ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் மீது பாலியல் புகார்கள் வருவது ஏன்? எஸ்.வி.சேகர் விளக்குகிறார்!
பாஜகவின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளராக இருந்த கேசவ விநாயகம் மீதான பெண்கள் தொடர்பாக ஏராளமானப் புகார்கள் உண்டு என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் மீதான பாலியல் புகார்கள் வருவதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். இது குறித்து ‘தினகரன்’ நாளேட்டுக்கு பிப்-14, 2026 அன்று அவர் அளித்த பேட்டி..
கேசவ விநாயகத்தை பாஜவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியதை எப்படி பார்க்கிறீர்கள்?
கேசவ விநாயகம் 2016ம் ஆண்டே நீக்கப்பட வேண்டும் என நான் சொல்லிக் கொண்டு இருந்தேன். இன்றைக்குக் கூட ஆர்.எஸ்.எஸ்-சில் முக்கியமானது தனிமனித ஒழுக்கம் எனச் சொல்லியுள்ளார்கள். அது நிறையப் பேருக்கு இருப்பது போன்றே தெரியவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பே 163 பேர் புகார் கொடுத்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்-சில் உள்ளவர்கள் ஆண்களுடனே பழகியதால், மாறுபட்ட பாலினத்தைப் பார்க்கும்போது பிரச்னை வந்து விடுகிறது. இன்றைக்காவது கேசவ விநாயகத்தை நீக்கியுள்ளதைப் பார்க்கும் போது அங்குள்ள நிறையப் பெண்கள் சந்தோஷப்படுவார்கள். பாஜவினர் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை எனச் சொல்லும் போது, தமிழ்நாட்டு பாஜவில் தான் பாதுகாப்பில்லை என நிறையப் பெண்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கொஞ்சம் பாதுகாப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. பெரியார் முழக்கம் இதழ்19022026
