மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் நிறைவு!
திண்டுக்கல்: திண்டுக்கல் – தேனி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 22.08.2024 அன்று பழனி அ.கலையம்புத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கழகப் பொருளாளர் சு.துரைசாமி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், கழகத் தலைமைக்குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், இரா.உமாபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கடந்த ஒரு ஆண்டாகத் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும், இணையதள செயல்பாடுகளில் கழகத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றுப் பேசினார்.
கூட்டத்தின் முடிவில் திண்டுக்கல் – தேனி மாவட்டப் பொறுப்பாளர்களைக் கழகத் தலைவர் அறிவித்தார். அவை பின்வருமாறு:-
திண்டுக்கல் மாவட்டத் தலைவராக மருதமூர்த்தி, மாவட்டச் செயலாளராக மாக்சிம் கார்க்கி, மாவட்ட அமைப்பாளர் மற்றும் இணையதளப் பொறுப்பாளராக ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நாச்சிமுத்து, தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளராக ஆயுதன், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவராக கபாலி, ஒன்றியச் செயலாளராக ஜோசப், ஒன்றிய அமைப்பாளராக சக்திவேல், பழனி ஒன்றியத் தலைவராக ராஜசேகர், ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் பெரியார், நத்தம் ஒன்றிய அமைப்பாளர் தங்கத் தமிழ்க்குமரன், ஆயக்குடி பேரூர் கழக அமைப்பாளராக ஜெயசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தேனி மாவட்டக் கழக அமைப்பாளராக தேனி ராயன் நியமிக்கப்பட்டார்.
இதில் லல்லு பிரசாத், அலெக்ஸ், சந்தோஷ், சசிக்குமார், சரவணக்குமார், சஞ்சய், மதன்குமார், மூர்த்தி, கார்த்தீஸ்வரன், கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தேனியைச் சேர்ந்த சந்திரன், ஜெகதீசன், சிவக்குமார், காளியப்பன் ஆகியோர் கழகத்தில் இணைந்தனர்.
கபாலி நன்றி கூறக் கூட்டம் நிறைவு பெற்றது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 24.08.2024 அன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேலவன் தங்கும் விடுதியில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி, கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விளக்கிப் பேசினார்.
மேலும் ஆழ்வை ஒன்றியச் செயலாளர் ஆழ்வை இரா. உதயக்குமார், தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் முத்தலாபுரம் கண்ணதாசன், மாவட்டத் துணைச் செயலாளர் சூரங்குடி மாரிச்சாமி, ஏர்வாடி பால்வண்ணன், பால்.அறிவழகன், மாநகரப் பொறுப்பாளர் ச.தா. பிரபாகரன், பாளை சி.ஆ.காசிராசன், சூரங்குடி மாரிமுத்து, பிரபாகரன், ச.சதீஸ் மாவட்டப் பொருளாளர் சந்திரசேகர் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டச் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பெரியார் 146ஆவது பிறந்தநாளைக் குடும்ப விழாவாகக் கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
சந்திரசேகர் நன்றி கூறக் கூட்டம் நிறைவு பெற்றது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 17.08.2024 அன்று புத்தகச் சோலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலையிலும் நடைபெற்றது
தோழர் இன்பா கடவுள் மறுப்பு உறுதிமொழி கூறினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் இளையராஜா கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றியும், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்கள்.
நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
தென்காசி: தென்காசி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 24.08.2024 அன்று கீழபாவூர் மேட்டுத் தெருவில் உள்ள மாசிலாமணி இல்லத்தில் நடைபெற்றது
கலந்துரையாடல் கூட்டத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்டக் கழகச் செயலாளர் சு.அன்பரசு வரவேற்புரையாற்றினார்.
கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
தென்காசி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப்பாளர் ச.தமிழ்செல்வன், கடையம் இந்திரஜித், கடையம் சங்கர், மாவட்டத் தலைவர் குறும்பை அரு.மாசிலாமணி, மாவட்டச் செயலாளர் அ.அன்பரசு ஆகியோர் தென்காசி மாவட்டத்தில் இயக்கச் செயல்பாடு குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் பேசினர்.
மேலும் கழகப் பொருளாளர் துரைசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் அருணா பேரி ச.சுப்பையா சேர்மத்துரை, தங்கத்துரை, மனோஜ், அமல்ராஜ், செல்வம், நெல்லை பால்வண்ணன், பாளை. சி. ஆ.காசிராசன், கோமதி, ரமணி, உமா மஞ்சு, மாலதி, திருவெற்றியூர் ராஜா, பூங்குன்றன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கழகத் தலைவருக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் P.M.S. ராஜன், மேனாள் பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.அறிவழகன் ஆகியோர் பயனாடை அணிவித்துப் பாராட்டினர்.
பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்