கலைஞர் நூல்கள் நாட்டுடமை

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை யாக்கப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கலைஞர் தனது 15 வயது முதல் 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகளை எழுதியுள்ளார். அதனை நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கலைஞர் கருணாநிதியின் நூல்களை படிக்க வாய்ப்பாக அமையும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின்,
கலைஞர் தனியொருவரால் வாழ்நாள் காலத்தில் இத்தனை படைப்புகளை வழங்க இயலுமா என வியப்புறும் வண்ணம் சாதனை 108 தமிழறிஞர்கள் நூல்களை நாட்டுடைமையாக்கி மரபுரிமையருக்கு ரூ.7.76 கோடி தந்தவர் கலைஞர் என்றும் கூறியிருக்கிறார்.

பெரியார் முழக்கம் 22.08.2024 இதழ்

You may also like...