கழுதைகளை காணோம்

மனித குல வரலாற்றில் பொதி சுமந்து தொண்டாற்றிய கழுதை இனம் மறைந்து வருகிறது. நாடு முழுதும் 70 விழுக்காட்டிற்கு மேற்பட்ட கழுதைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன என்றும், மத்திய பிரதேச மாநிலத்தில் 94 விழுக்காடு கழுதைகள் காணவில்லை என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ம.பியில் 7 மாவட்டங்களில் ஒரு கழுதை கூட இல்லை. சீனாவில் முகப்பொலிவுக்கும், உடல் தோலுக்கும் கிரீம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கழுதைகள் கொல்லப்பட்டு ஏற்றுமதியாவதும் காரணம் என்று கூறப்படுகிறது. பசுமாட்டுக்குத் தான் இந்த நாட்டில் மதம் கண்ணீர் வடிக்கும். கழுதை பற்றி கவலைப்படாதது காரணம் பசு ’பிராமணர்’ பிரிவிலும் கழுதை ’சூத்திர’ பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளது.

பெரியார் முழக்கம் இதழ் 30102025

You may also like...