நல்லாசிரியர் விருது பெற்ற வேலூர் கழகத் தோழர்

தோழர் ‘தெருவிளக்கு’ கோபிநாத் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவராக தற்போது பணியாற்றிவருகிறார். மேலும் வேலூர் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் இரவு நேரப் பள்ளிகளை நடத்தி அவை பரவுவதற்கான தொடக்க புள்ளியாகச் செயல்பட்டவர்.
தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்திலிருந்து வெளிவரும் பாடப் புத்தகங்களில் உள்ள ஓவியங்களை வரையும் பணியைச் செய்தவர். பள்ளி மாணவர்களிடையே நாடகங்களைப் பயிற்றுவிக்கும் பயிற்றுநர். கிராமியக் கலைகளில் வித்தகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் 19.09.2024 இதழ்

You may also like...