‘உண்மையான’ பக்தர்கள் எங்கே?
“கோயில் அறங்காவலர்களாக உண்மையான கடவுள் பக்தர்களையே நியமிக்க வேண்டும். நாத்திகர்களை நியமிக்கக் கூடாது” என்கிறார் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். பார்ப்பனர்கள், நீதிபதிகள், சங்கிகள் பலரும் உண்மையான பக்தர்களைத் தேடி அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் உண்மையான பக்தர்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதுதான்! உண்மையான நோய்களை கண்டுபிடிப்பதற்கு ஸ்கேன், எக்ஸ்ரே வந்துவிட்டன. உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் வந்துவிட்டன. உண்மையான பக்தர்களை எப்படி கண்டுபிடிப்பது? நாள் தவறாமல் பூஜைகளை செய்கிறவர்கள்; நெற்றியில் அடையாள மார்க்குகளை வைத்திருப்பவர்கள்; ஆச்சாரங்களை அனுதினமும் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவர்கள் இவர்களை எல்லாம் உண்மையான பக்தர்களாக அங்கீகரிக்கலாமா? அதற்கும் வாய்ப்பு இல்லை! கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து நீதிமன்றம் கொண்டுவரப்படும் குற்றவாளிகளைப் பாருங்கள்; அவர்கள் பழுத்த பக்தர்களாக விபூதி, குங்குமத்துடன் காட்சித் தருகிறார்கள். ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு முன்ஜாமின் பெற்று வெற்றிப் புன்னகையுடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் அரசியல் தலைவர்களைப்...
