கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

தமிழ்மதி-பிரகாஷ் இணையேற்பு விழா
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மின்னக்கல் பகுதியைச் சார்ந்த திக வெண்ணந்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் செல்வகுமார் – மணிமேகலை ஆகியோரின் மகள் தமிழ்மதி அவர்களுக்கும், ராணிப்பேட்டை, நெமிலி வட்டத்தைச் சார்ந்த சௌந்தர் காந்திமதி ஆகியோரின் மகன் பிரகாஷ் அவர்களுக்கும் 06.10.2025 திங்கட்கிழமை அன்று காலை 11 மணியளவில் ஓலைப்பட்டியில் மணமகள் இல்லத்தில் சுயமரியாதை வாழ்க்கை இணை ஏற்பு விழா திராவிடர் கழகம் (பெரியார் அறக்கட்டளை தலைவர்) பொத்தனூர் க. சண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வி.சி.க நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் அன்பரசன் வரவேற்புரையாற்றினார். திக (மாநில ஒருங்கிணைப்பாளர்) ஊமை ஜெயராமன், திக (நாமக்கல் மாவட்டத் தலைவர்) குமார், திவிக (நாமக்கல் மாவட்டத் தலைவர்) சாமிநாதன், வி. சி. க (நாமக்கல் சேலம் மண்டல துணைச் செயலாளர்) அரசன், திவிக ( தலைமைக் குழு உறுப்பினர்) காவை. ஈஸ்வரன், திக(சேலம் மாவட்டத் தலைவர்) வீரமணிராஜ், திக (சேலம் மாவட்டச் செயலாளர்) மூணாங்கரடு சரவணன், பகுத்தறிவாளர் கழக நாமக்கல் மாவட்டத் தலைவர் வீரமுருகன் ஆகியோர் கருத்துரையாற்றி மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கழகத் தலைவர் கருத்துரையாற்றி, தமிழ்மதி – பிரகாஷ் ஆகிய இணையர்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து, “நமக்கு ஏன் இந்த இழிநிலை” என்ற புத்தகத்தை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிறைவாக திக வெண்ணந்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் செல்வகுமார் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தி.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் வை. பெரியசாமி, தி. க. ஆட்டையாம்பட்டி பகுதிச் செயலாளர் காளியப்பன், தி. க. சேலம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வீரச்செல்வன் (எ) துரை சக்திவேல், தி. க நாமக்கல் மாவட்டச் துணைத் தலைவர் அசேன், சின்னப்பம்பட்டி கிளை பொறுப்பாளர் உல. கண்ணடி, உல. கருணாநிதி, தி. க இளைஞரணி பொறுப்பாளர் அண்ணாதுரை, செங்குட்டுவன், சதிஷ்குமார் ஆகிய திராவிடர் கழகத் தோழர்களும், நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் சார்ந்த அறிவாயுதம், ராமசந்திரன் ஆகிய பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும், திராவிடர் விடுதலைக் கழக ராசிபுரம் நகரப் பொறுப்பாளர் காரல் மார்க்ஸ், சுமதி, கொளத்தூர் குமரேசன், கணேஷ், அவினாசி ஆகிய கழகத் தோழர்கள் மற்றும் விசிக, திமுக ]மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
———————————————————————————————————————
ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
உள் இடஒதுக்கீடு உரிமை நாள் மற்றும் நெருப்புத் தமிழன் நீல வேந்தன் வீரவணக்க நாளில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு பட்டியல் சமுதாய இட ஒதுக்கீட்டை வகைப்படுத்திட வலியுறுத்தி தமிழக முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. ஆதித்தமிழர் பேரவையின் சேலம் மாவட்டத்தின் சார்பாக 26.09.2025 வெள்ளிக்கிழமை அன்று கோட்டை மைதானத்தில் மாலை 4 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப் செயலாளர், சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ. டி. ஆர். சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ஆதித்தமிழர் பேரவையின் மாநகர மகளிர் அணி செயலாளர் கல்யாணி, மாவட்ட மாணவரணி செயலாளர் தினேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மாணிக்கம், மாவட்ட தொண்டரணி செயலாளர் அருள்குமார், சேலம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணா, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் யுவராஜ், மாவட்ட தொண்டரணி துணைச் செயலாளர் தனுஷ், ஓமலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர், அருந்ததியர் மக்கள் இயக்கம் கு. தங்கராசு, தி க சேலம் மாவட்ட மாவட்டத் தலைவர் வீரமணிராஜி, மதிமுக மாநகர செயலாளர் அ.அருள்மாது, புஇமு அ. வின்சென்ட், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியைச் மாரியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவாக உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொ. கிருஷ்ணன், சேலம் மாநகரத் தலைவர் பாலு, சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், தோப்பூர். கண்ணன், அருள் பாண்டியன், பாலாஜி, நவராஜ், தேவ மூர்த்தி, காவலாண்டியூர் அவிநாசி, அம்பிகாபதி, சேலம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கவியரசு, சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
—————————————————————————————————————
சீனி தேவசுந்தரம் நினைவு படத்திறப்பு
தேவகோட்டை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவராக செயல்பட்ட சீனி தேவசுந்தரம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு மதுரை மாவட்டக் கழகத்தின் (காப்பாளர்) தளபதி தந்தையும், தேவகோட்டை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் சீனி தேவசுந்தரம் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தளபதி இல்லத்தில் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி சீனி தேவசுந்தரம் படத்தை திறந்து வைத்து திராவிடர் இயக்கம் சார்ந்த செய்திகளை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வில் தமிழ் மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன், தமிழ்நாடு பெண்கள் இயக்கத் தலைவர் தொ. ஆரோக்கிய மேரி, மணியம்மை பள்ளியின் தாளாளர் வரதராசன், ரஜினி, புரட்சிக் கவிஞர் பேரவையின் நாகபாலன், வழக்கறிஞர் பகத்சிங், தமிழ் தேசிய பேரியக்க தோழர்கள் மற்றும் அவரின் நண்பர்கள், குடும்ப நண்பர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். கழகத் தோழர்கள் மதுரை மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, மேலூர் பகுதி பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, அழகர், முருகேசன், வாசுகி தோழர்கள் கலந்து கொண்டனர்.
———————————————————————————————————————-

மகிஷா மண்டல விழா

மகிஷா மண்டல விழா குழு சார்பாக கர்நாடகா மாநிலம், மைசூர் மாவட்டத்தில் உள்ள டவுன் ஹாலில் 24.09.2025 புதன்கிழமை அன்று காலை 11 மணி அளவில் மகிஷா மண்டல விழா நடைபெற்றது.
டவுன்ஹால் வளாகத்தில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி மேடையில் அமைத்த புத்தர், அம்பேத்கர், மகிஷாசூரன் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கர்நாடக மாநில ஓய்வுப்பெற்ற முன்னாள் துணை காவல் ஆணையர், இந்திய புத்த கவுன்சில் எஸ். சித்தராஜு ஐ.பி.எஸ்., ஒருங்கிணைத்தார். முன்னாள் மைசூர் மேயர் மற்றும் மகிஷா மண்டல விழா குழுத் தலைவர் புருஷோத்தம் தலைமையேற்று உரையாற்றினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி நமக்கான சிந்தனையாளர்களை, நமக்கான தலைவர்களை, நமக்காக நின்ற முன்னோர்களை இழிவு படுத்துகிற போக்கை தகர்த்தெறிய, நம்மை கொண்டிருக்கிற இன்றைக்கு வரைக்கும் இழிவுபடுத்தி, நாம் தலை தூக்காமல் செய்கின்ற ஆரிய பார்ப்பன சிந்தனையாளர்களை, நாம் எதிரிகளாக அடையாளப்படுத்துவோம், அவர்களுடைய சூழ்ச்சிகளில் இருந்து நம்மை விடுவிப்போம் என்று கூறி உரையாற்றினார்.
சுவாமிஜி உரிவீங்க பெட்டி மாதா ஞானபிரகாஷ் சுவாமி, புகழ்பெற்ற சிந்தனையாளார் பேராசிரியர் கே. எஸ். பகவான், முன்னாள் துணை காவல் ஆணையர், இந்தியா புத்த மத கவுன்சில் எஸ். சித்தராஜு, ஐ. பி. எஸ், மகிஷா மண்டல மைசூர் என்ற புத்தகத்தை எழுதியவர் சித்த ஸ்வாமி, நரசை மானச சங்கோத்திரி டாக்டர். திலீப் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.
கர்நாடக மாநிலம் கழகத் தோழர் சித்தார்த்தன், கற்பி ஒன்றுசேர் குழுவைச் சார்ந்த நாகரத்தினா, பி. ஜார்ஜ், பீம்ராவ் மற்றும் இடதுசாரி அமைப்புகள், முற்போக்கு சிந்தனை அமைப்புத் தோழர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.
திருநாகேஸ்வரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா
தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா பெரியார் கல்வி விழிப்புணர்வு சங்கம் சார்பில் 20.09.2025 சனிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் ஆர்.பி.எஸ் நினைவரங்கம் கடைவீதி பகுதியில் நடைபெற்றது.
திருநாகேஸ்வரம் மேலவீதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ரஞ்சன் இசைக்குழு, கங்கை கருங்குயில் கலைக்குழு பறை முழக்கத்தோடு பேரணியாக 300-க்கும் மேற்பட்ட பெண்கள், 100 மேற்பட்ட ஆண்கள் ஆர்.பி.எஸ் ஸ்டாலின் நினைவு அரங்கத்திற்கு வந்து சேர்ந்தனர்.
நிகழ்ச்சிக்கு பெரியார் கல்வி விழிப்புணர்வு சங்கத் தலைவர், கவுன்சிலர் நா. தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. திருநாகேஸ்வரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் உதயா, திராவிட விடுதலைக் கழக தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சோலை மாரியம்மன், குடந்தை ஆர்.பி.எஸ் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி மேடையில் கரகாட்டம், கட்டைக்குச்சி ஆட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், பெரியார் பற்றிய பாடல்கள் என பாடினார். வழக்கறிஞர் ஆர்.பி.எஸ் விஜய் ஆனந்த் வரவேற்புரையாற்றினார்.
பேராசிரியர். சுந்தரவள்ளி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றையும், பெரியார் தமிழ்நாட்டு மக்களுக்காற்றிய தொண்டுகள் பற்றியும் உரையாற்றினார். இவருடைய பேச்சை கேட்டு அங்கிருந்த பெண்கள் பலர் பாரட்டினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நீதிகட்சி சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த நன்மைகளை பற்றி விளக்கி சிறப்புரையாற்றினார்.
மதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரா. முருகன், பெரியார் கல்வி விழிப்புணர்வு சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. குமார், மருத்துவர். ராதிகா வேணுகோபால், கழகத் தோழர் குடந்தை ஒன்றியத் அமைப்பாளர் வெங்கடேசன், திமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 16102025

You may also like...