தோழர் சங்கீதாவின் கடையை தேடிச் சென்று, தனியாக இருந்த அவரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வசைபாடியதுடன், கொலைவெறித் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலில் ஈடுபட்ட பாஜக பொறுப்பாளர் சின்னச்சாமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்த கோரி 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் தங்களுக்கு முன் பிணை தர வேண்டும் என்று கூறி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோரிக்கை மனு சமர்ப்பித்திருந்தனர். இந்த...

தோல்வி பயத்தில் தரம்தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி? தகுதி நீக்கம் செய்யுமா தேர்தல் ஆணையம்!

தோல்வி பயத்தில் தரம்தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி? தகுதி நீக்கம் செய்யுமா தேர்தல் ஆணையம்!

10 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் நரேந்திர மோடி, சாதனைகளைச் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க முடியாத அவலத்தில் இருக்கிறார். பணமதிப்பழிப்பு கொண்டு வந்து பல லட்சக் கணக்கானோரை வரிசையில் நிற்க வைத்து, அதில் ஆயிரக்கணக்கானோரை உயிரிழக்க வைத்ததுதான் பாஜக ஆட்சியின் சாதனை. ஜிஎஸ்டியை திணித்து பல்லாயிரக்கணக்கான சிறு குறு நிறுவனங்களுக்கு பூட்டுப் போட வைத்ததுதான் பாஜக அரசின் சாதனை. பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக வேளாண் சட்டங்களை திருத்தியமைத்து விவசாயிகளின் பெருங் கோபத்தை பெற்றதுதான் பாஜக அரசின் சாதனை. கொரோனா பேரிடரில் கொத்து கொத்தாக மக்கள் செத்து கொண்டிருந்தபோது வாசலில் நின்று கை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்று சொன்னதுதான் பாஜக அரசின் சாதனை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் தருகிறோம் என்று உறுதியளித்துவிட்டு, இருக்கிற வேலைகளையும் பறித்ததுதான் பாஜக அரசின் சாதனை. சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்டு, எல்லோர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருகிறோம் என்று...

கொளத்தூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கொளத்தூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கொளத்தூர் : கொளத்தூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 09.04.2024 அன்று கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பாடகர் கோவன் குழுவின் கலை நிகழ்ச்சி மற்றும் கலகக்காரன் குழுவின் தெருக்கூத்து நாடகத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு கொளத்தூர் நகரத் தலைவர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் முன்னேற்றக் கழக கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு குமார், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தீனரட்சகன், திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி மாவட்ட து. அமைப்பாளர் முருகேசன், ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கழக கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் நன்றி கூற பொதுக்கூட்டம்...

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தப்பட்டு சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு 14.04.2024 அன்று காலை 9 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். மடிப்பாக்கம் பகுதிக் கழக சார்பில் ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் – ஆதரவாளர்கள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஈரோடு : புரட்சியாளர் அம்பேத்கர் அவரது 134வது பிறந்த நாளை முன்னிட்டு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர்...

ரூ.12,000 கோடிக்கு மேல் சுருட்டிய பாஜக அடுத்தடுத்து அம்பலமாகும் மெகா ஊழல்கள்!

ரூ.12,000 கோடிக்கு மேல் சுருட்டிய பாஜக அடுத்தடுத்து அம்பலமாகும் மெகா ஊழல்கள்!

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மூலம் நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திர திட்டம் மூலம் ரூ.12,000 கோடிக்கு மேல் ஒன்றிய பாஜ சுருட்டிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, ‘பிஎம் கேர்ஸ்’ நிதித் திட்டம் மூலம் பாஜ செய்த முறைகேடுகளை முழுமையாக வெளிக் கொணர வேண்டும் என எதிர்க்கட்சிகள் சட்டப்போராட்டத்தைத் துவக்கியுள்ளன. தேர்தல் பத்திர திட்டம் மூலம் திரட்டிய நிதி விவரத்தை மறைக்க ஒன்றிய பாஜ அரசும், பாரத ஸ்டேட் வங்கியும் சேர்ந்து எந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட்டனவோ, அதைவிட தீவிரமாக பிஎம் கேர்ஸ் திட்ட நிதி விவரத்தை மறைக்க முயற்சி செய்து வருகிறது பாஜ. இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியும் ஒன்றிய அரசு வாய் திறப்பதாக இல்லை. நீதித்துறையையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை போல, எந்த நோட்டீசுக்கும் முறையான பதில் தராமல் அலட்சியம் காட்டி வருகிறது. கொரோனா தொற்று இந்தியாவில் பரவியது 2020 ஜனவரி 30ம் தேதி...

சேத்துப்பட்டு இராசேந்திரன் இல்லத் திறப்பு விழா

சேத்துப்பட்டு இராசேந்திரன் இல்லத் திறப்பு விழா

வட சென்னை : வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் – அலமேலு ஆகியோரின் இல்லத் திறப்பு விழா 14.04.2024 காலை 11:30 மணியளவில் அயனாவரம் முனுசாமி தெருவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக தலைவர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் மற்றும் தோழர்கள் – குடும்ப உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.. நிறைவாக கழகம் சார்பில் நினைவு பரிசாக புத்தர் சிலையை கழகத் தலைவர் வழங்கினார். பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை!

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை!

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மின்னணு பொருட்களில் 30 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஆனால் இது 2021ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் டாலராகவே இருந்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மட்டுமே 40% பங்கைக் கொண்டிருக்கிறது. தி.மு.க அரசு கடந்த 3 ஆண்டுகளில் முதலீடுகளை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகளே இதை சாத்தியமாக்கி உள்ளது. பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

இந்தியாவா? பாரதமா?

இந்தியாவா? பாரதமா?

சென்னை : நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 20வது சந்திப்பு “இந்தியாவா? பாரதமா?” என்ற தலைப்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு கழகத் தலைமை அலுவலகத்தில் அன்னூர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஆர்.எஸ்.எஸ்-ம் – ‘பாரதமும்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளர் பிரகாசும், ‘பாரதத்தில்’ தீண்டத்தகாதவர்களின் நிலை என்ற தலைப்பில் ஆர்த்தியும் சிறப்புரையாற்றினார்கள். அடுத்ததாக ‘பாரதத்தை’ எதிர்க்கும் தெற்கு என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். இதில் 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

மேட்டூர் ஆர்.எஸ்-இல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

மேட்டூர் ஆர்.எஸ்-இல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

மேட்டூர் ஆர்.எஸ் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 10.04.2024 அன்று மேட்டூர் ஆர்.எஸ் வணிக வளாகம் முன்பு நடைபெற்றது. பாடகர் கோவன் குழுவின் கலை நிகழ்ச்சி மற்றும் கலகக்காரன் குழுவின் தெருக்கூத்து நாடகத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. பொதுக் கூட்டத்திற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் தலைமை தாங்கினார், RS பகுதித் தலைவர் முரளிதரன் வரவேற்புரையாற்றினார். திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் கவிஞர் வைரமணி, கழக மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிறைவாக RS பகுதி செயலாளர் கு.விவேக் நன்றி கூற பொதுக் கூட்டம் நிறைவுபெற்றது. பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

தலையங்கம் – பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?

தலையங்கம் – பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?

ஆரிய – திராவிட யுத்தமாகவே களத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல். மீண்டும் ஒருமுறை பாஜக அரசு அமைந்தால், அது எத்தகைய பேராபத்தை விளைவிக்கும் என்பதை, பாஜகவினர் பரப்புரையில் உதிர்க்கும் வார்த்தைகளே நமக்கு எச்சரிக்கையூட்டுகின்றன. வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவிக நகர் பகுதியில், திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து ஏப்ரல் 1-ஆம் தேதி பரப்புரையில் ஈடுபட்ட, திமுக நிர்வாகி தமிழ்வேந்தன், “மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம ஆட்டுக்கறியும் சாப்பிட முடியாது, மாட்டுக்கறியும் சாப்பிட முடியாது. கோழிக்கறியும் சாப்பிட முடியாது. தயிர் சாதம், புளி சாதம்,, சாம்பார் சாதம் மட்டும் தான் சாப்பிட முடியும்” என்று மக்கள் மத்தியில் பேசினார். தேர்தல் வெற்றிக்காக தரைமட்ட அளவுக்கு திமுக விமர்சனங்களை வைப்பதாக இந்த காணொளியை பகிர்ந்து பாஜகவினர் வசைபாடினர். ஆனால் அதுதான் நடக்கப்போகிறது என்பதை பிரதமர் மோடியே நேரடியாக எச்சரித்துவிட்டார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்கள் லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வியுடன் இணைந்து...

திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்! ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பியதால் வெறிச்செயல்

திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்! ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பியதால் வெறிச்செயல்

திருப்பூர் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளரான தோழர் சங்கீதா ஆத்துப்பாளையம் பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கழக நிகழ்வுகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் குடும்பத்தோடு பங்கேற்பவர் தோழர் சங்கீதா. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.பி.முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜகவினர் ஆத்துப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்திருந்தனர். அப்போது அங்கு துணிக்கடை நடத்தி வந்த சங்கீதாவிடம் பாஜகவினர் வாக்கு சேகரிக்க சென்ற போது நாப்கின், அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி விதித்தது குறித்து சங்கீதா கேள்வி எழுப்பினார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவினர் சங்கீதாவின் கடைக்குள் வந்து “நீ யார் கேள்வி கேட்க?” என்று கேட்டு தகாத வார்த்தைகளில் பேசி கடுமையாக தாக்கினார்கள். அப்போது ‘‘நான் கேள்விதானே கேட்கிறேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால் தாக்குவீர்களா?’’ என...

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

சேலம் : மேட்டூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” பொதுக்கூட்டம் 06.04.2024 அன்று மேட்டூர் சின்ன பார்க் திடலில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் தலைமை தாங்கினார், கீ.கோ.தேன்மொழி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பாடகர் கோவன் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் செல்வேந்திரனின் இயக்கத்தில் “கலகக்காரன்” நையாண்டி தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ம.க.இ.க பாடகர் கோவன் ஆகியோர் மோடி ஆட்சி தொடரலாமா? என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேட்டூர் நகர தி.வி.க.செயலாளர் சு.குமரப்பா நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத்...

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2) – விடுதலை இராசேந்திரன்

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2) – விடுதலை இராசேந்திரன்

வேலை இல்லாத் திண்டாட்டம் மிக மோசம் வேலைவாய்ப்பு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என்று உறுதி கூறி பதவிக்கு வந்தார் மோடி. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுவோம். இஸ்ரேல் நாடு இப்பொழுது காசா மக்கள் மீது மிகப்பெரிய போரை தொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏராளமானவர்கள் அங்கே உயிர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் ஜியோனிசம் என்ற கொள்கையை பின்பற்றுகிறது. இது இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. மோடி ஆட்சி பேசுகிற இந்து ராஷ்டிரமும் இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே சித்தாந்த ரீதியில் இருவரும் ஒரே தளத்தில் பயணிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அங்கே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும்போது இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை அனுப்புகிற முயற்சியில் ஒன்றிய ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக இஸ்ரேல் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டு 45 ஆயிரம்...

தயாநிதி மாறன் பெரியார் சிலைக்கு மரியாதை!

தயாநிதி மாறன் பெரியார் சிலைக்கு மரியாதை!

தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன் 09.04.2024 அன்று திருவல்லிக்கேணி பகுதியில் வாக்கு சேகரிக்க வருகைதந்தார். அவருக்கு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கழக படிப்பகம் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

ஈரோடு இரத்தினசாமியின் தாயார் காலமானார்!

ஈரோடு இரத்தினசாமியின் தாயார் காலமானார்!

ஈரோடு : கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமியின் தாயார் மருதாம்பாள் (வயது 90) 08.04.2024 அன்று வயது மூப்பின் காரணமாக முடிவெய்தினார். ஈரோடு முத்தூர் கார்வழி ரைஸ்மில் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் 09.04.2024 அன்று அம்மையாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

தமிழ்நாடு மாடல் வளர்ச்சி மாடல்

தமிழ்நாடு மாடல் வளர்ச்சி மாடல்

தேர்தல் கள ஆய்வுக்காக தமிழ்நாடு வந்திருந்த மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் எக்ஸ் தளத்தில் இட்டிருக்கும் பதிவுகள் கவனம் பெற்றுள்ளன. “தமிழ்நாடு அரசியல் எப்போதுமே என்னை ஈர்த்திருக்கிறது. ஏனெனில் தமிழ்நாடு தனக்கென ஒரு தனி வழி அமைத்து, அதில் முன்னேறி வந்திருக்கிறது. இந்தியா கொண்டிருக்கும் பன்மைத்துவமே அதன் வலிமை. தமிழ்நாடு அதற்கு நல்ல உதாரணம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான பரந்த கூட்டணியை வீழ்த்துவது எளிதல்ல. யார் எதிர்க்கட்சி என்பதற்கு இங்கே போட்டி நடக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளால் கோவை 30% சிறு, குறு நிறுவனங்கள் மூடுவிழா கண்டுவிட்டன. தொழில் நிறுவனங்கள் வைத்திருந்த சிலர் இப்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் மட்டுமே சிறிய அளவிலான ஆதாயம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டு களத்தை ஆய்வு செய்ததில் நான் புரிந்துகொண்ட விஷயம் இதுதான். குஜராத் மாடலைப் பற்றி பேசும் நாம், சமூகநீதி மற்றும்...

வினா விடை

வினா விடை

• காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் தேர்தல் அறிக்கைப் போல் உள்ளது – மோடி சமூகநீதி – பெண்ணுரிமை – மாநில உரிமைகள் எல்லாம் இஸ்லாமியர்களுக்கானது. பெட்ரோல், டீசல், சிலிண்டர், டோல்கேட் கட்டண உயர்வுதான் இந்துக்களுக்கானது. • பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் கிளி ஜோசியம் பார்த்து தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டார் – செய்தி தாமதிக்காதிங்க… உடனே தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சொல்லி வெற்றியை அறிவிக்க சொல்லுங்க.. • திமுக சீரழித்த தமிழர் பண்பாட்டை நாங்கள் மீட்க வந்திருக்கிறோம் – ஜெ.பி.நட்டா யாரது, மதுரையில் எய்ம்ஸ் கட்டடப் பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டது என்ற சொன்ன அந்த நட்டா தானே. அடுத்தமுறை தமிழ்நாட்டுக்கு வரும்போது சமஸ்கிருதத்தில் பேசி தமிழர் பண்பாட்டை மீட்க போராடுங்க ஜீ.. • உடல்நிலை காரணமாக பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய முடியாது, நட்டாவுக்கு குஷ்பு கடிதம் இதுக்கு போய் கடிதம் எழுதி பத்திரிகையிலும் செய்தியாக்கிட்டிங்க.. நம்புரோம்...

தலையங்கம் – வீழ்த்த முடியாத கட்சியா பாஜக?

தலையங்கம் – வீழ்த்த முடியாத கட்சியா பாஜக?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கூட இன்னும் நடக்கவில்லை. ஆனால் மோடி மூன்றாவது முறையாக மோடி பிரதமராகி விட்டார் என்று மட்டும்தான் இன்னும் சில ஊடகங்கள் எழுதவில்லை. ரஷ்யாவை, சீனாவைப் போல ஒற்றைக் கட்சி ஆட்சிமுறைக்கு இந்தியாவும் வந்துவிட்டதோ எனத் தோன்ற வைக்கும் அளவுக்கு சில ஊடகங்கள் பாஜக செய்திகளை அணுகிக் கொண்டிருக்கின்றன. கடைசியாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான திட்டங்களை தயாரிக்குமாறு கேபினட் அமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. இன்னும் சில ஊடகங்களோ ஒரு படி மேலே போய், மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்கும்போது குறைவான எண்ணிக்கையிலான அமைச்சகங்களே இருக்கும் என்று எழுதியிருக்கின்றன. பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மோடிதான் வெற்றியாளர் என்று கருத்துக் கணித்துவிட்டன. எதிர்க்கட்சிகளால் நாடு தழுவிய அளவில் இந்தியா கூட்டணி பலமாக அமைக்கப்பட்டுள்ள போதிலும், கண்ணுக்கு எட்டிய வரை மோடிக்கு எதிரியே இல்லை என்று தேசிய ஊடகங்கள்...

காங்கிரஸ் கட்சியின்  ‘திராவிட’ வாக்குறுதிகள்! பாஜகவை வீழ்த்த வழிகாட்டும் ‘தமிழ்நாடு’

காங்கிரஸ் கட்சியின் ‘திராவிட’ வாக்குறுதிகள்! பாஜகவை வீழ்த்த வழிகாட்டும் ‘தமிழ்நாடு’

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி ஒரு நூற்றாண்டு ஆகிறது. அதன்பிறகு பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டது முதல் இப்போது வரை தமிழ்நாடு அடைந்திருக்கிற சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி என அனைத்துக்குமே மையப்புள்ளி இடஒதுக்கீடுதான். அதனால்தான் இந்தியாவின் மற்றெந்த மாநிலங்களையும் விட இடஒதுக்கீடு, சமூக நீதி சிந்தனைகளில் இன்றளவிலும் தமிழ்நாடுதான் முன்னோடியாக இருக்கிறது. நீட், புதிய கல்விக்கொள்கை போன்ற பாஜகவின் சூழ்ச்சிகரமான திட்டங்களை உடனுக்குடன் எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மதவாத வெறுப்புணர்வை உள்வாங்காத மாநிலம் தமிழ்நாடு. ஒட்டுமொத்தத்தில் சமூகநீதி களத்துக்கான சிந்தனைப் போக்கைக் கட்டமைக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டின் இந்த ‘திராவிட மாடல்’ சிந்தனைப்போக்குதான் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியாகவும், சவாலாகவும் இருந்து கொண்டிருக்கிறது. எனவே பாஜகவை வீழ்த்த இந்த சிந்தனைப்போக்கு கையிலெடுக்க தேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இருக்கிறது. இதை காங்கிரஸ் கட்சி நன்கு உணர்ந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டும் ஆவணமாக, அக்கட்சியின்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

• பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து தெருமுனைக் கூட்டங்கள் ஏப்ரல் 6,7,8,9 ஆகிய 4 நான்கு நாட்கள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வின் இறுதியில், 7,8 ஆகிய நாட்களில் நடைபெறும் பொது கூட்டங்களில் தலைவர் கொளத்துர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகள் திராவிட இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நடைபெறுகின்றன. • திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” என்ற தலைப்பில் இந்தியா கூட்டணியை ஆதரித்து நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் ஏப்ரல் 06,09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேட்டூர், கொளத்தூர், மேட்டூர் ஆர்.எஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில் பாடகர் கோவன் குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும். பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

திருப்பத்தூரில் இல்ல திறப்பு விழா

திருப்பத்தூரில் இல்ல திறப்பு விழா

திருப்பத்தூர் : வாணியம்பாடியை அடுத்துள்ள புல்லூர் கிராமத்தில் கழக வாணியம்பாடி செயலாளர் சுரேஷ்-இன் இல்லத் திறப்பு விழா மற்றும் கழக கொடியேற்று விழா 17.3.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்வாக ஜெய்கர் – மருது ஆகியோரின் இசை நிகழ்ச்சி அமைந்தது. விழாவை நிலா தொகுத்து வழங்கினார். விழாவிற்கு வேலூர் மாவட்டத் தலைவர் திலிபன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.ப.சிவா, மாவட்டப் பொருளாளர் த.சதிஷ் சமத்துவன், பேர்ணாம்பட்டு நகரச் செயலாளர் பார்த்திபன், கஜேந்திரன், ஆசிரியர் பாஸ்கரன், செந்தில், வேலூர் சதிசு, ரேனு, பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர் அரவிந்த் செயசூர்யா, அமல்ராஜ், முரளி தன்மானன், வழக்கறிஞர் பாலகுமாரன், வழக்கறிஞர் திராவிட பாண்டியன், ஆனஸ்ட், செ.ராஜி, செல்வக்குமார், புருசோத்தமன், செல்வக்குமார், செயக்குமார், சிலம்பரசன், பிரவினா, வைரமணி, சுகந்தி யாழினி, கனல்விழி, கயல்விழி, யாழ்வெண்பா, மோகேஷ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். விசிக மண்டலச் செயலாளர் இரா.சுபாசு சந்திர...

திமுக வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

திமுக வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

மதுரை : இந்தியா கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனை மதுரை மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமையில் 31.03.2024 அன்று கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மேலும் இந்திராநகர் பிடி.காலனி, தகர பிள்ளையார் கோவில் தெரு, செல்லூர், மேலத் தோப்பு, கீழத் தோப்பு, மதிச்சியம், நெல்பேட்டை, ஒபுளாபடித்துறை, முனிச்சாலை, அந்தோணி மூப்பனார் தெரு, அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தனர். இதில் மாவட்டத் தலைவர் காமாட்சிப் பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, முருகேசன், கண்ணன் காமாட்சி உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். சென்னை : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியனை 30.03.2024 அன்று கழகத் தோழர்கள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். கடந்த 8 மாதங்களாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்...

ஈரோடு, ஆத்தூரில் தேர்தல் பரப்புரை

ஈரோடு, ஆத்தூரில் தேர்தல் பரப்புரை

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைக்கல் மேடு, மணிக்கூண்டு, உடையம்பட்டி, நரசிங்கபுரம், முல்லைவாடி, ராஜேந்திரா பேக்கரி உள்ளிட்ட ஆறு இடங்களில் பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கி மார்ச் 15 வரை நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பெரியார் விழுதுகள் ரிஷிவிந்தன் – அரவிந்தன் ஆகியோரின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் மகேந்திரன் – கணபதி குழுவின் அரசியல் நையாண்டி நடைபெற்றது. செல்வராஜ், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஈரோடு : ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திராவிடர் விடுதலைக் கழகமும் சமூகநீதி கூட்டமைப்பும்...

ராமராஜ்யத்துக்கு அரசியல் சட்டமே கூடாது –- சங்கராச்சாரி கூறுகிறார்!

ராமராஜ்யத்துக்கு அரசியல் சட்டமே கூடாது –- சங்கராச்சாரி கூறுகிறார்!

அரசியல் சட்டம் எழுதப்பட்ட போது, அது ராமராஜ்ஜியத்துக்கு எதிரானது என்றார் காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி. “ராமராஜ்யம் ஏற்பட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களின் வாரிசுகள் ஜனநாயகம் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறார்கள். ராமர் புதுசாக ராஜநீதி எதுவும் செய்து (அதாவது சட்டங்களை உருவாக்கி) ராஜ்ய பாரம் நடத்தவில்லை தன் அபிப்பிராயம், தன் காரியம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க சாஸ்திரத்தைப் பார்த்து அப்படியே பண்ணினவர் ஒருவர் உண்டு என்றால் அது ராமச்சந்திர மூர்த்தி தான். மநு தர்மத்தை காலம் முதலாக தசரத சக்கரவர்த்தி வரை எந்த தர்ம சாஸ்திர ஆட்சி நடந்ததோ அதையே தான் ராமரும் நடத்திக்காட்டினார் என்று சங்கராச்சாரி கூறியதோடு பாமர மக்களுக்கு உரிமைகளை வழங்கினால் மோசடிகள் – ஏமாற்றுகள் தொடங்கிவிடும் என்றார். இது குறித்து அவர் கூறியது. “ஏராளமான பாமர ஜனங்களை நேராக ராஜ்ய விசயங்களில் கொண்டுவருவதில் அநேக தப்புத்தண்டாக்கள், ஏமாற்று மோசடிகள் நடந்துவிடலாம் என்ற கருத்தை அலட்சியம்...

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?

கடந்த 10 ஆண்டுகால மோடியின் தலைமையிலான பாஜக ஒன்றிய ஆட்சி நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு சென்றிருக்கிறது. இதனுடைய தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ் இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை முதன்மையாகக் கொண்டது. அந்த லட்சியத்தை செயல் வடிவமாக்கும் முயற்சியில் தான் பாஜக ஆட்சி தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனைகள் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனைகளே அல்ல. மதச்சார்பற்ற கொள்கையோடு நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவும் ஒரு நாட்டை மதச் சார்புள்ள ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு இங்கே ஜனநாயகமும் ஜனநாயகக் கட்டமைப்புகளும் மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. எனவே ஜனநாயகத்தையும் ஜனநாயகத்தின் நிறுவனங்களையும் சீர்குலைத்து அவைகளை பலவீனம் ஆக்க வேண்டும். முதலில் நாடாளுமன்றத்தை பார்ப்போம். நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக சீர் குலைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக நசுக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வராமல் வெளியேற்றப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான...

பாஜகவின் சட்டவிரோத முயற்சி தகர்ப்பு!

பாஜகவின் சட்டவிரோத முயற்சி தகர்ப்பு!

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் 27.02.2024 அன்று பாஜகவினர் தேர்தல் பணிமனையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். தகவலறிந்த திருவல்லிக்கேணி பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் சென்று உரிய அனுமதியின்றி இங்கு பாஜகவினர் தேர்தல் பணிமனையை திறக்க முயற்சிக்கின்றனர். எனவே காவல்துறை இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த பின்பு பாஜக தேர்தல் பணிமனை அமைக்கும் முயற்சியை கைவிட்டது. பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்