கழகம் சார்பில் தோழர் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்
சென்னை: தோழர் நல்லகண்ணு விடைபெற்றார். 25.02.2026 அன்று தியாகராயர் நகர் பாலன் இல்லத்தில் அவரது உடலுக்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் பங்கேற்று வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.
போராசிரியர் சரஸ்வதி, தபசிகுமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), உமாபதி (மாவட்டச் செயலாளர்), இராவணன் (மாவட்டத்துணைச் செயலாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (மாவட்ட அமைப்பாளர்), அருண் (இளைஞரணி அமைப்பாளர்), பேரன்பு (சென்னை மாவட்ட மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்) மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
சேலம்: இந்திய பொதுவுடைமை கட்சியின் நங்கவள்ளி ஒன்றியம் சார்பாக நல்லகண்ணு அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தோழர் நல்லகண்ணு அவர்களின் படத்திற்கு மலர் தூவி, இரங்கல் உரையாற்றி வீரவணக்கம் செலுத்தினார்.
எம்.எம் ரத்தினவேல் (காங்கிரஸ்), நல்லபிரபு (தி.மு.க, நங்கவள்ளி மத்திய ஒன்றியச் செயலாளர்), (தி. மு.க ) ஜெயவேல், மாணிக்கவேல் (அ.தி.மு.க நங்கவள்ளி வடக்கு ஒன்றியச் செயலாளர்), என்.ஆர் ராஜகோபால் (சிபிஎம் நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர்), சிபிஅய் பொறுப்பாளர்கள் தங்கவேல் (விவசாய சங்க ஒன்றியத் தலைவர்), நடராஜன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), சண்முகம் (மாவட்டக் குழு உறுப்பினர்), கோகுலகிருஷ்ணன் (நங்கவள்ளி ஒன்றிய துணைச் செயலாளர்) ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள். கழகத் தோழர்கள் உமாசங்கர் (வனவாசி நகரப் பொறுப்பாளர்), வீரக்கல் இந்திராணி, வனவாசி கதிர், பன்னீர், காவை அவினாசி, கொங்கணாபுரம் கோகுலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 05032026
