Category: வினா விடை

கூட்டணி குறித்து மேலிடம் தான் முடிவு செய்யும்.
– தமிழிசை

அதாவது, தமிழிசை – அண்ணாமலை கூட்டணியா மேடம்?

ஆதி கேசவன் காப்பாற்றுவான் என்று உத்திரகாண்ட் சென்றோம். ஆனால் தமிழ்நாடு முதல்வரும், இராணுவமும் தான் எங்களைக் காப்பாற்றினார்கள்.
– நிலச்சரிவில் இருந்து மீண்ட பக்தர்கள் பேட்டி!

ஆதி கேசவன் தான் முதல்வர் உருவில் வந்து காப்பாற்றினார் என்று சொல்லாதவரை மகிழ்ச்சி..

மகா விஷ்ணுவின் முன் ஜென்ம பேச்சு; சென்னை அதிகாரி தஞ்சைக்கு மாற்றம். – செய்தி

மகா விஷ்ணு கூறிய பூர்வ ஜென்ம பாவம், அதிகாரியையும் பிடிச்சு ஆட்டுது போல்..

விநாயகர் பூஜை பண்டிகையல்ல; அது தேச பக்தியுடன் தொடர்பு கொண்டது. – – மோடி

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தடியடி வாங்கியவன் விநாயகன் தான்.

கர்நாடக அரசு விநாயகனைக் கைது செய்த போது போலீஸ் வண்டியில் ஏற்றியது இந்துக்களைக் கொந்தளிக்கச் செய்தது. – மோடி

அதே இந்துக்கள் தான் விநாயகனை டிராக்டரில் ஏற்றி கிரேன்களைக் கொண்டு கடலில் வீசுகிறார்கள் மோடி ஜீ.

பெரியார் முழக்கம் 19.09.2024 இதழ்

• போன ஜென்மப் பாவங்களுக்கு கடவுள் இந்த ஜென்மத்தில் தண்டனை தருகிறார். – மஹா விஷ்ணு

அதனால் தான் மஹா விஷ்ணு இப்போது போலீஸ் விசாரணையில் இருக்கிறார்.

• என் கனவில் சித்தர்கள் சொன்னதைத்தான் நான் பேசினேன். – மகா விஷ்ணு வாக்குமூலம்!

சித்தர்கள் கடவுள், ஆன்மாவை மறுப்பவர்கள் என்பது கூட இந்த அவதாரத்துக்குத் தெரியாது போலும்.

• நித்தியானந்தாவைப் போல பிரபலமாக ஆசைப்பட்டேன்.
– மஹா விஷ்ணு

சித்தர்கள் தான் இந்த ஆலோசனையையும் கூறினார்களா?

• ஆன்மீகவாதியைக் கைது செய்தது தவறு!
– ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

மோடிக்குச் சிபாரிசு செய்து பாரத ரத்னா வாங்கிக் கொடுத்துருங்க!

பெரியார் முழக்கம் 12.09.2024 இதழ்

• பசு மாட்டைக் கடத்தியதாகக் கூறி அரியானாவில் பள்ளி மாணவனை பசுப் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். – செய்தி
பேசாம, ஒவ்வொரு பசுவுக்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போட்ருங்க, அப்போ தான் மனிதர்களாவது உயிர் பிழைக்க முடியும்.

• ஒரே இடத்தில் விநாயகன் சிலை அமைப்பதில் இந்து அமைப்புகளுக்குள் மோதல். – செய்தி
விநாயகா..! இந்துக்களையே இப்படி மோதவிடுகிறாயே, இது நியாயம் தானா?

• ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் தயாரிக்கும் உரிமை தென்கலை பிராமணர்களிடமே இருக்கலாம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
அதேப்போல் துப்பரவு பணியையும் தென்கலையிடமே குடுத்துருங்க, வடகலை எதிர்ப்பும் இருக்காது.

• தமிழ்நாட்டு பள்ளிப் பாடத்திட்டத்தின் தரம் குறைந்துவிட்டது. – ஆளுநர் ரவி
சரி, தரம்தாழ்ந்து கிடக்கும் ஆளுநர் பதவியை என்ன செய்வது?

பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்

1. ஞானத்தைக் கற்றுத்தரும் மொழி சமஸ்கிருதம் – ஆளுநர் ரவி

ரவி சார். அப்போ நீங்கதான் கட்டாயம் சமஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும்.
2. சமஸ்கிருத மொழியைக் கற்றுத்தருகிறவர்கள் நாட்டுக்கு சிறந்த சேவையை ஆற்றி வருகின்றனர். – ஆளுநர் ரவி

அப்படியா! கட்டடம் கட்டுகிறார்களா? நெசவு செய்கிறார்களா? தெருவைக் கூட்டுகிறார்களா?

3. ரிஷிகள் தான் நமக்கு வெளிச்சம், ஒளி என்றப் பரிசைத் தந்தார்கள்
– ஆளுநர் ரவி

அப்போ மின்சாரத்தைக் கண்டுபிடித்தது எடிசன் இல்லை ரிஷிகள் தான் என்று சொல்றீங்க!

4. நாம் அனைவரும் பாரத மண்ணில் ஒரே குடும்பமாகத்தான் வாழ்கிறோம்
– ஆளுநர் ரவி

ஆனால் திராவிட மாடல் ஆட்சி மட்டும் எங்கக் குடும்பம் இல்ல. அதை ஒழித்துக் கட்டனும்.

5. பாரதத்தின் தாயாக சமஸ்கிருதம் விளங்குகிறது – ஆளுநர் ரவி

ஆனால் அந்த தாய், தாய் மொழியாக எந்த மாநிலத்திலும் இருக்க மாட்டார்.

6. இந்தியத் தத்துவம், கலாச்சாரம் இவை இரண்டையுமே யாராலும் அழிக்க முடியாது – ஆளுநர் ரவி

இது சத்தியமான உண்மை. அப்படியொன்று இருந்தால் தானே அழிக்க முடியும்.

7. ஆங்கிலத்தைக் கொண்டுவந்து சமஸ்கிருதத்தை அழித்து விட்டார்கள்
– ஆளுநர் ரவி

இல்லையென்றால் உலகம் முழுவதும் மக்கள் பேசக்கூடிய மொழியாக சமஸ்கிருதம் மட்டும் தான் இருந்திருக்கும்.
ரவி சார் நீங்களாவது சமஸ்கிருதம் பேசக்கூடாதா?

பெரியார் முழக்கம் 22.08.2024 இதழ்

• கோவையில் 1 லட்சம் பாஜக ஆதரவு வாக்குகளை காணவில்லை
– அண்ணாமலை புகார்
பதில்: ஜூன் 4-ஆம் தேதி சொல்ல வேண்டிய பதிலை அவசரப்பட்டு சொல்லீட்டீங்களே அண்ணாமலை!

• நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி – செய்தி
பதில்: குரங்கு பொம்மை என்ன விலை என்ற காமெடி போல் இருக்கிறது. சுடுகாடு அமைக்க ஜி.எஸ்.டி. போட்டதே நீங்கள்தான் ஜீ

• அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி வியூகம் – செய்தி
பதில்: அதிமுகவை பாஜக விழுங்கி செரித்துவிட்டதே!

• சூரத்தில் பாஜக வேட்பாளரைத் தவிர மற்ற எல்லோரும் மனுக்களை வாபஸ் பெற்றனர் – செய்தி
பதில்: தேர்தல் ஆணையத்தை கலைத்துவிட்டால் தேர்தல் நடத்தும் வேலையே மிச்சமாகிவிடுமே!

• வணிகர்கள் அவதிப்படுவதால் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்! – செய்தி
பதில்: மருத்துவர் அவர்களே தைலாபுரத்து மாம்பழ வியாபாரத்துக்கு எதுவும் பாதிப்பில்லையே!

பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

• காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் தேர்தல் அறிக்கைப் போல் உள்ளது – மோடி

சமூகநீதி – பெண்ணுரிமை – மாநில உரிமைகள் எல்லாம் இஸ்லாமியர்களுக்கானது. பெட்ரோல், டீசல், சிலிண்டர், டோல்கேட் கட்டண உயர்வுதான் இந்துக்களுக்கானது.

• பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் கிளி ஜோசியம் பார்த்து தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டார் – செய்தி

தாமதிக்காதிங்க… உடனே தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சொல்லி வெற்றியை அறிவிக்க சொல்லுங்க..

• திமுக சீரழித்த தமிழர் பண்பாட்டை நாங்கள் மீட்க வந்திருக்கிறோம்
– ஜெ.பி.நட்டா
யாரது, மதுரையில் எய்ம்ஸ் கட்டடப் பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டது என்ற சொன்ன அந்த நட்டா தானே. அடுத்தமுறை தமிழ்நாட்டுக்கு வரும்போது சமஸ்கிருதத்தில் பேசி தமிழர் பண்பாட்டை மீட்க போராடுங்க ஜீ..

• உடல்நிலை காரணமாக பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய முடியாது, நட்டாவுக்கு குஷ்பு கடிதம்
இதுக்கு போய் கடிதம் எழுதி பத்திரிகையிலும் செய்தியாக்கிட்டிங்க.. நம்புரோம் நீங்க கட்சியில் சுமூகமான உறவில் தான் இருக்கீங்க..

• ரூ,4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை
– தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

இப்படியெல்லாம் கேட்காதிங்க.. பணத்தை எனக்கு அனுப்பியதே செல்வப்பெருந்தகை தான் என்று நயினாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி அமலாக்கத்துறை உங்களையே புடிச்சு உள்ள தள்ளிடும். எச்சரிக்கை!

• பாஜகவோடு கூட்டணி வைத்து எந்த பயனும் இல்லை
– எடப்பாடி பழனிச்சாமி
நியாயம் தான்.. உங்களுக்குத்தான் இப்போது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே!

• இந்தியா கூட்டணிக்கு பிரதமர் யார் என்பதை இதுவரை கூறவில்லை
– எடப்பாடி பழனிச்சாமி
எங்களது அதிமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதை இப்போதே சொல்ல வேண்டும் என்று மிரட்டிப் பார்க்காதீர். ஒற்றை விரலால் ஓங்கி அடித்தப் பிறகு கூறுவோம்.

பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

• புதிய வரி விதிப்பு முறையை நிறுத்திவிட்டோம்; வரி செலுத்துவோர், எது நன்மை பயக்கும் என்று நினைக்கிறார்களோ, அந்த முறையை தேர்வு செய்து கொள்ளலாம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அப்படியா, வரி செலுத்தாமல் இருப்பதுதான் எங்களுக்கு நன்மை பயக்கும் திட்டம், ஓகே வா?

• தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்போம் – ஓ பன்னீர்செல்வம்

கட்சி, சின்னத்தை மீட்க முடியல, இப்போ கச்சத்தீவுக்கு வந்துட்டீங்க, சென்னை உயர்நீதிமன்றத்துல அடுத்த வழக்குக்கு தயாராகிட்டீங்க..

• சுங்கக் கட்டண உயர்வை திடீரென ஒன்றிய ஆட்சி நிறுத்தம் – செய்தி

‘ஓட்டு’க்காக ‘கேட்டு’ திறக்குதுன்னு ‘நாட்டுக்கு’ தெரியும்.

• இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு என்ற ‘பிஞ்சு போன செருப்பை’ இப்போதும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். – அண்ணாமலை
இப்படியே பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சமாதி கட்டுவதை விரைவுபடுத்துங்க.

• இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் 30 ஊர்களுக்கு சீன அரசு சீன மொழியில் பெயர் சூட்டியுள்ளது – செய்தி

கொஞ்சம் பொறுங்க… சீனாவுக்கு அமலாக்கத்துறை – வருமான வரித்துறையை அனுப்பி மீட்டுக் கொண்டுவருவோம். இதுக்கு ‘நாங்க கேரண்டி’

• கலைஞர் நினைவிடத்தை தேர்தல் ஆணையம் மூட வேண்டும், அங்கே கலைஞர் வரலாறு ஒளிபரப்பாகிறது. – தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

எங்கள் ஆட்சியில் அனுமதி மறுத்த அந்த இடத்தை இப்போதாவது மூடி வைத்து பார்க்கலாம் என்ற அற்ப ஆசை தான்.

• என் இரண்டு பிள்ளைகளையும் ஆங்கில வழிக் கல்வியில் தான் சேர்த்துள்ளேன். தகுதியான தமிழ்ப்பள்ளி இங்கே எங்க இருக்கு – சீமான்

சரி விடுங்க.. கேட்டா எங்க அண்ணன் பிரபாகரன் எனக்கு இப்படித்தான் ஆணையிட்டார்னு சொல்லிடுவார்.

• கச்சத்தீவு வரலாறுகளை அண்ணாமலை ‘ஆர்.டி.ஐ’ மூலம் பெற்றார் – செய்தி

சர்வதேச பிரச்சனைகளை எல்லாம் கேட்டு வாங்கிடலாம். ஆனா ‘தேர்தல் பத்திரம்’ ‘பிரதமர் கேர்’ போன்ற தேசப் பாதுகாப்பு பிரச்சனைகளைத் தான் ‘ஆர்.டி.ஐ’ மூலம் கேட்க முடியாது!

• ஆளுநரின் சுகபோக வாழ்க்கையை விட்டுவிட்டு இப்போது தேர்தலில் நின்று சாலை ஓரக்கடைகளில் உணவு அருந்துகிறேன் – தமிழிசை பிரச்சாரம்

காந்தி, பகத்சிங் தியாகத்தையும் மிஞ்சிட்டீங்க மேடம்; கவலைப்படாதீங்க, மக்கள் உங்களை மீண்டும் சுகபோக வாழ்க்கைக்கு திருப்பி அனுப்பிடுவாங்க…

• பாமகவை அதிமுக கடுமையாக தாக்கி பிரச்சாரம் – செய்தி

இது பாமகவுக்கான எங்கள் கூட்டணி தர்மம், பாஜகவுக்கு வேறு தர்மம்; பண்பாடு கருதி எதிர்க்க மாட்டோம், கூட்டணி தர்மத்தை நாங்க கூறு போட்டு வெச்சிருக்கோம்! ஒற்றை விரலில் ஓங்கி அடிங்க…
• ராமன் கோயில் திறப்பு தேதியை ராம பகவான் தான் முடிவு செய்தார் – மோடி பேட்டி

தேர்தல் தேதி – வேட்பாளர் – தொகுதி – தேர்தல் அறிக்கை எல்லாவற்றையும் ஸ்ரீ ராம பகவான் தான் முடிவு செய்திருப்பார் போல. பாவம் அவருக்குத்தான் ஓட்டு இல்ல..

பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

• கோவையில் 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பத்தை உயர்த்தியது தான் திராவிடக் கட்சிகளின் சாதனை – அண்ணாமலை பேச்சு

அண்ணா, என்னை ஜெயிக்க வைங்க, அடுத்தநாளே இந்த கோவை தொகுதியை திராவிட இயக்கத்தின் துரோகத்தை முறியடித்து பூமியின் வெப்பத்தை குறைத்துக் காட்டுகிறேனா? இல்லையா? என்பதை மட்டும் பாருங்கள். உலகம் முழுவதும் பூமி வெப்பமானதுக்கு யார் காரணம், இந்த திராவிட கட்சிகள் அல்லவா, சவால் விடுகிறேன்.
• எனக்கு கங்கை – கோதாவரி இணைப்பு தான் முக்கியம். கடவுள் என்னிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், நான் இதைத்தான் கேட்பேன் – மருத்துவர் இராமதாசு
நீங்கள் பிரதமராக ஆக்கத் துடிக்கும் மோடி இதை செய்யமாட்டார் என்பதால் கடவுளிடம் போயிடீங்களா? ஓகோ நீங்களும் கடவுளிடம் கூட்டணி போடும் கட்சிகளிடம் சேர்ந்திட்டிங்க போல.
• பௌர்ணமிக்குப் பிறகு நல்ல நேரம் 1 மணிக்குள் முடிவதால் வேட்புமனு தாக்கல் செய்வதில் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி, மோதல் – செய்தி
ஒரே தொகுதியில் தோற்கிறவர், வெற்றி பெறுகிறவர், டெபாசிட் பறிகொடுக்கிறவர், வெற்றிபெற்று கட்சி மாறுகிறவர்கள் எல்லோரும் அந்த நல்ல நேரத்தில் தான் மனு போடும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.
• தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் வழிபடும் சென்றாய பெருமாள் கோயிலில் தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி – செய்தி
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் – சட்டமன்றத் தேர்தல் – உள்ளாட்சி தேர்தலில் சென்றாய பெருமாள் வழங்கிய தீர்ப்பை, இந்த தேர்தலிலும் வழங்கி எடப்பாடி பழனிச்சாமியின் தரிசனத்தை நிறைவேற்றுவாராக!
• வேட்புமனு தாக்கலின் போது மாவட்ட ஆட்சியர் உறுதிமொழிப் படிவத்தை படிக்கச் சொன்ன போது எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்று விருதுநகர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கூறியிருக்கிறார் – செய்தி
அதனாலென்ன… என் அன்னை தமிழைப் பழிப்பவனை இந்த மண்ணில் வாழவிட மாட்டேன். நான் ஆட்சிக்கு வந்தால் நாடு கடத்த உத்தரவிடுவேன் என்று கையை உயர்த்தி உரத்தக் குரலில் மூச்சுமுட்ட பேசத் தெரிந்தால் போதும், நீங்களும் நாம் தமிழர் தான்.
• எனது பையில் இருந்த வைரம் பதித்த ராசியான விலையுயர்ந்த பேனாவை காணவில்லை, யாராவது எடுத்திருந்தால் திருப்பிக் கொடுங்கள் – சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் பிரச்சாரத்தில் பேச்சு
ஓட்டு கேட்க போய் பேனாவை கேட்க ஆரம்பிச்சுட்டிங்களே, உங்க ராசி தொடக்க நாளிலே பறிபோய் விட்டது என்று கலங்கிடாதிங்க, அடிச்சு விளையாடுங்க..
• சூரியவம்சம் படத்தில் தேவயானியை கலெக்டராக்கினேன், இப்போது எனது மனைவியை நாடாளுமன்ற உறுப்பினராக்குவேன் – சரத்குமார் பேச்சு
அந்த படத்துக்கு தேர்தல் முடிந்த பிறகு பூஜை போடலாம் சார். படம் நல்லா வரனும்ல அவசரப்படாதிங்க..

பெரியார் முழக்கம் 28032024 இதழ்

• சிவன், பிரம்மா, விஷ்ணு மூதேவர்களின் ஆசியோடு மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க போகிறேன். – மோடி
பதவி ஏற்புக்கும் குடியரசுத் தலைவரை புறக்கணிக்க முடிவு செய்துவிட்டீர்களா?
• தேர்தல் பத்திரம்; பாஜகவை கண்டிக்காமல் எடப்பாடி மௌனம் – செய்தி
மோடியை ஆதரித்தே பழக்கப்பட்ட நாங்கள் மௌனம் சாதிப்பது கடுமையான எதிர்ப்பு தான். நாங்கள் பனங்காட்டு நரி, பயப்படாமல் மௌனம் இருப்போம்.
• ‘நிரபராதி’ என்று அறிவிக்கப்படாததால் பொன்முடிக்கு அமைச்சராக ‘பதவி பிரமாணம்’ செய்து வைக்க மாட்டேன் – ஆளுநர் ரவி
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டாலும், அவரை பதவியில் இருந்து நீக்க மாட்டேன். அம்புட்டு நேர்மைக்காரன் நான்.
• தேர்தல் பத்திர ஊழல் வழக்கை விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் – காங்கிரஸ் கோரிக்கை
சும்மா இருங்க… மோடி தனி ஆணையம் அமைத்து, அதற்கு நிர்மலாவை தலைவராக்கி விடுவார்.
• ஆயிரம் ரூபாய் பிச்சை போடுவதால் பெண்கள் திமுகவுக்கு ஓட்டு போடமாட்டார்கள். – குஷ்பு
ஆனால் மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ‘பிச்சை’யாக போட்டால், குஷ்பு பாஜகவுக்கு ‘ஜே’ போடுவார்.
• அமலாக்கத்துறை அதிகாரி இலஞ்சமே வாங்கவில்லை, தமிழக அரசு பொய் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை
அவர் தனக்காக அந்த பணத்தை வாங்கவில்லை, ஒட்டுமொத்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க வாங்கிய ‘உத்தம தியாகி’

பெரியார் முழக்கம் 21032024 இதழ்

• எனக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு மிகப் பழமையானது. – மோடி
ஆமாம், கீழடி அகழ்வாராய்ச்சியிலேயே அதற்கு ஆதாரம் இருக்குன்னு சொல்லுவிங்களோ, உங்கள் பெயரே பத்தாண்டுகளாகத்தான் எங்களுக்கு தெரியும். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு.
• சென்னைக்கு வரும் போது தமிழர்களால் எனக்கு சக்தி கிடைக்கிறது – மோடி
அதனால் தான் கல்பாக்கத்தில் ஈனுலை அழிவு சக்தியை எங்கள் தலையில் கட்டியிருக்கிங்களா?
• பாஜக தேர்தல் சுவரொட்டியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் – செய்தி
விட்டா… முனுசாமி, சி.வி. சண்முகம் படத்தை கூட போட்டுப்பாங்க.
• புதுக்கோட்டை கோயில் கர்ப்பகிரகத்தில் அரிவாளுடன் நுழைந்த நபரை காவல்துறை தண்ணீரை பீய்ச்சி அடித்து வெளியேற்றியது. – செய்தி
அய்யயோ ஆகமம் அனுமதிக்குமா? ஏன், வேத மந்திரங்களை வைத்து வெளியேற்ற முடியாதா?
• ஆன்மீகம் தழைக்கும் நாடு நன்றாக மலரும்
– ஆளுநர் தமிழிசை
ஆனால், ஆன்மீக ஆளுநர்களை கொண்ட மாநிலங்கள் நன்றாக வதைபடும்.
• தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட மூன்று மாதம் அவகாசம் கேட்கிறது பாரத ஸ்டேட் வங்கி – செய்தி
அதற்குள் மோடி உச்சநீதிமன்ற உத்தரவுகளை வங்கிகள் செயல்படுத்த வேண்டாம் என்று அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்துவிடுவார்.

பெரியார் முழக்கம் 07032024 இதழ்

  • கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தலைமை அலுவலகத்தில் காத்திருந்த எடப்பாடி பழனிசாமி; யாரும் வராததால் அதிருப்தி – செய்தி

கவலை வேண்டாம்… தங்கமணி, வேலுமணியை ஆளுக்கொரு கட்சி தொடங்கவைத்து பேச்சுவார்த்தைக்கு வரச் சொல்லிவிடலாம்.

 

  • தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வே இல்லை   – அண்ணாமலை

39 எம்.பி.க்களை அனுப்பப் போகிற கட்சிக்குத்தானே வேலை? பாஜகவுக்கு என்ன வேலை?

 

  • ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டுப்போட மக்கள் முடிவு – நரேந்திர மோடி

ஆமாம்… துவாரகா எக்ஸ்பிரஸ், ஆயுஷ்மான் பாரத், டோல்கேட் ஊழல் செய்த கட்சிக்கு முடிவு கட்டப் போகிறார்கள்.

 

  • பொதுமக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றிவிட்டது      – அமித் ஷா

கருப்புப் பணத்தை மீட்டு 15 லட்சம் ரூபாய் இன்னும் வரவு வைக்கவில்லையே! மதுரை எய்ம்ஸ் செங்கல்லோடு நிற்கிறதே?

 

  • இந்தியாவை யாராவது அச்சுறுத்த நினைத்தால் சரியான பதிலடி கொடுப்போம்

– ராஜ்நாத் சிங்

“சீனாவைத் தவிர” என்று அடைப்புக்குறிக்குள் போட்டுவிடுங்கள்… அருணாச்சலில் உரிமை கொண்டாடும் சீனாவுக்கு எதிராக சத்தமே இல்லையே!

பெரியார் முழக்கம் 29022024

  1. நாங்கள் ஆட்சியில் இருந்த போது கவர்னருடன் எந்த பிரச்சனையும் இல்லை – எடப்பாடி
  • பாஜக ஆட்சிகளுக்கு எல்லாம் அவர்கள் பிரச்சினை கொடுப்பதில்லை.
  1. ஆளுநர் உரையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன் தேசியகீதம் பாட வேண்டும் என்பது பற்றி

எல்லாம் எனக்கு தெரியாது. இது ஆளுநருக்கும், திமுக ஆட்சிக்கும் உள்ள பிரச்சினை                                                                  – எடப்பாடி

  • சத்தியமாக எனக்கு தெரியாது; நான் நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த போது ஆளுநர்

உரையாற்றும் போது சட்டசபையிலேயே தூங்கிவிடுவேன்.

  1. திருவேற்காடு கருமாரியம்மன் தாலியை திருடிய அர்ச்சகர்கள் கைது – செய்தி
  • ஆகம விதிப்படி நியமனம்; கிரிமினல் சட்டப்படி கைது!
  1. காங்கிரஸ் ஆட்சி தயாரித்த உரையை முழுமையாகப் படித்தார் கருநாடக கவர்னர் கெலாட் – செய்தி
  • நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுக்கள் விழ வேண்டும் என்ற கவலை அந்த கவர்னருக்கு!
  • பெரியார் முழக்கம் 15.02.2024
  • தமிழ்நாட்டில் சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் பெய்த மழையை தேசியப் பேரிடர் என்று அறிவிக்க முடியாது

– நிர்மலா சீதாராமன்

பதில் : ஆமாம், பா.ஜ.க இருக்கும்போது வேறு எதையும் தேசியப் பேரிடர் என்று சொல்வது சரியாக இருக்காது தான்.

  • வட இந்தியாவில் தமிழைப் பரப்ப நாம் இந்தி கற்க வேண்டும் – தமிழிசை

பதில் : இந்தி கற்றுக்கொண்ட பிறகு தமிழ் இங்கு எப்படி இருக்கும்? தலை வலிக்கு மருந்து கேட்டால், நன்றாக இருக்கும் காலுக்கு மருந்து கொடுக்கலாமா மருத்துவரே!

  • பிரிட்டிஷ் கால சட்டங்கள் இல்லாத புதிய இந்தியாவை படைத்துவிட்டோம் – அமித் ஷா

பதில் : ஆளுநர் பதவி என்ன ராம ராஜ்ஜியத்தில் உருவாக்கப்பட்டதா? அதையும் அழித்து இன்னொரு புதிய இந்தியா பிறந்தால் என்ன கெட்டுவிடும்?

  • ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்லவில்லை. ஆனால் அப்படி கணக்கெப்பு நடத்துவதால் சமூக பதற்றம் ஏற்படாதவாறு, ஒற்றுமையை உறுதிசெய்ய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ்.

பதில் : ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களோ!

  • பொன்முடி போல மேலும் 11 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் மிக விரைவில் தீர்ப்பு வரும் – அண்ணாமலை

பதில் : கமலாலயத்தில் இருந்து தீர்ப்பை எழுதி அனுப்பி வைத்துவிட்டு காத்திருக்கிறீர்களோ!

பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

  • அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் நாளில் எல்லோரும் வீடுகளிலும் விளக்கேற்றுங்கள்- எல்.முருகன்

பதில்: முன்பு கொரோனாவை விரட்ட விளக்கேற்றுங்கள் என்றார் மோடி, இப்போது ராமரை விரட்ட விளக்கேற்றச் சொல்கிறார்களோ!

  • பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது கண்டிக்கத்தக்கது, அமித் ஷா-வுக்கு கடிதம் அனுப்புவோம்- அண்ணாமலை

பதில்: கைது செய்த காவல்துறையினர் வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்ப வழி ஏதும் இருக்கிறதா என்று அமித் ஷாவிடம் கேட்டுப் பாருங்கள்!

  • பாஜக அகில இந்தியத் தலைமையுடன் தொடர்பில் இருக்கிறேன்: ஓ.பன்னீர்செல்வம்

பதில்: அந்தத் தொடர்பால்தான் உங்கள் அரசியல் வாழ்க்கை “ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்” என்ற கதைபோல் ஆகிவிட்டது என்பதை மறந்துவிட வேண்டாம்.

  • என்னைப் பார்க்க வரும் தொண்டர்கள் பூங்கொத்து கொடுக்க வேண்டாம், புத்தகங்கள் கொடுங்கள்: எடப்பாடி பழனிசாமி

பதில்: வரவேற்க வேண்டிய அறிவிப்புதான்… ஆனால் சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை மட்டும் மீண்டும் படித்துவிட வேண்டாம்.

  • சென்னை புறநகர் பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றியது ஏன்?- சீமான்

பதில்: அதிபர் ஆட்சி மலரும்போது (?) கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை செல்லாது என அறிவித்து விடலாம், கவலைப்படாதீர்கள்.

பெரியார் முழக்கம் 11012024 இதழ்

  • ரஜினிகாந்த் சங்கி இல்லை, அப்பாவை சங்கி என்று சொன்னால் கோபம்

வருகிறது                                   – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

பதில் :  சங்கி அடையாளமல்ல, அவமானம் என மகளுக்குப் புரிகிறது, ரஜினிக்குத்தான் புரிவதில்லை.

  • சமூக நல்லிணக்கத்திற்கான விருது முகமது ஜுபைருக்கு கொடுத்தது

பொருத்தமற்றது                                       – அண்ணாமலை

பதில் : மசூதியை இடித்து மதக்கலவரத்தை தூண்டியவர்களுக்கு கொடுக்க இது என்ன ராமராஜ்ஜியமா? ராமசாமி ராஜ்ஜியம்!

 

  • ராமர் கோயில் அனைவருக்கும் பொதுவானது; யார் வேண்டுமானாலும் சென்று பிரார்த்தனை செய்யலாம் – எடப்பாடி பழனிசாமி

பதில்: கரசேவைக்கு ஆள் அனுப்பிய அதிமுகவினர் ஏன் இன்னும் செல்லவில்லை? தேர்தல் முடியட்டும் என காத்திருக்கிறீர்களோ!

  • ராமர் இல்லாமல் பாரதத்தை நினைத்துப் பார்க்க முடியாது, ராமர்தான் தேசிய அடையாளம் – ஆர்.என்.ரவி

பதில்: பிச்சைக்காரர்கள் கூட ராமர் வேடம் போடுகிறார்கள், அதற்காக அதுதான் பாரதத்தின் அடையாளம் என்று சொல்ல முடியுமா மிஸ்டர் ரவி?

  • அனைவரையும் சமமாக மதித்து சமூக நீதிக்கு வித்திட்ட நாயகன் ராமர்

– தமிழிசை சவுந்திரராஜன்

பதில்: தவம் செய்ததற்காகவே சூத்திரனான சம்பூகனை கொன்ற பார்ப்பனச் சமூக நீதி காவலர் ஆயிற்றே ராமர்.

  • அயோத்தி ராமன் கோயிலில் இடி விழாமல் காப்பாற்ற இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளது. – செய்தி

ஆமாம், அதற்காக புதிய ஆகமம் ஒன்றை எழுதி அதற்கு மோடி இடிதாங்கி ஆகமம் என்று பெயர் சூட்டியிருக்கிறோம்.

  • அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது

– நாடாளுமன்றத்தில் மோடி

ஆமாம், அதற்காகத்தான் ஒரே இயக்குநரை மூன்றுமுறை முறைகேடாக பதவி நீடிப்பு வழங்கினோம். உச்சநீதிமன்றம்தான் சுதந்திரத்தைப் பறித்துவிட்டது.

  • 1976 நெருக்கடி நிலை காலத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. இப்போது உயரவில்லை – மோடி

ராஜராஜ சோழன், பல்லவ மன்னன் காலத்தில் விலைவாசி அதிகமாக இருந்ததா?

  • பிற மதத்தவர் இந்து மதத்தை தழுவ திருப்பதியில் ஏற்பாடு – சனாதன தார்மீக கருத்தரங்கில் தீர்மானம் – செய்தி

இந்து மதத்தில் எந்த ஜாதியில் அவர்களுக்கு இடம் கொடுப்பீர்கள்? ஜாதி மாறவும் சிறப்புத் திட்டம் எதாவது இருக்கிறதா?

  • சண்டிகர் தேர்தலில் தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

சரி, அவரை ஒரு மாநிலத்திக்கு ஆளுநராக அனுப்பி வைக்கிறோம்.

பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம் – மோடி

ஆனா, கிரிமினல் சட்டம் மட்டும் ‘பொது’ இல்லை பாஜகவினர் என்ன குற்றம் செய்தாலும் விதிவிலக்கு

அயோத்தியில் ராமன் கோயில் பாதுகாப்புக்கு 38 கோடியில் மாநில அரசு திட்டம் – செய்தி

அப்படியே மறந்திடாம அனுமார் படை ஒன்றையும் துப்பாக்கியோடு நிறுத்திடுங்க

ஜனநாயகம் எங்கள் ஆன்மா, இரத்தம், மரபணுவுடன் இணைந்து நிற்கிறது – அமெரிக்காவில் மோடி

ஆனால் ஜன்நாயகக் கொலை என்பது எங்கள் அரசியல் சித்தாந்தம், அதிகாரத்தோடு பின்னிப் பிணைந்து நிற்கிறது

பாஜக சலவை இயந்திரத்தில் ஊழல் பேர்வழிகள் தூய்மையாக்கப்படுவார்கள் – காங்கிரஸ் விமர்சனம்

அமலாக்கத்துறை அந்த நபர்களை இயந்திரத்தில் போடும், அமித்ஷாவும் மோடியும் திறமையாக இயக்கி சில நொடிகளில் தூய்மையாக்கிவிடுவார்கள் பலே பேர்வழிகள்!

பெரியார் முழக்கம் 06072023 இதழ்

இந்தியாவின் அடுத்தப் பிரதமராக தமிழர் வர வேண்டும்   – அமித்ஷா

அதுக்கு சீமானின் சம்மதத்தை வாங்கிட்டிங்களா ஜீ!

 

தமிழ்நாட்டில் 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் – அமித்ஷா

அமலாக்கத்துறை, வருமானவரித்துறைக்கு எல்லாம் தொகுதிகளை கைப்பற்றும் உரிமை இல்லை ஜீ

 

மதுரை ஆதீனம் பல்லக்கில் மனிதர்கள் சுமக்க பட்டினப்பிரவேசம்                                      – செய்தி

டெல்லிக்கு விமான சவாரி, உள்ளூரில் பல்லக்கு சவாரி

 

கர்பிணிப் பெண்கள் இராமயணமும் மகாபாரதமும் படித்தால்

சுகப்பிரசவம் நடக்கும்                         – தமிழிசை

உண்மைதான், குந்திதேவி சூரியனோடு உறவு கொண்டு கர்ணனை பெற்றவளாயிற்றே!

 

பெரியார் முழக்கம் 15062023 இதழ்

சர்வதேச நாடுகள் நெருக்கடியான சிக்கல்களுக்கு தீர்வுகாண இந்தியாவையே நாடுகின்றன.             – ஆளுநர் தமிழிசை

உண்மை தான் நெருக்கடிகளை திசைதிருப்பி மக்களை ஏமாற்ற இங்கே இலவச ஆலோசனைகள் வண்டி வண்டியாக கிடைக்கும்.

 

கோவிந்தராஜர் ஸ்ரிதேவி பூதேவியுடன் திருப்பதியில் கற்பக விருட்ச வாகனத்தில் வீதி வீதியாக உலா வந்தார்     – செய்தி

கற்பக விருட்சம் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு? பெட்ரோல் வண்டியா? டீசல் வண்டியா?

 

கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் பாஜக அணிகளின் தலைவர்களை மாவட்ட தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் – அண்ணாமலை

அவர்களின் பட்டியலை வைத்து கட்சியில் பதவி உயர்வு வழங்கி கவுரவிக்க உதவியாக இருக்கும், அதனால் தான்!

 

தீட்சிதர்கள் நடத்திய குழந்தை திருமண படங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்த்துள்ளன                 – செய்தி

அதனால் என்ன? அவர்கள் கைலாயத்தில் இருந்து சிவ பெருமானோடு வந்த பூ தேவர்கள். இந்தியாவின் சட்டங்கள் அவர்களுக்கு பொருந்தாது, சந்தேகம் என்றால் ஆளுநரைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

 

  • செவ்வாய்கிரகத்தில் ஆறுகள் இருந்திருக்கின்றன. – நாசா

அப்படி வாங்க வழிக்கு. அதுல ஒன்னுதான் எங்க வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி ஆறு. செவ்வாய்கிரகத்திலேயே எங்களாவாதான் பூர்விகக் குடிகள், புரியுதோ!

  • 3 ஆளுநர்களைத் தந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார், பிரதமர் மோடி. – பா.ஜ.க.

என்ன குரல் மாறுது? மூன்று சனாதன ‘இந்துக்களைத் தந்து’

என்று தானே சொல்லணும். இப்போ, மதம் போய் – தமிழன்

வந்துட்டானா?

  • இந்துமாக் கடல் – சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருக்கும் நிலையில் பிரபாகரன் வெளிப்படுவதற்கான சூழல் உருவாகி யுள்ளது. – பழ. நெடுமாறன்

இந்தியப் பெருங்கடல் இந்துமாக் கடலாக மாறி விட்டதா, அய்யா!

  • பா.ஜ.கவின் கனவைத் தவிர்க்க பிரபாகரன் மீண்டும் ஈழத்துக்கு வரவேண்டும்! – கோவை இராமகிருட்டிணன் அறிக்கை

அப்ப, தமிழ் ஈழத்துக்காக வரவேண்டாமா? அப்படியே ஈரோடு இடைத்தேர்தலுக்கும் வந்து பா.ஜ.க.வின் கனவைத் தவிர்த்தால் நல்லது.

  • வருமான வரித் துறையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். – செய்தி

அவர் பேசுவார். பசுமைத் தீர்ப்பாயத்தில் 5 கோடி அபராதம் கட்டியவர். அங்கு போயும் பசுமையைக் காப்பாற்றும் வழிமுறைகளை விளக்குவார்.

பெரியார் முழக்கம் 16022023 இதழ்

  • தி.மு.க. பொதுக் கூட்ட மேடையில் பேசுவதை எல்லாம் ஆளுநர் பேச வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? – அண்ணாமலை

நியாயம் தான். ஆளுநர் அவர் பேசும் பொதுக் கூட்ட மேடையில் பேசுவதைத் தானே சட்டசபையில் பேச முடியும். அப்படித்தான் அவரே எழுதிக் கொண்ட அரசியல் சட்டத்தின் மீது உறுதி மொழி எடுத்திருக்கிறார் போல!

  • ‘தேசிய கீதம்’ பாடலையும் புறக்கணித்து ஆளுநர் வெளியேறியது தேசத்துக்கு அவமதிப்பு. – அமைச்சர் தங்கம் தென்னரசு

அதெல்லாம் இல்லை. ஆளுநர் ஏற்றுக்கொண்ட தேசிய கீதம் ‘வந்தே மாதரம்’. ‘ஜனகணமன’ அவருக்குப் பிடிக்காது.

  • ஆளுநரை வைத்துக் கொண்டே முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தது தவறு.

– அண்ணாமலை

முதல்வரை வைத்துக் கொண்டே அரசு தயாரித்த உரையின் பகுதிகளை நீக்கி விட்டுப் பேசியது – ஆளுநரின் ‘பெருந்தன்மை’யோ?

  • பெரியார், அண்ணா, காமராசர் பெயரை எல்லாம் நீக்கி விட்டு ஆளுநர் உரையை வாசித்தது எல்லாம் எங்களுக்கு எப்படி தெரியும். – எடப்பாடி

அதுவும் சரி தான். ஆளுநர் உரையை படிக்காமலே ‘உப்பு சப்பில்லை’ என்று கூறுவதற்கு மட்டும் தான், எங்களுக்குத் தெரியும்.

  • நாங்கள் ஆளுநர் உரையைக் கேட்கத்தான் வந்தோம்; முதலமைச்சர் உரையைக் கேட்க அல்ல. – எடப்பாடி

அதற்கு ஆளுநர் மாளிக்கைக்கோ, ஆர்.எஸ்.எஸ். ஷாகாவுக்கோ போயிருக்கலாம். சட்டசபைக்கு வந்திருக்க வேண்டாம்.

  • ஆளுநருக்குத் தெரியாமலே அச்சடித்த உரையை அவர் எப்படி படிப்பார்? – வானதி

என்னது… ஆளுநருக்குத் தெரியாதா… அவர் படித்து ஒப்புதல் தந்ததுகூட வானதிக்கு தெரியாதா? பொது மக்களிடம் போய் இப்படி எல்லாம் உளறாதீங்க…

  • சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரைக்கூட படிக்க மறுத்தார் ஆளுநர்.

– தங்கம் தென்னரசு

தமிழக அரசு கூறும்போது அம்பேத்கர்கூட ஆளுநருக்கு ‘அலர்ஜி’ தான்!

  • சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளி நடப்பு. – செய்தி

அடுத்து சட்டசபை முற்றுகைப் போராட்டம் நடத்துவார் போல!

  • ஆளுநருக்கு எடப்பாடி ஆதரவு. – செய்தி

அடப்‘பாவிகளே’ ஆளுநர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டிய ஜெயலலிதாவையே இப்படி அவமதிக்கிறீர்களே! இது அடுக்குமா?

  • தொலைக்காட்சி விவாதங்களை சில ஆண்டுகளாகப் புறக்கணித்த பா.ஜ.க.வினர் ஆளுநருக்காக மீண்டும் பேச வந்து விட்டனர். – செய்தி

பாவம் ரவி! அவருக்கு மேலும் குழி பறிக்க இந்த பஜனைக் குழுவே போதும்!

 

பெரியார் முழக்கம் 12012023 இதழ்

 

  • ஏழுமலையானுக்கு உலகம் முழுதும் அசையா சொத்து 85,705 கோடி ரூபாய்; தங்க நகைகள் 9,259 கிலோ. –  செய்தி

அசையா கடவுளுக்கு அசையா சொத்துக்கள்; அமலாக்கத் துறையால் அசைக்கவே முடியாது.

  • திருப்பதியில் சொர்க்க வாசல் போக இலவச தரிசனம்; இலவச டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. – செய்தி

‘புண்ணியம்’ எதுவும் செய்ய வேண்டாம்; டோக்கன் பெற்றாலே ‘சொர்க்கம்’ தான்!

  • உ.பி. சிறைகளில் சைவ உணவுகள் மட்டுமே அளிக்கப்படுகிறது.

– செய்தி

தண்டிக்கப்பட்டு உள்ளே வந்த பிறகும் தண்டனையா?

  • இராமேஸ்வரம் கடல் பகுதியில் இராமர் பாலம் இருந்ததாக உறுதியான சான்றுகள் இல்லை. ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி ஒப்புதல்.

– செய்தி

அடுத்து ராமன் என்று ஒருவர் இருந்தான் என்பதற்கே உறுதியான சான்றுகள் இல்லை என்பதை எப்போது அறிவிக்கப் போகிறீர்கள்?

  • கிருஷ்ண பகவானுக்கு உலகிலே உயரமான சிலை – குஜராத் பா.ஜ.க. ஆட்சி முடிவு. – செய்தி

‘பிரபஞ்ச’த்திலேயே உயரமான சிலையை அமையுங்கள்; அது தான் ‘பிரபஞ்சத்தை’ப் படைத்தவனுக்கு மரியாதை!

 

பெரியார் முழக்கம் 29122022 இதழ்

  • எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தகுதியுள்ள எஸ்.எஸ்.டி.

ஆசிரியர்களைக் கூட பணிக்கு சேர்ப்பதில்லை.                                               – நாடாளுமன்ற நிலைக்குழு

அது தான் ஜனாதிபதவிக்கே ஒருத்தர நியமிச்சுட்டமே அப்றம் என்ன?

  • சபாநாயகர் அப்பாவு கிறிஸ்துவ பாதிரியார்களைப் புகழ்ந்து பேசுவதா?                               – பாஜக பொருளாளர் சேகர்

ஆமாம்; இந்து நித்தியானந்தாவையும், இந்து மோடியையும் தான் புகழ வேண்டும். அது தான் மதச்சார்பின்மை.

  • கங்கையை தூய்மைப்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. – பசுமைத் தீர்ப்பாயம்

புரோகிதர்களை அழைத்து மந்திரங்களை ஓதிப் பாருங்களேன்; தீட்டு கழிந்து தூய்மையாகிவிடும்.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தான் அதிகாரமிக்கவர்.

– கே.எஸ்.அழகிரி

அதுசரி, காங்கிரச எப்போது அதிகாரபடுத்தப் போறீங்க

  • நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத கெட்ட வார்த்தைகள் பட்டியல். -சபாநாயகர் அறிவிப்பு

அந்தப் பட்டியல்ல நாடாளுமன்றத்தையும் சேத்துக்கோங்க.

 

பெரியார் முழக்கம் 28072022 இதழ்

  • அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு வழக்கு. – செய்தி

அதெல்லாம் கலவரம் செய்கிறவர்களை ஜெயக்குமாரே பாத்துக்குவார்; சட்டையைக் கழற்றி பின்னால் கைகளைக் கட்டி மண்டபத்தை விட்டே வெளியே தளளிடுவாரு.

  • சாமி சிலைகளை மியூசியங்களில் வைக்கக் கூடாது.

– முன்னாள் அய்.ஜி. மாணிக்கவேல்

‘சாமி’களே வெளிநாட்டு மியூசியங்களுக்கு பயணமாகும்போது, நாம் என்ன சார், செய்ய முடியும்? சொல்லுங்க…

  • கிராமங்களில்தான் நமது பண்பாடே உயிருடன் இருக்கிறது.

– ஆளுநர் ரவி

அதற்கு ஆளுநர் மாளிகையில் நமது அரசியல் பண்பாடு குழி தோண்டி புதைக்கப்படுவதையும் சேர்த்துச் சொல்லுங்க.

  • ‘பிராமணர்’களை இழிவுபடுத்துவது தொடர்ந்தால், போராடத் தயங்க மாட்டோம்.

– பிராமணர் சங்கத் தலைவர் ஆடிட்டர் கணேசன்

ஆமாம்; நீங்கள் தானே போராட வேண்டும். கடவுளா, உங்களுக்காகப் போராடுவார்? அவர் ‘கல்லாக’த்தான் இருப்பார்.

  • 4 ஆண்டுகளுக்குப் பின் ‘அக்னி வீரர்கள்’ முடிவெட்டலாம்; வாட்ச்மேன் ஆகலாம். – ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி

இதுக்கெல்லாம் கூட இராணுவப் பயிற்சி தேவையா ஜி!

பெரியார் முழக்கம் 23062022 இதழ்

  • காஞ்சி குரு விஜயேந்திரனை விமர்சித்தவரை கைது செய்ய வேண்டும்.                 – தமிழ்நாடு பிராமண சமாஜம்

கைது செய்வதோடு நிறுத்தக் கூடாது; விஜயேந்திரன் கொலை வழக்கில் எந்த சிறையில் இருந்தாரோ அதே அறையில் போட்டு பூட்ட வேண்டும்; அப்பத் தான் புத்தி வரும்.

  • ஆன்மீகப் பயணம் முடிந்தது; அடுத்து அரசியல் பயணம் தொடங்கு கிறேன். – சசிகலா

தொடக்க விழா – கொடநாடு ‘எஸ்டேட்டில்’; இரண்டாவது விழா – கருநாடகா நீதிமன்றத்தில்; தவறாது வருக!

  • சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்திலிருந்து முகலாயர் வரலாறு – ஜனநாயகம் பற்றிய பாடங்கள் நீக்கம்.. – செய்தி

அதுக்கு பதிலாக புல்டோசர் வைத்து இடிப்பது; ஜீப் ஏற்றி சாகடிப்பது போன்ற ‘அகிம்சை’ தத்துவங்களை சேர்க்கலாம்.

  • நீதிமன்றத்தில் மாநில மொழியில் வழக்காட வேண்டும்; இல்லையேல் திருமண வீட்டில் மந்திரங்கள் ஓதுவதுபோல யாருக்கும் புரியாது.

– உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘ஆண்டி இந்தியன்’ எச்.ராஜா, எங்கே போயிட்டீங்க… இதுக்கு ‘ஹாட்டா’ ஒரு பதிலடி கொடுங்க…

  • ‘முரசொலி’ பற்றிய அவதூறு பேச்சு வழக்கில் ஆஜராக விலக்கு கோரி அமைச்சர் முருகன் மனு. – செய்தி

ஏன் மனு போடுறீங்க… வழக்கை அடுத்த தலைவர் அண்ணாமலை பெயருக்கு மாத்தச் சொல்லுங்க… பிரச்சினை ‘ஓவர்’.

  • பிராமணர் என்பதாலோ – பாரம்பர்ய அர்ச்சகர் என்பதாலோ கோயில் களில் தனிச் சலுகை ஏதும் கிடையாது. – அறநிலையத் துறை

இதுக்குப் பேருதான் சமுதாயப் புரட்சி!

பெரியார் முழக்கம் 28042022 இதழ்

  • அயோத்தியா மண்டப லரவு செலவு ஆராய அரசு குழு அமைப்பு.

– செய்தி

அதுக்கு ‘ஆகமம்’ அனுமதிக்குமா?

  • திருப்பதியில் தங்க ரதத்தில் ஏழுமலையான் பவனி. – செய்தி

அதுவும் சரிதான். பெட்ரோல், டீசல் வாகனத்தில் போனால் ஏழுமலையானுக்கு கட்டுப்படியாகாது.

  • ஒரு கால பூஜை நடக்கும் கோயில்களுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்தும். – செய்தி

அதெல்லாம் ஏற்க முடியாது. கோயில் பிரச்சினைகளில் அரசு தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்; புரிஞ்சுக்குங்க.

  • வரும் தேர்தலில் 25 பா.ஜ.க. எம்.பி.க்கள்; 5 காபினட் அமைச்சர்களைப் பெறுவதே பா.ஜ.க.வின் இலக்கு.             – அண்ணாமலை

குடியரசுத் தலைவருக்கு அப்படி ஒரு நியமன அதிகாரம் வழங்கப் போறீங்களா, ஜீ?

  • ‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் ‘சூட்சமம்’ என்ன ஆனது? – ஜெயக்குமார்

இவுரு வேற; அப்பப்ப குறுக்கும் நெடுக்கும் சைக்கிள்ள வந்து போய்கிட்டு இருக்காரு.

 

பெரியார் முழக்கம் 21042022 இதழ்

  • சென்னையில் ராமர்கோயில் இருக்கும் அயோத்தி மண்டபத்தை பூட்டு போட்டு பா.ஜ.க.வினர் அதிகாரிகளைத் தடுத்து போராட்டம். – செய்தி

ரொம்ப நல்ல சேதி; அப்படியே அயோத்திக்குப் போய் அந்த ராமன் கோயிலுக்கும் பூட்டு போடுங்க; நல்ல சேவை.

  • பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி. சேகர், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். – செய்தி

அது என்ன நிபந்தனையற்ற மன்னிப்பு? அதாவது, ஸ்டாலின் முதல்வராக வரவே முடியாது என்று அவரது  ஜாதகத்தில் இருக்குன்னு திமிரில் பேசினார் அல்லவா? அப்படி ஜாதகத்தை நம்பியதற்கும் சேர்த்து கேட்பதுதான் நிபந்தனையற்ற மன்னிப்பு; இப்ப புரியுதா?

  • உ.பி. சிறையில் கைதிகளுக்கு காயத்ரி மந்திரம் ஓத பா.ஜ.க. அரசு திட்டம்.

-செய்தி

ஆர்.எஸ்.எஸ்.க்கு ‘தேச பக்தர்’களை பிடிக்க இப்படி ஒரு ‘ரூட்’ இருக்கா?

  • குஜராத் பள்ளிகளில் ‘பகவத் கீதை’ கட்டாயப் பாடம். – செய்தி

‘பாஸ் மார்க்’ வாங்காவிட்டால், தேச விரோதி என்று கூறி பள்ளியிலிருந்து ‘டிஸ்மிஸ்’ என்று, ஒரு உத்தரவையும் சேர்த்துப் போடுங்க.

  • ‘ராம நவமி’ நாட்களில் டெல்லி ஜெ.என்.யூ. மாணவர் விடுதியில் அசைவ உணவுக்குத் தடை. – செய்தி

ராமனே ‘பீஃப் பிரியர்’ என்று வால்மீகி இராமாயணமே கூறுகிறதே; ஏனப்பா, இராமனை இழிவுபடுத்துறீங்க…

  • ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை தொடர்பு மொழியாக்க வேண்டும்.

– அமித்ஷா

“இந்தி வேண்டாம் போடா” ஸ்டிக்கர்களைக் கோடிக்கணக்கில அச்சடிக்க தமிழ்நாட்டில் ஸ்டிக்கர் கம்பெனிகள் தயாராகி வருகின்றன. நல்ல தொழில் வாய்ப்பை உருவாக்கிய அமித்ஷாவுக்கு நன்றி.

 

பெரியார் முழக்கம் 14042022 இதழ்

  • வன்னியர்களை அவமதித்து படமெடுத்த சூர்யாவுக்கு 5 கோடி இழப்பீடு கேட்டு பா.ம.க நோட்டீஸ்.

– செய்தி

பா.ம.க. நிறுத்திய வன்னியர் வேட்பாளர்களைத் தோற்கடித்து அவமானப்படுத்திய வாக்காளர் களுக்கும் நோட்டீஸ் அனுப்புங்க. அப்பதான் புத்தி வரும்.

  • இராம பக்தர்களுக்கான சிறப்பு இரயிலில் பணியாளர்கள் காவி உடை, உத்திராட்சை மாலை அணிவது எங்களை புண்படுத்துகிறது. – சாதுக்கள் எதிர்ப்பு

அப்ப,  ‘அனுமான்’ வேடம் தான் போட வேண்டும்.

  • சைவ உணர்வாளர்களின் மனம் புண்படுவதால் மீன், இறைச்சியை வெளிப்படையாக உண்பதற்கு குஜராத்தில் அரசு தடை. – செய்தி

இது அநியாயம் ! சிறுபான்மை சைவ இந்துக்களை அசைவத்துக்கு மாறச் சொல்லுங்க. பெரும்பான்மை தான் ‘இந்து’ க்களுக்கு முக்கியம்.

  • விவசாய சட்டங்களில் ‘ஒரு கமா, புள்ளி’ யைக் கூட மாற்ற மாட்டோம்.

– பாஜக அண்ணாமலை.

சொன்னதை அப்படியே நிரூபிச்சுட்டீங்க… கமா, புள்ளியை மாற்றாமல் சட்டத்தையே ஓரங்கட்டிட்டீங்க…

  • மும்மொழித் திட்டத்தை எதிர்க்கும் சூர்யா தனது படத்தை 5 மொழிகளில் எடுக்கலாமா ?

– எச். இராஜா

எடுக்கவே கூடாது ; அதோடு – இந்தி பேசும் மாநிலங்களுக்குக் கூட பயணம் போக கூடாது. நல்ல அறிவுக் கொழுந்து சார் நீங்க…

 

பெரியார் முழக்கம் 25112021 இதழ்

  • கோயில்களுக்கு உரிய நான்கு சக்கர வாகனங்கள் ‘இறைவனுக்கு’ மட்டுமே உரிமையானது. அரசு தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.

– இந்து அறநிலையத் துறை அறிவிப்பு

ஆகம விதிகளில் மோட்டார் வாகன விதிகளையும் சேர்த்து விட்டீர்களா? சொல்லவே இல்லை.

  • ஜெர்மன் நாட்டின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை மூடப்படுகிறது; தமிழக அரசு உறுதி அளித்தபடி 1 கோடியே 24 இலட்சத்தை வழங்காததே காரணம்.            – செய்தி

தமிழைத் தமிழ்நாட்டில் வளர்ப்பதுதான் அம்மா ஆட்சி; ஜெர்மனியில் அல்ல என்பதை எதிர்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • மோடி படம் – பகவத் கீதையுடன் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. – செய்தி

நல்லது; ‘செயற்கைக் கோள்’ பெயரை உடனே ‘இராமபானம்’ என்று மாற்றி விடுங்கள்!

  • மூலைக்கு மூலை கோயில்கள் இருப்பதால்தான் நாம் கொரனாவி லிருந்து மீண்டோம். – இந்து மாநாட்டில் தமிழிசை

கொரானா காலத்தில் கோயில்களே மூடப்பட்டிருந்ததை தமிழிசை மறந்து விட்டார் போல!

  • கடவுள் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் தனியாக அங்கீகரிக்கவில்லை; மனித சமூகத்தை மட்டுமே அங்கீகரிக்கிறார். – சென்னை உயர்நீதிமன்ற அமர்வு

உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது; கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்தி ரங்கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை. எனவே பிராமணனே கடவுள் – ரிக் வேதம்.

பெரியார் முழக்கம் 04032021 இதழ்

  • தவறு பா.ஜ.க. மீது இல்லை; சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சியில் தக்க வைத்துக் கொள்ளாத நாராயணசாமி மீது தான் குற்றம்.

– தொலைக்காட்சியில் பா.ஜ.க. விவாதம்

ஆமாம்! வீடு புகுந்து பணம், நகைகளைக் கொள்ளையடித்தவன் மீது குற்றம் அல்ல; அதைப் பாதுகாப்பாக தக்க வைத்துக் கொள்ள முடியாத வீட்டுக்காரர்தான் குற்றவாளி!

  • ம.பி. முதல்வர் சவுகான் அரசு விடுதியில் கொசுக்கடிக்கு உள்ளானதால் அதிகாரி பதவி நீக்கம். – செய்தி

கடித்த கொசு வேறு மதத்தைச் சார்ந்த கொசுவாக இருக்கலாம்! பாவம்! அந்த அதிகாரியை விட்டு விடுங்கள்!

  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. – நிர்மலா சீத்தாராமன்

அதை உங்கள் கட்சி தமிழ்நாட்டு தலைவர்களிடம் விட்டுவிடுங்கள். பெட்ரோல் விலை உயர்வது மோடி ஆட்சியின் பொருளாதார வளர்ச்சியே என்று பதிலடி தருவார்கள்!

  • பா.ஜ.க.வில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கோரும் திட்டமில்லை.

– பா.ஜ.க. முருகன்

ஆமாம்! இங்கே ஆளுநர் பதவிக்குத்தான் போட்டா போட்டி.

  • வீடு இல்லாத அனைவருக்கும் 2 சென்ட் நிலம்; நிலத்தில் வீடும் கட்டித் தரப்படும். – எடப்பாடி அறிவிப்பு

கார் இல்லாத அனைவருக்கும் பெட்ரோலுடன் புத்தம் புதிய கார், டிரைவரை அரசு செலவில் வழங்க அடுத்த அரசாணை தயாராகி வருகிறது.

பெரியார் முழக்கம் 25022021 இதழ்

  • வெங்காயத்தை தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் பதுக்கியதால் தான் விலை உயர்ந்துள்ளது. – ‘தினமலர்’ செய்தி

அப்படியா! அப்ப பெட்ரோல் – டீசலையும் இவுங்கதான் எங்கோ பதுக்கியிருப்பாங்க போல! உடனே கண்டுபிடிக்கனும்.

  • இராமன் கோயில் கட்ட இதுவரை 1511 கோடி நிதி வசூல்.

– அறக்கட்டளைத் தகவல்

நிர்மலா சீத்தாராமனிடம் கேட்டிருக்கக் கூடாதா? உணவு மான்யங்களை நிறுத்திவிட்டு பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்கியிருப்பாரே!

  • இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைப்பது இல்லை..

– ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சன் கோகாய்

நீதி கிடைக்காவிட்டாலும் ஓய்வு பெற்ற பிறகு நீதிபதிகளுக்கு எம்.பி. பதவி கிடைக்கும்.

  • சென்னையில் நடந்த திருப்பதி கோயில் விழாவில் காஞ்சி சங்கரச்சாரி, சேகர் ரெட்டி சிறப்பு விருந்தினர்கள். – செய்தி

முன்னாள் கைதிகள் தான்; ஆனாலும் சிறைகளுக்குள்ளும் பக்தியை விட்டு விடாத ‘ஒழுக்கசீலர்கள்’.

  • தனித்துப் போட்டியிட்டால் 234 தொகுதிகளும் தே.மு.தி.க. தான் வெற்றி பெறும். – பிரேமலதா

அய்யய்யோ… அப்படி எல்லாம் செஞ்சிடாதீங்க. பாவம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கும் ஒன்றிரண்டு வெற்றி பெற கருணை காட்டுங்கள்!

  • ‘கோ பேக் மோடி’ என்று எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள்.

– பா.ஜ.க. முருகன்

ஆமாம்! ஆமாம்! இதை டிவிட்டரில் பார்ப்பவர்களும் தேச விரோதிகள் என்று அறிவிச்சிடுங்க. அப்ப தான் தேச விரோதிகள் அடங்குவாங்க!

பெரியார் முழக்கம் 18022021 இதழ்

  • சசிகலா வரவேற்பு; சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற அமைச்சர்கள் காவல்துறை இயக்குனரிடம் மனு. – செய்தி

அடுத்து காவல்துறை இயக்குனர் ‘கான்ஸ்டபிளை’ நேரில் சந்தித்து ‘சல்யூட்’ அடித்து, மனு கொடுப்பார் போல!

  • ரூ.250 கட்டினால் பழனி கோயில் பிரசாதம் அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும்.     – அறநிலையத் துறை  அமைச்சர்

பக்தியை இப்படியே அமேசான் ‘ஆன் லைன்’ சேவைகளாக்கி விட்டால், கோயில்களையே இழுத்து மூடி விடலாம்! சபாஷ்! பகுத்தறிவு பக்திக்குள்ளும் நுழைஞ்சுட்டுதே!

  • 7 பேர் விடுதலையில் குடியரசுத் தலைவர் முடிவு எடுப்பார்.

– தமிழக ஆளுநர்

அதாவது, ‘எந்த முடிவும் எடுக்க மாட்டேன்’ என்ற முடிவை எடுப்பார்; அப்படித் தானே! நல்ல முடிவு!

  • கடந்த 5 ஆண்டுகளில் சாக்கடைக் குழியில் மனிதக் கழிவுகளை அகற்றும்போது 340 பேர் உயிரிழந்துள்ளனர். – செய்தி

அதனால் என்ன? ‘ஸ்வச் பாரத்’ திட்டத்துக்கு எதிராக தீவிரவாதிகள் சதின்னு அறிவிச்சுடலாம்!

  • போராடும் விவசாயிகளுடன் பேசத் தயார். – மோடி

அடேங்கப்பா… விவசாயிகள் போராட்டம் நடக்குதுன்னு, பிரதமர் தெரிஞ்சு வச்சிருக்காரே! கெட்டிக்கார மனிதர்!

பெரியார் முழக்கம் 11022021 இதழ்

  • பா.ஜ.க. – அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்.                                 – ஜே.பி. நட்டா

அ.இ.அ.தி.மு.க.வுக்கு 20 இடங்கள் ஒதுக்குவீர்களா? அல்லது அதற்கும் குறைவாகவா?

  • உலகப் பிரச்சினைகளையெல்லாம் இந்தியா தீர்த்து வைத்திருக்கிறது.                                 – மோடி

கடந்த ஆண்டு நீங்கள் உலகப் பயணமே போகவில்லையே! அதுதான் ‘ஜி’ காரணம்!

  • புரட்சித் தலைவி அம்மா உயிருடன் இருந்திருந்தால்கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது.

– அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இந்தப் பொன்மொழியை அங்கேயே ஒரு கல்வெட்டில் செதுக்கி, எவரும் இடித்து விடாமல் பாதுகாக்க அங்கேயே உட்கார்ந்துக்குங்க.

  • நான் எதற்கு கருவறைக்குள் போக வேண்டும்? அதற்குரிய தகுதி உள்ளவர்கள்தான் போக முடியும். – பா.ஜ.க. தலைவர் முருகன்

பா.ஜ.க. தலைவராக இருக்க உங்களுக்கு முழுத் தகுதி இருக்கிறது என்பதை நிரூபிச்சுட்டீங்க.

  • தேசியக் கொடி அவமதிப்பால் தேசம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

– மோடி பேச்சு

அதை சரி செய்யத்தான் தேசத்தைப் பாதுகாக்க பன்னாட்டு கம்பெனிகளிடம் விற்கிறீங்க போல…

பெரியார் முழக்கம் 04022021 இதழ்

  • பசுவின் சாணியிலிருந்து தயாரிக்கும் சோப்பு மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்.                    – கருநாடக அமைச்சர் பிரபு சவுகான்

அவுங்க மட்டுமே, இனி பாஜக-வில் சேர முடியும்னு அறிவிச்சிருங்க; கட்சி ‘பொத பொதன்னு’ வளரும் !

  • உ.பி அரசு நடத்திய ‘கோ சாலையில்’ மின் விபத்து ; 12 பசுக்கள் பரிதாப சாவு.              – செய்தி

பரவாயில்லை; யாகம் நடத்தி வேதம் ஓதி, மோட்சத்துக்கு அனுப்பினால் சரியாகிடும்.

  • அஞ்சல் துறை பணியாளர் தேர்வு : மீண்டும் தமிழ் புறக்கணிப்பு. – செய்தி

அடுத்து அஞ்சல் முகவரிகளிலேயே தமிழ் எழுத்துக்களுக்குத் தடை வந்துடும் போலிருக்கு !

  • உலகின் கலாச்சாரத் தலைமைப் பொறுப்பை இந்தியாவே ஏற்க வேண்டும்.

– செய்தி

ஆமாம், உலகத் தலைமைப் பதவியை நாங்களே எடுத்துக்குவோம் ; இதுவே எங்களின் உயர்ந்த கலாச்சாரம்.

  • வதந்திகளை நம்ப வேண்டாம்.     – பிரதமர் மோடி

நியாயமான பேச்சு ஜீ; அதுதான் நீங்க பேசுவதை நாங்க நம்புறதே இல்லை.

  • இரஜினி மக்கள் மன்றத்துடன் காந்தி மக்கள் இயக்கத்தை இணைக்கவில்லை.

– தமிழருவி மணியன்

காந்தியையும் இரஜினி இரசிகராக்கியே தீருவேன் என்று முயற்சிக்காத தமிழருவிக்கு கோடான கோடி நன்றி !

பெரியார் முழக்கம் 14012021 இதழ்

  • அய்தராபாத்தில் ‘பிராமணர்கள்’ மட்டுமே பங்கேற்ற கிரிக்கெட் போட்டி,

டிசம். 25, 26 தேதிகளில் பி.எஸ்.ஆர். மைதானத்தில் நடந்தது.   – செய்தி

பிராமணர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஜல்லிக்கட்டு’வைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம், ‘சுவாமி’!

  • ஒரு இந்துவாக இருப்பவன், இந்தியாவுக்கு எதிராக இருக்கவே முடியாது.

– ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத்

ஆனால், சக இந்தியனுக்கு எதிராக இருக்கலாம்; எந்தத் தடையும் இல்லை.

  • உ.பி.யில் முராத் நகரில் சுடுகாட்டுக்கு சடலத்தை எரிக்க வந்தவர்கள் மீது மயான சுடுகாடு கூரை விழுந்தது; 23 பேர் பலி. – செய்தி

உ.பி. மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 83 குழந்தைகள் பிராண வாயு சிலிண்டர் இல்லாமல் இறப்பார்கள்; பிணத்தை எரியூட்ட வந்தவர்களே பிணமாவார்கள்; இதற்குப் பெயர்தான் ‘இராமராஜ்யம்’.

  • இரஷ்ய, அமெரிக்க ஜனாதிபதிகளைப்போல முதல் கொரானா தடுப்பு ஊசியை மோடி போட்டுக் கொள்ள வேண்டும். – பீகார் காங். தலைவர் அஜீத்

அதெல்லாம் முடியாது சார்! முதல் தடுப்பு ஊசி ஸ்ரீமான் இராமச்சந்திர மூர்த்திக்குத் தான்! அது தான் இந்து ‘தர்மம்’!

  • அரசியலுக்கு பா.ஜ.க. இழுக்கும் கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு நெஞ்சு வலி.

– செய்தி

ரஜினியோடு இந்த விளையாட்டை நிறுத்த மாட்டாங்க போலிருக்கே…

பெரியார் முழக்கம் 07012021 இதழ்

  • யானை மீது உட்கார்ந்து யோகா செய்து காட்டிய பதஞ்சலி அதிபர் பாபா ராம்தேவை யானை கீழே தள்ளியது. – செய்தி

யானை அப்படி எல்லாம் கீழே தள்ளவில்லை; அதுவும் யோகா பயிற்சி செய்து கொண்டிருந்தது.

  • 2018-19இல் அரசியல் கட்சிகளுக்கு கம்பெனிகள் வழங்கிய மொத்த நன் கொடை ரூ. 876 கோடியில் பா.ஜ.க.வுக்கு கிடைத்தது ரூ.700 கோடி. – செய்தி

அப்படியா! 176 கோடி எந்தக் கட்சிக்குப் போனது? உடனே பறிமுதல் செய்ய அமுலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்!

  • மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டிறைச்சி போடுவதை நிறுத்தக் கோரி அசாமில் பா.ஜ.க.வின் முற்றுகைப் போராட்டம்.           – செய்தி

காவிக் கொடிகளோடு காட்டுக்கே போய் புலிகளை முற்றுகையிடுங்கள்; அப்பத்தான் புலிகள் அடங்கும்!

  • இனி எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கவே முடியாது.        – பா.ஜ.க. தலைவர் முருகன்

சரி தான். பா.ஜ.க. தலைவர் முருகன், பழனி முருகனாக அவதரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அப்படி ஒரு ‘வரம்’ கொடுத்து விட்டார் போல!

  • பீகாரில் தேர்தல் கணிப்புகளை முன்கூட்டியே வெளியிட சோதிடர்களுக்கு தடை. – தேர்தல் ஆணையம்

சரியான முடிவு! தேர்தல் முடிவுகள் வரட்டும்; அப்புறம் பாருங்கள்; யார் வெற்றி பெறுவார்கள் என்பதை புட்டுப் புட்டு வச்சுருவாங்க. அது அறிவியலாச்சே, சும்மாவா!

பெரியார் முழக்கம் 22102020 இதழ்

  • எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்கும் கட்சிகளே அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற முடியும்.

– அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி

அதோடு நிறுத்திடாதீங்க… எடப்பாடியை முதலமைச்சராக ஏற்கும் வாக்காளர்கள் மட்டுமே இனி தமிழ் நாட்டில் இடம் பெற முடியும்னு ஒரே போடா போட்டுடுங்க!

  • மோடி தனது வெளிநாட்டுப் பயணத்துக்காக வாங்கியுள்ள புதிய விமானத்தின் விலை ரூ.8500 கோடி.               – செய்தி

விமானத்துக்குள்ளேயே யோகா நடத்தலாம்; மயிலுக்குத் தீனி போடலாம்; தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தையே கூட்டி மசோதாக்களை விவாதம் இல்லாமல் நிறைவேற்றும்  வசதி எல்லாம் இருக்கும் போலிருக்கு!

  • யாருடன் வேண்டுமானாலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்று பேசிய பொன். ராதாகிருஷ்ணன், இரண்டே நாளில் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி என்று குரலை மாற்றிக் கொண்டார்.                                         – செய்தி

எதுக்கு இப்படி மாத்தி மாத்திப் பேசுறீங்க; எங்க கூட்டணி எப்போதுமே அந்தந்த மாநில ஆளுநர்களுடன் தான் என்று ஒரே வரியில் முடிச்சுடுங்க.

  • கொரானா பரவுவதால் மதப் பண்டிகைகளை பாதுகாப்புடன் மக்கள் கொண்டாட வேண்டும்.        – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

ஆமாம், பகவானுக்கு படையல் போடும்போது முகக்கவசம் போடுங்கள்; தீபார்த்தனை செய்யும்போது சானிட்டைசர் கொண்டு கை கழுவுங்கள்; ‘பகவான்’களிடமிருந்து  இடைவெளிவிட்டு தூரத்தில் நின்று நமஸ்காரம் செய்யுங்கள்; ‘பகவான்’ தொற்றுக்கும் இன்னும் தடுப்பூசியை வெளிநாட்டுக்காரன் கண்டு பிடிக்கவில்லை சார்; ஜாக்கிரதைங்கோ…

  • உச்சநீதி மன்ற நீதிபதி எம்.வி. ரமணா, ஆந்திர அரசுக்கு எதிராக தீர்ப்புகளை வழங்க ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் செல்வாக்கு செலுத்துகிறார்.

– ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புகார்

நல்லது; நீதிபதி ரமணா பதவி ஓய்வு பெற்ற அடுத்த நாள் ‘எம்.பி.’ பதவி உறுதியாகி விட்டது!

  • வயது அதிகரிக்க அதிகரிக்க சிந்தனையில் மாற்றம் வரத்தான் செய்யும்.

– பா.ஜ.க.வின் இணைந்த குஷ்பு

அப்ப அடுத்த இரண்டு வருஷத்துல வேறு சிந்தனைக்கு போயிடுவீங்களா?

  • கிராமப்புற மக்களுக்கு கடன் வாங்க சொத்து அட்டை.

-மோடி அறிவிப்பு

ஆண்டுக்கு 15 இலட்சம் வங்கியில் போடுவேன்னு சொன்னீங்க; இப்ப கடன் வாங்குறதுக்கு அட்டை கொடுக்கிறீங்க!

 

பெரியார் முழக்கம் 15102020 இதழ்

ட           பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள, டீசல் விலையை கடுமையாக உயர்த்தி எண்ணெய் நிறு வனங்களின் வருவாய் இழப்பை குறைக்க வேண்டும்.                            – பிரதமரின் பொருளாதார ஆலோசகர்              கி. ரெங்கராஜன்

எண்ணெய் நிறுவனங்கள் நெருக்கடியி லிருந்து மீண்டுவிடும். ஆனால், எண்ணெயைப் பயன்படுத்த மக்கள் தான் இருக்க மாட்டார்கள். அதனாலென்ன? பொருளாதாரம், முக்கியம் பிரதமரே!

ட           நிலக்கரி சுரங்க ஒதுக்கிடு கோப்புகள் திருடப் பட்டுள்ளன. இது தொடர்பாக எப்போது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப் போகிறீர்கள்?  – சுஷ்மா சுவராஜ் கேள்வி!

முதல் தகவல் அறிக்கையும் காணாமல் போகும் என்பது உறுதியானால், இப்போதே தாக்கல் செய்ய தயார்!

ட           7 வயதில் பள்ளிப் படிப்பையும் 13 வயதிலேயே பட்டப் படிப்பையும் முடித்து சாதனைப் புரிந்த உ.பி. மாநில சிறுமி சுஷ்மா வர்மா மேல் படிப்புக்கு உதவிட பல்கலைக் கழகங்கள்  போட்டிப் போட்டு ஆர்வம்.                            – செய்தி

… ப்பூ … இது ஒரு சாதனையா? எங்க ஊருல திருஞானசம்பந்தன் குழந்தையாக பிறந் தவுடனேயே ‘பதிகம்’ பாடியவன், தெரியுமோ?

ட           ரிசர்வ் வங்கி கொள்கைகளை உருவாக்குதில்  வெளிப் படையான அணுகுமுறை வேண்டும்.                                   – புதிய கவர்னர் ரகுராம் ராஜன்

…. அப்ப இதுவரை ரிசர்வ் வங்கி வெளிப் படையாக செயல்படவில்லைன்னு சொல்ல வர்றீங்க… அப்படித் தானே!

ட           தமிழ்நாடு முழுதும் உள்ள கோயில்களில் மாற்று மின் சக்தியான சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.           – அறநிலையத் துறை அமைச்சர் தனபால்

மாற்று மின் சக்தியை ஆகமம் ஏற்றுக் கொள்ளும். ஆனால், பார்ப்பன அர்ச்சகருக்கு பதிலாக மாற்று ஜாதி அர்ச்சகரை மட்டும் ஆகமம் ஏற்காது; அப்படித்தானே?

ட           வினாயகன் சிலைகளை பூஜைக்குப் பின், ஆறு, குளம் ஏரிகளில் கரைப்பது, ‘மண்ணில் பிறக்கும் நீ மண்ணுக்கே சொந்தம்’ என்ற தத்துவத்தை விளக்கு வதற்குத்தான்.                 – ‘தினமலர்’ கட்டுரை

சும்மா கதை விடாதீங்க… பார்ப்பான் வேதம் ஓதி ‘புனித சக்தி’ ஊட்டப்படாத வினாயகன் சிலைகளை மக்கள் கோயில் கட்டி வழிபட்டு விடக்கூடாது என்பதுதான் தண்ணீரில் கரைக்கச் சொல்லும் ரகசியம். அது எங்களுக்கும் புரியும். அது சரி, மண்ணில் பிறப்பவர் மண்ணுக்குச் சொந்தம் என்றால், வினாயகனை மண்ணில் குழித் தோண்டி புதைக்க வேண்டியது தானே? ஏன் தண்ணீரில் கரைக்க வேண்டும்?

ட           கிரிமினல் குற்றத்தில் சிறையில் இருப் பவர்கள் சிறையிலிருந்தபடியே தேர்தலில் போட்டியிட நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறை வேறியது.     – செய்தி

அப்போ, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் என்ற பெயரை கிரிமினல் பிரதிநிதித்துவ சட்டம் என்று மாற்றிடுங்க!

ட           போடி தொழிலதிபர் திருப்பதி ஏழுமலை யானுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் தங்கத்தில் ‘பாதம்’ செய்து காணிக்கை யாக்கினார். திருப்பதியிலிருந்து அர்ச்சகர்கள் நேரில் வந்து பூஜை செய்து எடுத்துச் சென்றனர்.        – செய்தி

ஏழுமலையானுக்கு ஒரு பக்தர் தங்கத்தில் ‘மூளை’ செய்து தர விரும்புகிறார். ஏழுமலை யான் அர்ச்சகர்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்வார்களா?

ட           ‘கடவுள் அவதார சாமியார்கள் மற்றும் சோதிடர்’களை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் மக்களுக்கு சேவை செய் கிறார்கள். அதற்காக ஊதியத்தையும் பெறு கிறார்கள். அவர்களும் ‘தொழில் முனைவர்’கள் தானே?                     – அலகாபாத்உயர்நீதிமன்றத்தின்          லக்னோ கிளை தீர்ப்பு (செப்.3)

அப்படின்னா, ஒரு சந்தேகம்! சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி செய்தவர்கள்; வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக மோசடி செய் பவர்கள் கூட ‘சேவைக்கு பணம்’ பெறுவோர் தான். அவர்களையும் சோதிடர், சாமியார் களாகவே கருதி அலகாபாத் நீதிமன்றம் தொழில் முனைவோர் பட்டியலில் சேர்த்து விடுமா?

ட           பில்லி சூன்ய மோசடிக்கு எதிராக சட்டம் கொண்டு வர வலியுறுத்திய மராத்திய பகுத்தறி வாளர் தபோல்கார், பில்லி சூன்ய நம்பிக்கை யாளர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டார்.            – செய்தி

பில்லி சூன்யம் உண்மை என்று நம்பும் கும்பல் அதை ஏவி விட்டிருக்கலாமே! ஏன் துப்பாக்கியை தூக்க வேண்டும்?

ட           பகவான் கிருஷ்ணரை கடுமையாக அவமதித்து அறிக்கை வெளியிட்ட தி.க. தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி யாதவ மகா சபைத் தலைவர் டி.தேவநாதன், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.                     – செய்தி

அடேங்கப்பா…. கிருஷ்ணனுக்காக எப்படி கூவுறாரு பார்த்தீங்களா? அப்படி ஒரு ‘ஃபீலிங்கு’!

ட           அரசு கோயில்களில் சேர்ந்துள்ள தங்கம், மக்களின் காணிக்கை. இதனை எடுக்கவோ, கொடுக்கவோ யாருக்கும் அதிகாரம் கொடுக்க வில்லை.               – இராமகோபாலன்  அறிக்கை

இப்படி அறிவிக்கும் அதிகாரத்தை இராம கோபாலனுக்கு யார் கொடுத்தார்களாம்? எந்தக் கடவுளிடம் இந்த அதிகாரத்துக்கான ‘வரம்’ பெற்று வைத்திருக்கிறார் என்பதையும் விளக்கினால் நல்லது!

ட           கோயில் அர்ச்சகர்களை அரசு ஊழியர்களாகக் கருதி, அரசு ஊழியர்களுக்குரிய சலுகைகளை வழங்க வேண்டும்.          – ஓய்வு பெற்ற அர்ச்சகர் உயர்நீதிமன்றத்தில்                             பொது நலன் வழக்கு

ஓ…. தாராளமாக கருதலாமே! அரசு ஊழியர்கள் நியமனத்தில் பின்பற்றும் 69 சதவீத தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அர்ச்சகர் நியமனத்திலும் பின்பற்றினால், அர்ச்சகர்களும் அரசு ஊழியர்களாகிடலாம்!

ட           மனித மலத்தை மனிதனே எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துவோரை 5 ஆண்டுகள் தண்டிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. – செய்தி

இந்தச் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல் மனிதர் குஜராத் மோடி தான்! அவர் தான் மலம் எடுக்கும் தொழில் தான் மிக உயர்ந்த கடவுள் திருப்பணி என்று நூல் எழுதியுள்ளார்.

ட           மத்திய அரசு மகாராஷ்டிராவைப் போல் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.                 – கலைஞர் அறிக்கை

எதிர்கட்சியாக இருக்கும்போது கலைஞர் கொள்கையில் ‘சொக்கத் தங்கம்’ தான். ஆனால், ஆளும் கட்சியாக இருக்கும்போது மட்டும் கட்சியில் உருவாக்கிய பகுத்தறிவு அணியையும் சரி; ஆட்சியில் உருவாக்கிய சமுதாய சீர்திருத்தக் குழுவையும் சரி செயல்பட விடாமல் முடக்கிப் போட்டுவிடுவார்.

ட           இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை மத்திய அரசு வழங்குவது, ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எடுத்த முடிவு; இப்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல.         – அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்

ஏற்கனவே செய்து கொண்ட ராஜீவ்-ஜெய வர்த்தனா ஒப்பந்தத்தை குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டதே இலங்கை. அதைத் தட்டிக் கேட்டீர்களா? சரி; அது போகட்டும்! பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காந்தியும், இர்வின் பிரபுவும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி நிறைவேற்றப்பட வேண்டிய அம்சங்கள் ஏதாவது இருந்தால், அதையும் சொல்லி விடுங்கள்!

ட           இலங்கையில் என்னை சந்தித்த பத்திரிகை யாளர் மற்றும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.  – அய்.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை

அய்.நா. மனித உரிமை ஆணைய தலைவரின் உரிமைகளே பறிக்கப்படும் ஒரு நாட்டில் காமன் வெல்த் தலைவர்கள் மாநாடு கூட்டுவதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்!

ட           திண்டுக்கல்லிலிருந்து கச்சத் தீவுக்கு தடையை மீறி இந்து மக்கள் கட்சியினர் கொண்டு செல்ல முயன்ற ‘விநாயகனை’ போலீசார் பறிமுதல் செய்தனர்.        – செய்தி

நல்ல நடவடிக்கைதான்! ‘வினாயகன்’ திண்டுக்கல்லிலேயே தங்கி ஒவ்வொரு நாளும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதிப்பது, நல்லது!

ட           வினாயகர் சதுர்த்தி தினத்தில் கன்னியாகுமரி  அருகே சிறப்பு வழிபாடுகள் முடிந்த பிறகு, நள்ளிரவில் கோயில் கதவை உடைத்து, சிலை திருட்டு, போலீசில் புகார்.   – செய்தி

வினாயகனே கோயில் கதவை உடைத்து, வெளியே போய் கொண்டாட்டங்களைப் பார்வையிட சென்றிருப்பாரா என்ற கோணத்திலும் காவல்துறை புலன் விசாரணை நடத்துவது  நல்லது.          ட

பெரியார் முழக்கம் 12092013 இதழ்

பிரதமர் ஆகும் கனவு எனக்கில்லை என்று கூறிய மோடி –  பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட் டுள்ளார்.            – செய்தி

பிரதமர் வேட்பாளராகும் கனவாவது நிறைவேறட்டுமே என்ற நல்ல நோக்கம் தான்.

வினாயகன் சிலைகளை ஊர்வலமாக எந்தப் பகுதி முதலில் எடுத்துச் செல்வது என்பதில் தாம்பரம், பல்லாவரம் பகுதி ஊர்வலக் குழுக்களுக்கு இடையே மோதல்; இரண்டு பேருக்கு கத்திக் குத்து. – செய்தி

ஓகோ, ஜாதி-மோதல், மத-மோதல் களைக் கடந்து இந்துவும்-இந்துவும் மோதலா? ஓம் வினாயக நம!

 குருவாயூர் கிருஷ்ணன் கோயிலிலுள்ள தங்க நகை இருப்புக் குறித்து அரசுக்கு தகவல்  தெரிவிக்க வேண்டிய அவசிய மில்லை.                      – தேவஸ்வம் போர்டு அறிவிப்பு

அப்படியா? நகை திருட்டுப் போனால் போலீசில் தகவல் கொடுக்காமல் நேரடியாக போலீஸ் மோப்ப நாய்க்கு அழைப்பு விடுவீர்களோ?

 குஜராத்தில் – வினாயகர் சிலைகளை கரைப்பதற்காக லாரிகளில் ஏற்றிச் சென்றபோது நடந்த விபத்தில் 5 பக்தர்கள் பலியானார்கள்; 17 பேர் படுகாயமடைந்தனர்.     – செய்தி

லாரியில் வந்த ‘வினாயகன்’ என்ன ஆனார்? ‘கடவுள் அருளால்’ உயிர் பிழைத்து விட்டாரா?

சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தின் முறைகேடு குறித்து சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு அய்.அய்.டி. நிர்வாகம் இடைக்காலத் தடை பெற்றது.                    – செய்தி

இந்த வழக்கிற்கான செலவுகளையும் அய்.அய்.டி.தான் செய்யப் போகிறதா? அல்லது பார்ப்பன நிறுவனங்களிடம், வழக்கு நிதி திரட்டப் போகிறதா?

அய்.ஏ.எஸ். – அய்.பி.எஸ். அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவ சிகிச்சை செய்தால் அந்த செலவை அரசு ஏற்கும்.                   – மத்திய அரசு அறிவிப்பு

ஏன் மருத்துவச் செலவை மட்டும் ஏற்க வேண்டும்? வெளிநாடு சென்று நிர்வாகம் செய்தாலும் அதற்கு ஊதியச் செலவையும் ஏற்கும் என்று தேச பக்தியோடு அறிவிக்கலாமே!

ராஜஸ்தான் மாநில நகர வளர்ச்சி மேம்பாட்டுத் துறை 47 ஜாதிப் பிரிவு களுக்கு தனித்தனியாக சுடுகாடுகளை கட்டுவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.                          – செய்தி

அடுத்து ஜாதி வாரியாக கழிப் பறைகளையும் கட்டி விடுங்கள்! பா.ஜ.க. தேர்தல் அறிக்கையிலும் இந்த திட்டங்களை முன் வைக்கலாம்.

 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கேதார்நாத் கோயில் 86 நாட்களுக்குப் பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.                  – செய்தி

இந்த 86 நாட்களும் கோயிலுக்குள் இருந்த ‘பகவான்’ எங்கே இருந்தார்? எப்படி மீண்டும் கோயிலுக்கு வந்தார்? என்பதை பக்தர்களுக்கு விளக்கினால் நல்லது!

பெரியார் முழக்கம் 19092013 இதழ்

ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுவோம்.                           – விஜயகாந்த்

அந்த ஃபீனிக்ஸ் பறவையே உங்கள் கட்சியைப் போல் தான் சார்; அப்படி ஒன்று இல்லை.

திருட்டுப்போய் கைப் பற்றப்பட்ட சாமி சிலை களை அடையாளம் காட்டினால் அந்தந்த கோயில்களிடம் ஒப்படைக்கப்படும்.                 -காவல்துறை அறிவிப்பு

கடவுளைக் கண்டுபிடித்தது காவல்துறை; கடவுளை அடையாளம் காட்டுபவன் மனிதன்; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை.

திருப்பதி ஏழுமலையான் கருவறை கோபுரத்துக்கு மேலே விமானங்கள் பறப்பது ஆகமத்துக்கு எதிரானது. – திருப்பதி தலைமை அர்ச்சகர்

காக்கா, குருவி எல்லாம் பறக்குறதுக்கு ஆகமம் அனுமதிக்குதுங்களா… கொஞ்சம் பார்த்து சொல்லுங்க.

திருவாரூர் தியாகராஜ சாமி தேரில் பவனி வந்தார்.- செய்தி

அப்படியே மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண் டிருப்பாரே… பெற்றிருப்பார். மக்கள் பிரதிநிதிக்கு அதுதான் அழகு!

டெல்லி பல்கலைக் கழகத்தில் படித்து மோடி பட்டம் வாங்கினாரா என்ற தகவலை வெளியிட முடியாது; அது பாதுகாக்கப்பட வேண்டிய இரகசியம்.   – பல்கலைக்கழகம் தகவல்

இந்தியாவின் தேச பாது காப்பே அதுக்குள்ளதான் அடங்கியிருக்குதா, அய்யா! அப்படீன்னா இரகசியத்தை எக்காரணம் கொண்டும் வெளியில உட்டுடாதீங்க…

திருப்பதி ஏழுமலையான் வைப்புத் தொகை அதிக வட்டி தரும் வங்கிகளுக்கு மாற்றம். – செய்தி

சுவிஸ் வங்கியில போடுங்க. இல்லாட்டி பனாமாவுக்கு மாத்துங்க… ஏழுமலையான் சேமிப்புக்கு நல்ல வட்டி வரணும்; இல்லாட்டி தெய்வக் குத்தமாயிடும்!

பெரியார் முழக்கம் 23062016 இதழ்

‘அட்சய திருதியை’ நாளில் தங்கம் வாங்கினால், அது மேலும் மேலும் பெருகும்.  – நகைக்கடை விளம்பரங்கள்

                அப்படின்னா, கடைக்காரங்க தங்கத்தை வாங்கத் தானே வேண்டும்! ஏன், கூவிக் கூவி விக்குறாங்க?

‘அட்சயம்’ என்றால், ‘வளரும்’ என்பது அர்த்தம். தங்கம்தான் வாங்க வேண்டுமென்பது அல்ல, எதை வாங்கினாலும் வளரும்.              – செய்தி

                அப்ப இந்தியா, உலக வங்கியிடம் கடன் வாங்குவதற்கும் அதுதான் உகந்த நாள்ன்னு சொல்லுங்க!

‘அட்சய திருதியை’ நாளில் ஒவ்வொரு நொடியும் புனிதமானது. தனியாக முகூர்த்த நேரம் பார்க்க வேண்டியதில்லை.          – செய்தி

                ஆமாம்! வர்த்தக நலன் கருதி அன்றைக்கு ‘ராகு காலம்’, ‘எமகண்டம்’ எல்லாம் ‘தள்ளுபடி’!

வைகாசி மாதத்தில் வளர்பிறை மூன்றாம் திதியில் வருகிற திருதியைதான் உண்மை அட்சய திருதியை திருநாள். இந்த நாளில் சுவாதி நட்சத்திரம் இணைந்து விட்டால், நன்மை பயக்காது என்பதற்காக, அது சித்திரை மாத வளர்பிறை நாள் திருதியைக்கு மாற்றப்பட்டு, அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.       – குமார சிவாச்சாரியார் கட்டுரை

                போச்சுடா. அனுசரிக்கப்படும் ‘அட்சய திருதியை’ நாளே ‘டுபாக்கூர்’ தானா?

இந்த நாளில் மூதாதையர்களுக்கு வேத பண்டிதர்களை அழைத்து, ‘திதி’, ‘தர்ப்பணம்’ செய்வது நல்லது. – செய்தி

                அப்போதுதானே, ‘திதி’, ‘தர்ப்பணம்’ தொழிலும் வளரும்; நல்ல யோசனைதான்!

அட்சய திருதியை நாளில் வெயில் கொடுமைதீர, குடை விசிறி, காலணி வழங்கினால், இன்ப வாழ்வு உண்டாகும்.            – செய்தி

                சொல்றதுதான் சொல்றீங்க… ஒரு ‘ஏர்கண்டிஷனர்’, ஒரு ‘கூலிங் கிளாஸ்’ன்னு சொல்லக் கூடாதா?

அட்சய திருதியையில் தங்கம், பசுமாடு மற்றும் தானியங்களை தானம் தரவேண்டுமே தவிர, விற்பனை செய்யக் கூடாது எனக் கூறுகிறது, ‘பவிஷ்ய புராணம்’.     – செய்தி

                அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. விற்பனை தள்ளுபடி 5 சதவீதம் என்பதை ‘தானம்’ 5 சதவீதம் என்று மாற்றிக் கொள்ளலாம்.

ஆலம் இலையில் ‘மிருத்யுஞ்சய’ மந்திரத்தை ஜெபித்து, வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும்; எதிரிகள் தொல்லை நீங்கும்.               – செய்தி

                ஆமாம்! திருட்டு பயமும் இருக்காது; ‘இன்சூரன்சும்’ தேவையே இல்லை.

இந்து இதிகாசப்படி – ‘அட்சய திருதியை’ நாளில் தான் வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளை யிட்டார்.         – செய்தி

                அப்ப, மகாபாரதத்துக்கு ‘காப்பி ரைட்’ விநாய கனுக்குத் தானா? வியாசருக்கு இல்லையா?

‘அட்சய திருதியை’யன்று குழந்தைத் திருமணம் நடத்த முயன்ற 6 பெற்றோர்கள் ராஜஸ்தானில் கைது.       – செய்தி

                இந்த நல்ல நாளில் கைதாகி சிறைக்குப் போவது பெரும் ‘பாக்கியம்’. அதற்கெல்லாம் ‘கொடுத்து வைத்திருக்கணும்’!

பூமியில் சத்திரிய அரசர்களையெல்லாம் அழிப்பதற்கு விஷ்ணு பகவான் கையில் கோடாலியுடன் (வெட்டும் கருவி) பரசுராமனாக ‘அவதரித்தது’ – இந்த நாளில்தான்.                 – செய்தி

                அப்ப, பயங்கரவாதத்துக்கும் இதுதான் ‘புனித நாள்’ன்னு சொல்லுங்க!

வறுமையில் வாடிய குசேலன், கிருஷ்ண பகவானுக்கு அன்புடன் வழங்கிய ‘அவல்’ உணவை பகவான் சாப்பிட குசேலன் வீட்டுக் கூரை, தங்கக் கூரையாக மாறியது.                – செய்தி

                பரவாயில்லையே! தங்கமே கண்டுபிடிக்காத காலத்திலேயே அதை இறக்குமதி செய்து பகவான் கூரையாகவே போட்டாரா? வளர்ச்சியிலே மோடியையே மிஞ்சிட்டாரு போங்க!

அட்சய திருதியை நாளில் தான் உணவு கட வுளான ‘அன்னபூரணி’ அவதரித்தாள்! – செய்தி

                அப்படியா? இது ஓட்டல் முதலாளிகளுக்கு தெரிஞ்சா, அவர்களும் ‘தள்ளுபடி’ வியாபாரத்தை தொடங்கிடுவாங்களே!

                (செய்திகளுக்கு ஆதாரம் : புராண புரட்டுகளை செய்தி கட்டுரைகளாக்கி, ‘அட்சய திருதியை’ நாளில் வாசகர்களுக்கு விற்பனை செய்து வியாபாரத்தைப் பெருக்கிய தமிழ்நாளேடுகள்)

பெரியார் முழக்கம் 12052016 இதழ்

‘நோட்டு’அறிவிப்பால் – திருப்பதியில் பக்தர்கள் வருகை பாதியாக குறைந்தது. – திருப்பதி தேவஸ்தானம் கவலை

கவலைய விடுங்க சார்; உண்டியலில் காணிக்கை போட்டால் உச்சவரம்பில்லாமல், புதிய ரூபாய் நோட்டுகளை மாத்தலாம்னு ஒரு அறிவிப்பை விட்டுப் பாருங்க கூட்டம் பிச்சிக்கிட்டு நிக்கும்!

பெரியார் முழக்கம் 17112016 இதழ்

ஆகமவிதிகள் மீறாமல் கோயில்களை பழுது பார்க்க உயர்நீதிமன்றம் 60 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளது. – செய்தி

ஒரு சந்தேகம். உறுப்பினர்கள் ஆகம விதிப்படித் தான் நியமிக்கப்பட்டிருக் காங்களா?

பெரியார் முழக்கம் 10112016 இதழ்

காஞ்சி வரதராஜபெருமாள் கோயிலில் 24 இடங்களில் சி.சி.டி.வி காமிரா பொருத்தப்படுகிறது.          – செய்தி

அப்படியே, ஆகமங்கள் ஒழுங்கா பின்பற்றப்படுதான்னு கண்காணிக்கிற காமிராவப் பாத்து வாங்குங்க!

 

திருமலையில் முகூர்த்த நாள்களில் இனி இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படும்.                – திருப்பதி தேவஸ்தானம் தகவல்

ஜாதி மறுப்பு திருமணத்துக்கு அனுமதி உண்டா? ‘ஆணவக் கொலை’ எதுவும் நடக்காம ஏழுமலையான் பாதுகாப்பாரா? கேட்டு சொல்லுங்க…

 

‘ஆன்மிக குரு’ காஞ்சி ஜெயேந்திரர் பிறந்த நாள் விழாவில் அமித்ஷா, சு.சாமி, பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டு.     – செய்தி

அப்படியே, ‘சாமி’களுக்கு ஒரு பிரச்சார வாகனத்தைத் தயார் செஞ்சு, 234 தொகுதி களுக்கும் அனுப்பி வைய்யுங்க! நல்லா ஓட்டு விழும்!

 

வேட்பாளர் பட்டியல் – தேர்தல் அறிக்கைகளை வெளியிட ‘வளர்பிறை’ தொடங்கும் ஏப்.7ஆம் தேதிக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.                       – செய்தி

சந்திர மண்டலத்துலயும், தேர்தல் அறிவிச்சிருக்காங்களா? சொல்லவே இல்ல!

 

ஏழுமலையான் ‘பட்ஜெட்’டில் கணக்கில் வராத ரூ.43 கோடி.   – செய்தி

பகவானுக்கு ‘நெற்றி நாமம்’ போட்ட வகையிலான செலவுன்னு எழுதி சரிகட்டிடுங்க!

 

‘தீ மிதி’க்கு தடைபோட கருநாடக அரசு ஆலோசனை.   – செய்தி

அப்படியே செஞ்சுடுங்க; பக்தர்கள் வேணும்னா ‘ஆன்லைன்’ வழியா அக்னிகுண்டம் வச்சு ‘ஷேர்’ பண்ணிக்கலாம்!

பெரியார் முழக்கம் 31032016 இதழ்

உத்தரகாண்ட்டில் காவல் துறையில் பணியாற்றிய குதிரையின் காலை உடைத்தார் பா.ஜ.க. எல்.எல்.ஏ.                – செய்தி

நல்லா வேணும்! திமிர் பிடிச்ச குதிரை! வாயைத் திறந்து ‘பாரத் மாதாக்கி ஜே!ன்னு’ சொன்னாத்தான் என்ன?

 

தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை.          – பா.ஜ.க. அறிவிப்பு

ஆமாங்க.. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி, குடியரசு கட்சியுடன்கூட கூட்டணி வைக்க மாட்டோம். தனித்தே நிற்போம்!

 

கூடலூரில் புலியை சிக்க வைத்துப் பிடிக்க இளம் பசுங்கன்றை பயன் படுத்தினர் வனத் துறை யினர்.              – செய்தி

காட்டுக்குள்ளும் ‘இந்து துவேஷிகளா?’ விடக்கூடாது! இரத்தம் சிந்தியாவது இந்து தர்மம் காக்க காடு அழைக் கிறது, இந்துவே ஓடி வா!

 

அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்தை வெளி யிட தடையை நீக்க தமிழக அரசு தொடர்ந்த வழக்கு வெற்றி.          – செய்தி

முதலமைச்சர் உரிமையை மீட்டுத் தந்த முதலமைச் சருக்கு கோடானுகோடி நன்றி என்று முதலமைச்சர் படத் துடன் உடனே ஒரு விளம் பரத்தை வெளியிடுங்க…

 

பசுவை தேசமாதாவாக அறிவிக்கக் கோரி குஜ ராத்தில் விஷம் குடித்த வர் பலி.    – செய்தி

இனிமே யாரும் விஷம் குடிக் காதீங்கய்யா… பசு மாதா வின் பாலைப் பருகாமல் – பக்தியை வெளிப்படுத்துங்க.

 

ஏப்.2ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராக விஜய் மல்லய்யாவுக்கு அமு லாக்கத் துறை சம்மன். – செய்தி

இப்படியே போனா, ராமன், கிருஷ்ணன், விநாயகனுக்கு எல்லாம்கூட நேரில் ஆஜராக சம்மன் அனுப்புவாங்கபோல…

 

புதிய வாக்காளர்களில் 82 சதவீதம் பேர் அன்பு மணிக்கே வாக்களிப்பர். -மருத்துவர் இராமதாஸ்

அப்ப மீதி 18 சதவீதம் பேர்? ஒருவேளை மாம்பழச் சின்னத் துக்குப் போடுவாங்களோ…?

 

ஏழைகளைக் காப்பாற் றும் தூதுவனாக  கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் மோடி.

– வெங்கய்ய நாயுடு

ஒரு தூதுவருக்காக பல கோடி ஏழைகளையும் சேர்த்து அனுப்பி வைத்த தெய்வமே… கருணைக் கடவுளே…

பெரியார் முழக்கம் 24032016 இதழ்

சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம்; சில நேரங்களில் நீதிமன்றங்களும் தவறு செய்கின்றன. தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பதவி பறிபோகும் என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தவறை, இப்போது நாம் சரி செய்கிறோம்.   – சட்ட அமைச்சர் கபில்சிபல்

இப்போது நீங்கள் செய்த தவறை ராகுல் காந்தி சரி செய்துள்ளார். ராகுல் செய்த தவறுக்காக சோனியா, மன்மோகனை சரி செய்து வருகிறார். அட போங்கப்பா, நீங்களும் உங்க தத்துவமும்!

முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் காந்தி சிலைக்கு மரியாதை  செலுத்த வரும் பொது மக்களை தடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.  – செய்தி

காந்தி என்பவரும் ஒரு முக்கிய பிரமுகர் தான் என்பதை காவல்துறைக்கு புரியும்படி நன்றாக எடுத்துச் சொல்லி யிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது. பரவாயில்லை, விடுங்கள்.

ஒரு மாத காலத்துக்குள் இந்தியாவிலிருந்து சுமார் 1350 தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது.          – செய்தி

இந்தத் தகவலையும் தகவல் உரிமை ஆணையம் தான், தெரிவித்துள்ளதா?

காஷ்மீர் மாநிலத்தில் – அமைதி, மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுவதற்காகவும் மக்கள் தீவிரவாதி களிடமிருந்து விலகியிருப்பதற்காகவும் அமைச்சர் களுக்கு இராணுவம் பணம் தருகிறது.   – இராணுவ தளபதி வி.கே.சிங்

இதுகூட நல்லா இருக்கே. இனி, இராணுவத்துக்கு நிதி ஒதுக்காம நேரடியா, ‘அமைதி’க்கும், ‘நல்லிணக்கத் துக்கும்’ பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிடுங்க!

இந்த ஆண்டில் நடந்த மதக் கலவரங்களில் இறந்தவர் களில் 66 பேர் முஸ்லீம்கள்; 41 பேர் இந்துக்கள்.  – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

மதம் இறந்து போயிருந்தால், பாவம் இந்த மனிதர்கள் உயிருடன் இருந்திருப்பார்கள்.

எனது மனைவிக்குப் பயந்து புகை பிடிக்கும் பழக்கத்தை 6 ஆண்டுகளாக நிறுத்தி விட்டேன்.    – ஒபாமா

திருமணம் நடந்த காலத்திலேயே இந்த ‘பயம்’ வந்திருக்க லாமே, சார்?

செப்.28, ‘உலக வெறி நாய்க்கடி தினம்’, சென்னை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.  – செய்தி

வெறி நாய்க்கடியை பிறகு பார்க்கலாம். முதலில் இந்த கொசுக்கடிக்கு ஏதாவது உலக விழிப்புணர்வு நடத்துங்கள்! இந்த கொசுக்கடியை தாங்க முடியல்லே நாராயணா!

குடும்ப அமைப்பின் அச்சாணியாக இருப்பதுதான் திருமணம். எனவே திருமணம் இரண்டு நபர்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல.   – மருத்துவர் இராமதாசு

நியாயம் தான்! திருமணம் செய்து கொள்ளும் இரண்டு நபர்களுமே குடும்பம் நடத்தத்தான் விரும்புறாங்க! அந்த அச்சாணிய நீங்க ஏன் கழட்டிவிட துடிக்குறிங்க, டாக்டர்?

தேர்தலில் போட்டியிட குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு தர வேண்டும்.   – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இதெல்லாம் நியாயமில்லை. இந்த தமிழ்ச் சமூகமே தனது குடும்பமாகக் கருதுவோர், என்ன செய்வதாம்?

சாமியார்கள், பாலியல் குற்றங்கள் செய்வதைக் கண்டித்து உ.பி.யில் ஒரு சாமியார், தனது ஆண் உறுப்பை வெட்டி எறிந்தார்.  – செய்தி

இப்படியும் ஒரு ‘நேர்த்திக் கடன்’ இருக்குதோ, ‘சாமி’!

தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லையானால் வாக்குப் பதிவு எந்திரத்தில் எதிர்ப்பு ஓட்டை பதிவு செய்ய தனி ‘பட்டன்’ அமைக்க வேண்டும். – உச்சநீதிமன்றத் தீர்ப்பு

வாக்காளர்களுக்கு அமோக வெற்றி!

பெரியார் முழக்கம் 03102013 இதழ்

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு மதுரை மாநகராட்சி மரணச் சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இது குறித்து மேயர், ஆணையரிடம் அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளார்.            – செய்தி

விளக்கம் அளிப்பதற்கு முன்பு, மேயரும் ஆணையரும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ்களை கையோடு எடுத்து வரச் சொல்லுங்கள்; கவனம்!

நாட்டிலுள்ள ஏழைகள் நாணயமானவர்கள்; நம்பத் தகுந்தவர்கள்.        – ப. சிதம்பரம்

ஆகவே நாணயமானவர்களை அதிகரிக்கச் செய்வோம்! அவர்கள் எண்ணிக்கை பெருகு வதற்கு நம்பத் தகுந்த ‘பட்ஜெட்’ போடுவோம்!

இந்து கோயில்களை உண்மையான பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.                                                – இல. கணேசன்

“இவர் உண்மையான பக்தர்தான்” என்று எந்தக் கடவுளாவது நற்சான்றிதழ் தர முன் வந்தால் பரிசீலிக்கலாம்.

காந்தியடிகள் சிலைக்கு இலவச மின்சாரம் அளிக்க விதிகளில் இடமில்லை.  – சேலம் மின்சார வாரியம் அறிவிப்பு

நியாயம் தானே? காந்திக்கு என்ன ஓட்டா இருக்குது?

எனக்கு இந்தி தெரியாது. ஆனால், திருச்சியில் மோடி பேசிய விதமும் ஆவேசமும் பேச்சில் விஷயம் இருப்பதைக் காட்டியது.  – ‘துக்ளக்’ சோ பேட்டி

தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்துக்கு ராஜகோபாலாச்சாரி தலைமை ஏற்றார் என்பதற்கு பதிலாக வ.உ.சி. பெயரைக் கூறினார் மோடி. அதனாலென்ன? பேசிய விதமும் ஆவேசமும் தானே முக்கியம்?

முதலில் கட்ட வேண்டியது கழிப்பறை; பிறகு தான் கோயில் என்று பேசிய மோடிக்கு, விசுவ இந்து பரிஷத், சிவ சேனா கண்டனம்.  – செய்தி

இப்படி சகோதர அமைப்புகளே சண்டை போடலாமா? சரி, போகட்டும், கழிப்பறை களையே ஆகம விதிகள்படி கட்டி, அங்கே கண் காணிப்பாளராக அர்ச்சகர்களை நியமித்து விட்டால், கழிப்பறைகளே கோயிலாகிவிடுமல்லவா? கொஞ்சம் பரிசீலியுங்கள், சார்!

இதுதான் முடிவு; இதுதான் கடவுள்; இது தான் பிரார்த்தனை என்று சனாதனதர்மம் என்கிற இந்து மதம் முடிவாகக் கூறவில்லை. சனாதன தர்மம் தேடிக் கொண்டே இருக் கிறது.    – ‘இந்து’ ஏட்டில் பாலகுமாரன்

சரி; இதுதான் ‘சனாதன தர்மம்’ என்பதை மட்டும் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? அதையும் தேடிக் கொண்டே இருக்க வேண்டியது தானே?

2005-2012 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் மனிதர்களிடம் நடத்தப்பட்ட மருந்து வீரிய பரிசோதனையில் 2,644 பேர் இறந் துள்ளனர். 12,000 பேருக்கு விபரீத விளைவுகள் ஏற்பட்டுள்ளன. – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

‘எக்ஸ் பைரி’ மருத்துக்கா- மனிதர்களுக்கா?

சென்னை இரயில் பெட்டித் தொழிற் சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த காந்தி பயணம் செய்த ரயில் பெட்டியை காணவில்லை. – மாநகர ஆணையரிடம் புகார்

இரயில் பெட்டித் தொழிற்சாலையாவது பாதுகாப்பாக இருக்கிறதா?

பெரியார் முழக்கம் 10102013 இதழ்

சில அனுபவங்கள் காரணமாக பில்லி, சூன்யம் இருந்தாலும் இருக்கலாம் என்ற எண்ணத்துக்கு நான் வந்துள்ளேன்.      – ‘துக்ளக்’கில் சோ

விடாதீங்க… அவ்வளவும் பா.ஜ.க.வுக்கு விழக் கூடிய ஓட்டுகள்; உடனே வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்க….

தவறாக மரண தண்டனைகளை வழங்கி யுள்ளதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண் டிருக்கிறது. – ‘தினமணி’யில் முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்

அதனால் என்ன? ஒரு அரசியல் சட்ட அமர்வை நியமித்து, தவறாக மரண தண்டனை வழங்கவும், பிறகு அதை தவறு என்று அறிவிக்கவும் உரிமை உண்டு என்று தீர்ப்பு எழுதிவிட்டால் ‘போதும்’!

திருப்பதி ‘ஏழுமலை’யான் தனது இரண்டா வது திருமணத்துக்கு “குபேரனி”டம் கடன் வாங்கினார். அதற்கு செலுத்த வேண்டிய வட்டியைத்தான் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக இப்போதும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். -’தினத்தந்தி’ கட்டுரை.

ப. சிதம்பரம் சார்! இந்த குபேரன் கடனை தள்ளுபடி செய்து, திருப்பதி உண்டியல் வசூலை உடனே நிறுத்துங்க… அம்பானிக்கு எல்லாம் கடன் தள்ளுபடி செய்யறீங்க…

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகம் செலவு செய்த கட்சிகளில் பா.ஜ.க.வுக்கே முதலிடம். 448 கோடி ரூபாய் செலவிட் டுள்ளது.     – செய்தி

அடேங்கப்பா! நாடாளுமன்றத்தை நடக்க விடாம முடக்கவே இவ்வளவு பணச் செலவா?

திருமலையில் பிரம்மோத்சவம் நான்காம் நாள் விழா! கேட்பவர்களுக்கு கேட்ட வரம் வழங்கும் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி இரண்டு மனைவிகளுடன் எழுந்தருளினார்.  – செய்தி

ரொம்ப நல்லதாப் போச்சு! தெலுங்கானாக் காரர்களுக்கு தெலுங்கனா வரமும், எதிர்ப் பாளர்களுக்கு ஒன்றுபட்ட ஆந்திரா வரமும் வழங்கி, பிரச்சினையை முடிக்கச் சொல்லுங்க.

விருத்தாசலம் – விருத்தகிரீஸ் வரர் கோயிலில் காணாமல் போன அர்த்தநாரீஸ் வரர் சிலை, ஆஸ் திரேலியா சிட்னி அருங்காட்சியகம் வந்து சேர்ந்துவிட்டது.    – ‘இந்து’ ஏடு செய்தி

அட, இத பாருப்பா! மோடிக்கே அமெரிக்கா விசா கிடைக்கல்லே. அர்த்தநாரீசுவரர் – ஆஸ் திரேலியா போயிட்டாரே…

‘தீக்கதிர்’ அலுவலகத்துக்கு அக்.13, ஞாயிறு அன்று விடுமுறையாகும்.       – மார்க்சிஸ் ட் கம்யூனிஸ் ட் கட்சி ஏடு அறிவிப்பு

‘ஆயுத பூஜை’ பண்டிக்கைக்காக விடுமுறை என்று அறிவிக்க உங்களுக்கே கூச்சமாக இருக்குதா, தோழரே!

தேர்தல் கூட்டணி; 45 ஜாதித் தலைவர் களுடன் மருத்துவர் ராமதாசு ஆலோசனை. – செய்தி

டாக்டர் எனக்கு ஒரு ‘டவுட்டு’. இந்த 45 ஜாதி களுக்குள்ளும் காதல் திருமணங்கள் நடந்தால் கூட்டணி நீடிக்குமா? உடையுமா, டாக்டர்?

ராஜபக்சே ஆதரவாளரான சுப்ரமணியசாமி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்வதை பா.ஜ.க.வினர் விரும்பவில்லை. ஓட்டு பாதிக்கும் என்று பயப்படுகிறார்கள்.  – டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி

அதெல்லாம், அவரிடம் நடக்காதுங்க. உச்சநீதிமன்றம் போய் உத்தரவு வாங்கிட்டு வந்துடுவாரு… தெரியுமுல்ல…

ரயில் கட்டணம் உயர்ந்தது.  – செய்தி

உயர்ந்தது என்பது தவறு, அபாண்டம், மாற்றி யமைக்கப்பட்டுள்ளது என்பதே சரியானது, சத்தியமானது.

பெரியார் முழக்கம் 17102013 இதழ்

உ.பி.யில் பழங்கால கோட்டையின் கீழ், 1000 டன் தங்கம் புதைத்திருப்பதாக தனது கனவில் கிடைத்த செய்தியை ஒரு சாமியார் மத்திய அமைச்சரிடம் கூற, உடனே தொல்பொருள் துறை புதையலைத் தேடி தோண்டி வருகிறது. – செய்தி

நல்ல சேதி. ஆனாலும், அமைச்சரிடம் சாமியார் நேரில் வந்து சொன்னாரா? அல்லது சாமியார் சொல்வதுபோல் அமைச்சர் கனவு கண்டாரா என்பதை உறுதி கொள்ளுங்கள்.

வாக்கு வங்கி அரசியலை ஒரேயடியாக குழி தோண்டிப் புதைக்க வேண்டும். – கான்பூரில் மோடி

அப்படி எல்லாம் செய்யாதீங்க. அப்புறம் எவராவது கனவு கண்டு பூமிக்கடியில் வாக்குகள் புதைந்து கிடக்கிறது என்றால், அதிகாரிகள் குழிதோண்ட ஆரம்பித்து விடுவார்கள்.

கான்பூரில் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடை வா°துப்படி சோதிடர்கள் ஆலோசனை பெற்று அமைக்கப்பட்டது. – செய்தி

ஒலி பெருக்கி, மின் விளக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் வா°து உண்டா?

அரசின் பொதுத் துறை நிறுவனத்துக்கு மட்டுமே ஒரிசா நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். பிர்லா நிறுவனம் தனக்கு வேண்டும் என்று கேட்டதால் பிரதமர் அலுவலகம் ஒப்புக் கொண்டது. இதில் என்ன விதிமுறை மீறல் இருக்கிறது? – பிரதமர் அலுவலகம் விளக்கம்

ஒரு மீறலும் கிடையாது. அரசுக்கான சுரங்கத்தை அரசு நிறுவனத்துக்கே ஒதுக்கிக் கொண்டால், அவர்களே எடுத்துக் கொண் டார்கள் என்ற வீண் பழி வந்துவிடாதா? புரிஞ்சுக்காம பேசக் கூடாது!

ராமேசுவரம் கோயிலுக்குள் பன்றி ஒன்று நுழைந்துவிட்டதால் பூஜைகள், அபிஷே கங்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டன. இதை கெட்ட சகுனமாகக் கருதி, ஹோமம் வளர்க்கப்பட்டது.  – செய்தி

தீபாவளி நெருங்கும்போது, மகாவிஷ்ணு மீண்டும் பன்றி அவதாரம் எடுத்து வந்திருப்பார் போல!

ராமர் பாலத்தை உடைக்க நினைக்கும் கட்சி களுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.   – சுப்ரமணியசாமி பேட்டி

அதிலேயே உறுதியா நிக்காதீங்க. ராமன் பாலத்தை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை!

மேட்டூரில் வீரப்பன் 9 ஆம் ஆண்டு நினைவு நாள். உளவுப் பிரிவினர் கண்காணிப்பு.  – செய்தி

நினைவு நாளில் வீரப்பன் ‘ஆவி’ ஏதேனும் சுற்றுகிறதா என்று கண்காணிக்கிறார்கள் போலிருக்கிறது! நமக்கேன் வம்பு!

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சி.பி.அய். வழக்குப் பதிவு செய்துள்ள தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.   – செய்தி

செய்தி தவறாக இருக்கும் போலிருக்கே? நியாயமாக ப. சிதம்பரம் தானே தொழிலதிபர் வீட்டுக்குப் போயிருக்க  வேண்டும்!

பெரியார் முழக்கம் 23102013 இதழ்

ஏழுமலையான் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் திருப்பதி தேவஸ் தானத்துக்கு சொந்தமான அனைத்துக் கோயில் களிலும் கண்காணிப்புக் கேமிரா நிறுவ முடிவு. – செய்தி

அருமையான யோசனை. அப்படியே அர்ச்சர் களுக்கும் ஒரு துப்பாக்கியை குடுத்துடுங்க. இடுப்புல செருகிக் கொண்டே அர்ச்சனை செய்வாங்கல்ல!

திருவில்லிபுத்தூர் கம்மாபட்டி கிராம மக்கள் மழை வருவதற்காக இரண்டு கழுதைகளுக்கு திருமணம் செய்து, மணமக்கள் ஊர்வலத்தை நடத்தி தடபுடலாக விருந்து வைத்தார்கள்.    – செய்தி

எப்படியோ ‘மங்கள’ காரியம் நல்லவிதமா முடிஞ்சுடுச்சு’ கழுதை குடும்பத்துக்குள்ள ஜாதிப் பிரச்சினை வந்து தகப்பன் கழுதை மண்டையப் போடாம பாத்துக்குங்க.

புனே சிறையில் காந்தி பயன்படுத்திய இராட்டை லண்டனில் அடுத்த மாதம் ஏலம்.  – செய்தி

இராட்டையை ஏலம் விட்டது சரி; ஆனா, காந்தி உடம்பில் பாய்ந்த கோட்சேயின் துப்பாக்கிக் குண்டு இருந்தா, அதையும் ஏலம் விட்டுடாதீங்க; ஆர்.எஸ் .எஸ் . சொத்தை அவர்களிடமே திருப்பித் தந்துருங்க. அதுதான் கவுரவம்.

சென்னை பீர்க்கன்கரணை ஊராட்சியில் சோலார் விளக்கு வசதியுடன் கூடிய ‘நம்ம டாய்லெட்’டை அமைச்சர் சின்னய்யா திறந்து வைத்தார். – செய்தி

பீர்க்கன்கரணை டாய்லெட்டுக்கு பிரிட்டிஷ் காரனா விமானம் ஏறி வரப்போறான்? ‘கழிவறை’ன்னு தமிழில் எழுதி வையுங்கய்யா…

மருத்துவர் ராமதாசு தேர்தலுக்கு சமூக ‘ஜனநாயக் கூட்டணி’யை அமைத்துள்ளார். ஆனால், கூட்டணியில் இடம் பெறும் அமைப்புகளை அறிவிக்கவில்லை.  – செய்தி

அப்படியெல்லாம் அறிவிப்பதற்கு இது என்ன சாதாரண ஜனநாயகமா? ‘சமூக ஜனநாயகம்’; புரிஞ்சுக்குங்க!

சபரிமலை அய்யப்பன் தரிசனத்துக்கு பக்தர்கள் ‘ஆன் லைனில்’ முன்பதிவு செய்யலாம்.   – கேரள காவல்துறை அறிவிப்பு

‘ஆண் லைன்’ தரிசனமே வந்துவிட்டது. ஆனா, ‘பெண் லைன்’ தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்க மாட்டீங்க…

கேரளாவில் அரசு வேலை பெற வேண்டுமானால் – மலையாள மொழித் திறமை அவசியம்.  – மாநில அமைச்சரவை முடிவு

கேரளாவில் மட்டும்தான் முடியுமா, என்ன? நாங்களும் எங்கள் மாநிலத்திலும் மலையாள மொழித் திறமை வேண்டும் என்று தீர்மானம் போடுவோங்க!

உ.பி.யில் சாமியார் கனவில் வந்த மன்னர் கூறியதுபோல் தங்கப் புதையல் கிடைக்கவில்லை; சாமியார் என்ன சொல்லப் போகிறார்? – செய்தி

வேறு என்ன சொல்வார்? அடுத்த முறை கனவில் மன்னர் வந்தால் என்னை ஏன் ஏமாற்றினாய் என்று கேட்பதாகக் கூறுவார்!

‘இறைவன் என் கண்முன் தோன்றி எனது பக்தன் கணபதியிடம் ரூ.50,000 வாங்கிக் கொள்ளுமாறு’ வீட்டுக்கு வந்த சாமியார் கூற்றை நம்பி, கும்மிடிபூண்டி பெரிய புலியூர் கிராமத்தைச் சார்ந்த பக்தர் கணபதி ரூ.50,000-த்தை எடுத்துக் கொடுத்தார். அதன் பிறகு வந்தது போலி சாமியார் என்று தெரிந்து பக்தர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். – ‘இந்து’ ஏட்டின் செய்தி

ஒரு தாழ்மையான யோசனை! இனிமேல், இறைவன் இப்படி தரகர்களை அனுப்பினால், பக்தர்கள் ரொக்கமாக கொடுக்காமல் காசோலை களாக செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள். காசோலைதான் இறைவனுக்கு நேராகப் போய்ச் சேருமாம்.

ரூ.10 கோடி செலவில் பெரியாருக்கு 95 அடி உயரத்தில் சிலை.  – தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு

‘முன்னொரு காலத்தில் ஜாதி, மதம், கடவுளை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. அதன் நினைவாக இந்த 95 அடி சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது’ என்று கீழே எழுதிப் போடாமல் இருந்தால் சரி!

பெரியார் முழக்கம் 30102013 இதழ்