தாய்மை புனிதம் உடைகிறது!
பாஜக ஆளும் வடமாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள்தொகை ஒருபக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வந்தாலும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறும் மாநிலங்களில் பழமைவாத சிந்தனைகள், பிற்போக்குத்தனங்கள் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் காண முடிகிறது. கல்வியில், பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பில் முன்னேறாத மாநிலங்களில் பெண்கள் எத்தனை முறை கருவுற்றாலும் குழந்தை பெற்றுக்கொண்டே ஆக வேண்டுமென்ற சமூக அநீதியை சுமக்க நேரிடுகிறது. அதுதான் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும் காரணமாகிறது. ஆனால் கல்வியில் முன்னேறி வரும் மாநிலங்களில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா அல்லது பின்னர் அதுகுறித்து முடிவெடுத்துக்கொள்ளலாமா என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் மருத்துவ ரீதியாக பதிவு செய்யப்படும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் (2021-2025) வழக்கத்தை விட, கருக்கலைப்புகள் 67% உயர்ந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிப்பதே இதை உறுதிப்படுத்துகிறது. ஒப்பீட்டளவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா போன்ற மாநிலங்களில்தான் அதிகளவு கருக்கலைப்புகள்...
