வேதப் புரட்டைத் தகர்த்து திராவிட நாகரீகத்தை உறுதிப்படுத்திய ஜான் மார்ஷல்!
19-ம் நூற்றாண்டில் உலகின் பழமையான நாகரீகமாக பார்க்கப்பட்டது எகிப்திய, சுமேரிய, மெசபத்தோமியா நாகரீகங்கள்தான். அதனைத் தொடர்ந்து மாயன் நாகரீகமும், சீன நாகரிகமும் மிகப் பழமையானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அதற்கு என தனி நாகரீகம் என்று எதுவும் இருந்ததாக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ஆரியர் வருகைக்கு பின்னர்தான் இந்திய நாகரீகம் வளர்ச்சி அடைந்தது என்றும், அதற்கு முன்னர் இங்கு இருந்த மக்கள் நாகரீக வளர்ச்சியின்றி நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பது தான் மேற்கத்திய ஆய்வாளர்களின் கருத்தாக இருந்தது. அவர்களை பொறுத்தவரை இந்தியாவின் முதல் நகரமே பாடலிபுத்திரா என்று அழைக்கப்பட்ட பாட்னாதான். ஆனால், இவைகள் எல்லாம் சிந்துநதிக் கரையில் ஒளிந்துகொண்டிருந்த மிகப்பெரும் பழங்கால நாகரீகத்தின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர்தான். அதாவது 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவை மட்டுமல்ல, உலகையே புரட்டிப்போட்ட ஒரு ஒரு ஆய்வு முடிவு ‘The Illustrated London News’ இதழின் முகப்புப் பக்கத்தில் வெளிவந்தது....
