தேர்தல் பரப்புரையில் பம்பரமாய் சுழலும் கழகத் தோழர்கள்

தமிழ்நாட்டில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து கழகத் தலைமைக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்தும் விதமாக திருப்பூர்,சேலம்,சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தயாராகி வருகின்றனர். தினமும் 3 முதல் 4 தெருமுனை கூட்டங்கள், பொதுகூட்டங்கள் என கழகத் தோழர்கள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் நாள் நடைபெற்ற பரப்புரை செய்திகளின் தொகுப்பு:
திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் ‘தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!’ என்றத் தலைப்பில் 27.02.2026 அன்று புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம்- பெரியார் சிலை, சிடிசி வளைவு,வீரபாண்டி ஆகிய இடங்களில் நாள் முழுவதும் தொடர் பரப்புரைக் கூட்டங்கள் முகில்ராசு முன்னிலையில் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையத்தில் பரப்புரை தொடக்கமாக கழகம் சார்பாக நல்லகண்ணு அவர்களுக்கு கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ் அமுதன் (மார்க்சிய முற்போக்காளர்கள் பேரவை), முகில் இராசு (மாவட்டத் தலைவர்) வீர வணக்க உரை நிகழ்த்தினர். தொடர்ந்து “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை முடிவு செய்வோம்!” தெருமுனை கூட்டம் கழக சமூக ஊடக பொறுப்பாளர் பரிமளராசன் தொடக்க உரை நிகழ்த்தினார். சோழன் (ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்டச் செயலாளர்), அருண் நவீன மனிதர்கள் குழுவின் அமைப்புச் செயலாளர்), கார்மேகம் (மக்கள் பாதுகாப்பு அமைப்பு) ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
கழகத் தோழர்கள் முத்து, சங்கீதா, முகில் இராசு, அய்யப்பன் (வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), குமார் (த.மு எ ச மாவட்டச் செயலாளர்) ஆகியோர் திமுக ஆட்சி தொடர வேண்டிய அவசியம் குறித்தும், சாதனைகள் குறித்தும் மக்கள் மத்தியில் கருத்துரைகளை நிகழ்த்தினார்கள். இராமசாமி (தெற்கு பகுதிச் செயலாளர்), இனியன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.
செய்தி:பரிமளராசன்
சேலம்: மாவட்டக் கழகம் நங்கவள்ளி ஒன்றியத்தின் சார்பில் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்” திமுக ஆட்சியை உறுதி செய்வோம்! மதவெறி அரசியலை விரட்டி அடிப்போம்! 28.02.2026 நாள் முழுவதும் நங்கவள்ளி பேருந்து நிலையம், ஜலகண்டபுரம் பேருந்து நிலையம், எடப்பாடி பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), கிருஷ்ணன் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்) ஆகியோர் தலைமை வகித்தனர். பிரபாகரன் (மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்), தங்கதுரை (மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கோகுல் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தை கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்) தொடங்கி வைத்தார். மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), கோனூர் வைரமணி (திமுக தலைமைக் கழக பேச்சாளர், சேலம் மேற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவர்), சரவணபரத் (வழக்கறிஞர்-திமுக), சக்திவேல் (கழகத் தலைமைக் குழு உறுப்பினர்), மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), உமாசங்கர் (வனவாசி நகரச் செயலாளர்) ஆகியோர் பரப்புரை கூட்டத்தின் நோக்கங்களை பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர். சிவசண்முகம் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட நங்கவள்ளி பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சண்முகம், நங்கவள்ளி 10-வார்டு திமுக கவுன்சிலர் முத்துசாமி, திமுக 1-வது வார்டு பிரமுகர் பழனிச்சாமி மற்றும் உரையாற்றிய சரவணபரத் ஆகியோருக்கு நினைவுப் பரிசாக கழக வெளியீடுகள் வழங்கப்பட்டன. தோழர்கள் கதிர், மேட்டூர் ஆர்.எஸ் ஜெகதீஷ், மேட்டூர் ஆர்.எஸ் சுரேஷ், பொட்டனேரி ரவிக்குமார், மேட்டூர் முத்துராஜ், ராமச்சந்திரன், நிலவன், குடந்தை பாலன், நாகராஜ் (தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்), எடப்பாடி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கண்ணன் (நங்கவள்ளி நகரத் தலைவர்)நன்றி கூறினார்.
செய்தி: பிரபாகரன்.
சென்னை: தாம்பரம் பிப்-28 மாலை 6 மணிக்கு, சண்முகம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அருண் கோமதி (தாம்பரம் நகர அமைப்பாளர்) தலைமையில், ம.கி.எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைத்தார். மறைந்த பொதுவுடைமைத் தலைவர் நல்லகண்ணு படத்திறப்பு செய்தனர். இரா. உமாபதி (மாவட்டச் செயலாளர்),கார்மேகம், பொன்ராஜ்-பேரன்பு (தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்),லதா,சத்யா குழுவினரின் சிந்தனையைத் தூண்டும் பாடல்களும், நையாண்டி நிகழ்ச்சியும் அப்பகுதி வியாபார மக்களை ஈர்த்தது.
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் தமிழ். கா. அமுதரசன், மமக காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சரீம் கான், இடதுசாரி சிந்தனையாளர் பேரா பெ. அண்ணாதுரை, சிபிஎம் தாம்பரம் பகுதிக் குழு உறுப்பினர் ஜெயவேல், கல்லூரி மாணவர் மோரிசன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று கருத்துரையாற்றினார்கள். நிகழ்ச்சிக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா, விசிக மாவட்டச் செயலாளர் ப. சாமுவேல் எபினேசர், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் துரை. மணிவண்ணன், திக பொறுப்பாளர் மடிப்பாக்கம் ஜெயராமன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் நினைவுப் பரிசுகளை வழங்கினார். மேடை அமைக்கும் பணியை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், தோழர்கள் மயிலை சுகுமார், கொளத்தூர் சுகந்தன், தாம்பரம் நந்தகுமார், பல்லாவரம் தீபக், சுரேந்தர், அசோக்,காட்டான்குளத்தூர் கிறிஸ்டோ ஆகியோர் கவனித்துக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கும் பணியிலும், வணிகர்களிடம் நன்கொடை திரட்டும் பணியிலும் தோழர்கள் இரண்யா, மயிலை மனோகர், முழக்கம் உமாபதி, திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, வீரா, கேகே நகர் கார்த்தி ராஜேந்திரன், புகழேந்தி, கூடுவாஞ்சேரி சுபாஷ் ஆனந்த், வடசென்னை மனோஜ்குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.
மயிலாப்பூர் பகுதிக் கழகம் சார்பாக மயிலை இராவணன் ( மாவட்டத் துணைச்செயலாளர்) கழக ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு ரூ.10,000-அய் கழகப் பொதுச்செயலாளரிடம் ஒப்படைத்தனர். தாம்பரம் தோழர் பரணி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கூட்டம் நடத்திய விதத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வெகுவாகப் பாராட்டினார். அவருக்கு நினைவுப்பரிசாக கழக நூல்கள் வழங்கப்பட்டன. ரூ.2,000க்கு கழக வெளியீடுகள் விற்பனையாகின. மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், தோழர்கள் காவை அஜீத், கடலூர் சிவகுமார், ஜெயச்சந்திரன் (விசிக), லயோலா ஃபிரான்சிஸ், சிபிஎம் ஜாஃபர், செய்தியாளர் பிரசாந்த், வேளச்சேரி இம்மேனுவல் துரை, பிரீத்தி, தேன்மொழி (IT WING), ஷர்மிளா (மாணவர் கழகம்), யாழினி, தினியா, மயிலை மாணிக்கம், அருண், தாம்பரம் மகேஷ், அருவி ஊடகம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர்.
செய்தி: எட்வின் பிரபாகரன்
பெரியார் முழக்கம் இதழ் 05032026

You may also like...