தோழர் ஆனைமுத்து நூற்றாண்டு வாசகர் வட்டம் – பேராசிரியர் நாகநாதன் பங்கேற்பு

சென்னை: பெரியாரியல் பேரறிஞர் தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு 23ஆவது நிமிர்வோம் வாசகர் வட்ட சந்திப்பு 17.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னதாகத் தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் படத்தைத் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்துவைத்தார்.

கூட்டத்திற்கு திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் இராஜேசு தலைமைத் தாங்கினார். திருப்பூர் பிரசாந்த் வரவேற்புரையாற்றினார். அழகிரி முன்னிலை வகித்தார்.

அதனைத் தொடர்ந்து மேனாள் திட்டக்குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன், வகுப்புரிமைப் போரில் தோழர் ஆனைமுத்து என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மேலும் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், ஜாதிவாரி கணக்கெடுப்பு; தேவையும் திசைத்திருப்பலும் என்ற தலைப்பிலும், தோழர் திருப்பூர் மகிழவன், உள் ஒதுக்கீடு; அவசியமும் அரசியலும் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

நிறைவாகத் தோழர் எழிலரசன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டத்தை நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாசு ஒருங்கிணைத்தார்.

இதில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வாலாசா வல்லவன், சா.குப்பன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, தென் சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வட சென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 22.08.2024 இதழ்

You may also like...