ஆக்கிரமிப்பு கோயில்கள்; விளக்கம் கேட்கிறது உயர்நீதிமன்றம்

பொது இடங்களிலும், சாலைகளிலும் (சட்ட) அனுமதி பெறாமல், கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் அதேபோன்று மத நிறுவனங்களால் கட்டப்பட்ட அமைப்புகள் எவையும் இல்லை என்பதை உறுதி செய்து தகவல் தெரிவிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து அரசிடம் விளக்கம் கேட்டு இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் சிறீவத்சவா, ஜஸ்டிஸ் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு இப்படி ஒரு முக்கிய வழக்கைத் தாங்களே பதிவு செய்துள்ளது.

31.1.2018 அன்று தந்த ஒரு நீதிமன்றத் தீர்ப்பில், ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றிடவேண்டும் என்று தீர்ப்பு தந்தும், ஆக்கிரமிப்புக் கோவில்கள் அமைப்புகள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் பாயாமல், மறைமுகமாக அதனை ஊக்குவிக்கும் வகையில், காவல்துறையும், அரசும் கண்டும் காணாததுபோல அலட்சியப்படுத்தி வருவதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பெரியார் முழக்கம் இதழ் 30102025

You may also like...