Category: திவிக

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரை-கடுவனூர் நாகராஜ் – சுலோச்சனா இல்லத் திறப்பு விழா

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரை-கடுவனூர் நாகராஜ் – சுலோச்சனா இல்லத் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி: கடுவனூர் கழகத் தோழர் மு.நாகராஜ் – நா.சுலோச்சனா ஆகியோரின் புதிய இல்லத் திறப்பு விழா 09.01.2025 அன்று கடுவனூர் கிராமத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதிய இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் செல்வி பகுத்தறிவுப் பாடலை பாடினார் கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முருகன், ராமச்சந்திரன், ஆசைத்தம்பி ரிஷிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர் கார்மேகம், ஒன்றியத் தலைவர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் மதியழகன், மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், விழுப்புரம் மாவட்டத் தலைவர் இளையரசன், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர்,  மக்கள் அதிகாரம் ராமலிங்கம், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் நிறைவாக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கதிரவன் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூமாலை, த.பெ.தி.க....

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.01.2025 அன்று மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத், மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், மாவட்ட அமைப்பாளர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுதா மற்றும் பொறுப்பாளர்களும், தோழர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். 2025ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் இயக்க வளர்ச்சி குறித்தும் தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். புரட்சிப் பெரியார் முழக்க சந்தா தொகையை வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தலைமைக்கு ஒப்படைப்பது குறித்தும், சேலம் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நங்கவள்ளி கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளராக இராஜேந்திரன்,...

சென்னை – திருப்பூரில் பொங்கல் விழா

சென்னை – திருப்பூரில் பொங்கல் விழா

சென்னை : திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 25ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 12.01.2025 அன்று இராயப்பேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். கோபிநாத் வரவேற்புரை நிகழ்த்தினார். இராஜேசு – தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, கழகத் தலைமை நிலையச் தபசி குமரன், தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், வட்டச் செயலாளர் க.வே.மோகன், வி.சி.க. எஸ்.எஸ்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து அதிர்வு கலைக்குழுவின் தமிழர் மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், பகுதி மாணவிகளின் மாறுவேடப் போட்டி, பட்டுக்கோட்டை அபிராமியின் கிராமியப் பாடல்கள் மற்றும் பூவையார், கானா பிரபா, மெர்லின் ஆகியோரின் கானா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 2024ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார்...

பெருந்திரளாகப் பங்கேற்ற கழகம்

பெருந்திரளாகப் பங்கேற்ற கழகம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அருண், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவிபாரதி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் பெரியார் சாக்ரடீஸ், கடலூர் சிவா, பெங்களூரு சித்தார்த்தன், திண்டுக்கல் மாக்சிம் கார்கி உட்பட சென்னை, திருச்சி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். நீலாங்கரை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி சீமான் வீடு அருகில் உள்ள ரிலையன்ஸ் மார்க்கெட்...

வீட்டுக்குள் பதுங்கிய சீமான்!

வீட்டுக்குள் பதுங்கிய சீமான்!

ஆர்ப்பாட்டம் நடைபெறும் வரை காவல்துறை பாதுகாப்போடு சீமான் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து முடித்தவுடன், வெளியே வந்து ஊடகங்களுக்கு வீராவேசமாக பேட்டி அளித்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் வீட்டை நெருங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். “காவல்துறை பாதுகாப்பு எனக்கு வேண்டாம், ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதியுங்கள்” என முன்பே சொல்ல சீமானுக்கு தைரியம் இல்லாமல் போனது ஏன் என அந்த பேட்டியைப் பார்த்து பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர். மீண்டும் மீண்டும் பெரியார் குறித்து சீமான் வைக்கும் விமர்சனங்களால் பெரியாரின் புகழ் மென்மேலும் பரவிக் கொண்டிருக்கிறது. எதிரிகள்தான் தனக்கு விளம்பரமே என வாழ்ந்த காலத்திலேயே கூறியவர் பெரியார். இப்போது மறைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் அந்த கூற்று நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது. சீமானின் விமர்சனங்களால் பெரியார் தமிழ் குறித்தும், பெண்கள் குறித்தும் உண்மையில் என்ன கூறினார் என்று தேடித்தேடி இளைஞர்கள் படிக்கிற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் இதுவரை சென்று சேராத தரப்பினரிடமும் பெரியாரின்...

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார். பெரியார் குறித்து அவர் வைக்கும் விமர்சனங்களுக்கு ஆதாரம் கேட்டால், அவரின் சங்கி நண்பர்களான அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும், தமிழிசை செளந்தரராஜனும், துக்ளக் குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களும் ஆதாரத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை சீமானும் ஆதாரத்தைத் தரவில்லை, அவருடைய சங்கி நண்பர்களும் ஆதாரத்தைத் தரவில்லை. சீமானின் இத்தகைய அவதூறுப் பேச்சு பெரியாரிய உணர்வாளர்கள் மத்தியிலும், பொதுமக்களிடத்திலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அவதூறுப் பேச்சுக்களை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று பல்வேறு தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சீமானோ மீண்டும் மீண்டும் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனால் சனவரி 22-ஆம் தேதி பனையூரில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடப்போவதாக ‘பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ அறிவித்திருந்தது. சீமானின் அருவருப்புப் பேச்சுகளால் ஆத்திரமடைந்த பெரியாரியத் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைநகர்...

கோவையில் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்!

கோவையில் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்!

கோவை மாநகர மாவட்டக் கழக சார்பில் புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம் 24.12.2024 அன்று சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகில் கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக நிகர் கலைக்குழுவின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் “தற்கால அரசியலும் அம்பேத்கரும்” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், “ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் “ என்ற தலைப்பில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனும், “மார்க்சிய பார்வையில் பெரியாரும் – அம்பேத்கரும்” என்ற தலைப்பில் சிபிஐ (மாலெ) ரெட் ஸ்டார் மத்தியக்குழு உறுப்பினர்  மு. இனியவனும்  சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்ப்புலிகள் கட்சி பொதுச்செயலாளர் இளவேனில், தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, கோவை மாநகரத் தலைவர் நிர்மல்...

ஜாதி அமைப்பு முறையைத் தகர்க்காமல் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடாது!

ஜாதி அமைப்பு முறையைத் தகர்க்காமல் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடாது!

தற்போது இந்தியாவில் நிலவுகிற பாசிச காவி கார்ப்ரேட் இந்துத்துவ அரசியல் சூழலில் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த அரசியல் மாநாட்டிற்கு (24.12.2024) நான் சார்ந்திருக்கும் சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார் சார்பாக புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிய பார்வையில் பெரியார், அம்பேத்கார் என்கிற தலைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரை மார்க்சிய பார்வையில் அணுகுவது என்னளவில் சற்று கடினமான பணி என்பதால் தோழர்களின் ஒப்புதலோடு அதனை சற்று மாற்றத்திற்கு உட்படுத்தி “கம்யூனிஸ்ட் பார்வையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்” என்கிற தலைப்பினில் எனது உரையை முன்வைக்கிறேன். ஏனென்றால், மார்க்சியம் என்பது சமூக அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டு அடிப்படையிலான தத்துவம். பொதுவாக கோட்பாட்டளவில் ஓர் மார்க்சிஸ்ட்டாக வாழ்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் கம்யூனிஸ்ட் என்பது மார்க்சிய அடிப்படையிலான கட்சி, கொள்கை அரசியல் முன்னெடுப்பு சார்ந்தது என்பதனால்...

முதலமைச்சரின் தகுதியுரை

முதலமைச்சரின் தகுதியுரை

தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாள ருமான திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள், 1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் தொடர்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தி பெரியாரின் கொள்கைகளைப் பேசவும் எழுதவும் தொடங்கியவர். தந்தை பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியவர். பெரியாரின் இயக்க ஏடுகளில் 25 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றியதோடு பெரியார் பேசிய கூட்டங்களில் அவரது உரையைக் குறிப்பெடுத்து பதிவு செய்தவர். இவர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தந்தை பெரியாரின் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமைத் தளங்களில் கடந்த 58 வருடங்களாகத் தொண்டாற்றி வருகிறார். பெரியார் கண்ட கனவான ஜாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகவும் மக்களை அணிதிரட்டிப் போராடி வருபவர். மக்களை விழிப்படையச் செய்யும் வகையில்...

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

பெரியார் பேசுபொருளாக மாறியிருக்கிற காலச்சூழலில் திராவிட மாடல் அரசு எனக்கு பெரியார் விருது வழங்கி கவுரவித்திருப்பதை ஒரு மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன். பெரியார் கருத்துக்கள் நாட்டிற்கு மிக மிகத் தேவையான கருத்துக்களாக இருக்கிறது என்பதைச் சமகால சமூக – அரசியல் சூழல்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பெரியாரியலை மேலும் வலுவாகக் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளாக உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பெரியாரியத்தின் எதிரிகளே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் காலத்தில் இருந்து அவருடைய கொள்கைகள் வேகமாகப் பரவியது அவருடைய எதிரிகளால் தான் என்று பெரியாரே திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். எனவே இந்த ஒரு சூழ்நிலையில் பெரியார் விருதை வழங்கி கவுரவித்திருப்பது, பெரியாரியத் தொண்டை மேலும் உற்சாகமாகச் செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிற விருதாகவே நாங்கள் கருதுகிறோம். அதற்காக முதலமைச்சருக்கு எங்களுடைய நன்றி. பெரியாரியலுக்கு எதிராக பரப்பப்படும் தவறான திசைதிருப்பும் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உந்துசக்தியும் அதிகரித்திருக்கிறது. பெரியாரியலை இன்னும் வேகமாக முன்னெடுக்க...

இராயப்பேட்டையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு

இராயப்பேட்டையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சனவரி 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகப் பொதுச்செயலாளருக்கு பெரியார் விருதுடன், ரூ.5 இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கிக் கவுரவித்தார். ஏற்கெனவே கழகப் பணிகள் மற்றும் பொதுச்செயலாளரின் அரை நூற்றாண்டுக்கும் மேலான எழுத்துப் பணிகளுக்கான அங்கீகாரமாக, 2022-ஆம் ஆண்டில் கழகப் பொதுச்செயலாளரின் நூல்களை நாட்டுடைமையாக்கிப் பெருமை செய்தது திராவிட மாடல் அரசு. தற்போது பெரியார் குறித்த விவாதங்களும், உரையாடல்களும் தீவிரமாக நடந்துவரும் இந்த காலகட்டத்தில் பொதுச்செயலாளருக்கு பெரியார் விருது அளித்திருப்பது கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராயப்பேட்டையில் உற்சாக வரவேற்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் சரஸ்வதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி...

விடுதலை இராசேந்திரனுக்கு ஆடை போர்த்தி பாராட்டு!

விடுதலை இராசேந்திரனுக்கு ஆடை போர்த்தி பாராட்டு!

தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனை மேடைக்கு அழைத்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

பேராவூரணியில் பெரியாரியல் பயிலரங்கம்

பேராவூரணியில் பெரியாரியல் பயிலரங்கம்

பேராவூரணி: பெரியாரின் 51ஆவது நினைவுநாளை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் மாணவர்களுக்கான பெரியாரியல் பயிலரங்கம் 25.12.2024 அன்று செங்கை க.கதிர்வேல் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக தோழர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் பெரியார் அறிமுகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் “திராவிட இயக்க வரலாறு” குறித்தும் “பெரியார் கொள்கையின் இன்றைய தேவை” குறித்தும் உரையாற்றினார். மதிய உணவிற்கு பிறகு இட ஒதுக்கீடு வரலாறு குறித்து உரையாற்றினார். நிறைவாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09012025 இதழ்

முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.

முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.

பெரியாரின் பெரும் தொண்டரும், தமிழ்நாடு அரசின் ‘நல்லாசிரியர்’ விருது பெற்றவரும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததற்காக, தனது மகள், மகனுடனும், கழகத் தலைவர், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் ஆகியோருடன் தடா வழக்கில் சிறை சென்றவருமான முடி கொண்டான் சா.சாரங்கபாணி, தனது 93ஆவது வயதில் 03.01.2025 அன்று தனது இல்லத்தில் முடிவெய்தினார். அவருக்கு நமது புகழ் வணக்கங்கள். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

தமிழ்நாடு மாணவர் கழக மாணவர்கள் சாதனை

தமிழ்நாடு மாணவர் கழக மாணவர்கள் சாதனை

நாசா, ஐஏஎஸ்சி, எஸ்ஐஏயூ இணைந்து நடத்திய பிஎஸ்1 மற்றும் பிஎஸ்2 தொலைநோக்கிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் விண்கற்களை கண்டுபிடிக்கும் போட்டியில் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் துறையிலிருந்து சந்தியா, ஷியாம், பிரபாகர், அகிலேஷ்வரன், பிஎஸ்சி வேதியியல் துறையிலிருந்து கோபாலன் ஆகிய தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களும் இவர்களுடைய ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு.கலைச்செல்வன் அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் கூடுதல் சிறப்பாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் “3 புதிய” விண்கற்களை கண்டுபிடித்துள்ளதால் அந்த விண்கற்களுக்கு பெயர் சூட்டும் அரிய வாய்ப்பை நமது தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களுக்கு நாசா வழங்கியுள்ளது. 3 விண்கற்களில் ஒன்றுக்கு “பெரியாரியல்” சார்ந்தப் பெயரை நாசாவிடம் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் பரிந்துரைக்க உள்ளனர். இதற்கு நாசா ஒப்புதல் தரும்பட்சத்தில் வானியல் சார்ந்த ஆராய்ச்சியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் பெயர் இடம்பெறும் என்றும் தமிழ்நாடு...

விடுதலை இராசேந்திரனுக்கு அரசின் ‘தந்தை பெரியார்’ விருது!

விடுதலை இராசேந்திரனுக்கு அரசின் ‘தந்தை பெரியார்’ விருது!

தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் விருது – படிக்கராமு பேரறிஞர் அண்ணா விருது – எல்.கணேசன் பாவேந்தர் பாரதிதாசன் விருது – பொ.செல்வராஜ் பாரதியார் விருது – கவிஞர் கபிலன் திரு.வி.க. விருது – டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திரநாத் அண்ணல் அம்பேத்கர் விருது – துரை.ரவிக்குமார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – பொதியவெற்பன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது – முத்து வாவாசி பொதுச்செயலாளருக்கு விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சீமான் முகத்திரை கிழிந்தது

சீமான் முகத்திரை கிழிந்தது

தந்தை பெரியாரை அவமதிக்கும் சீமானைக் கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை 5.1.2025 அன்று மாலை சென்னையில் சைதைத் தேரடி தெருவில் பொதுக்கூட்டம் நடத்தியது. அனைத்துப் பெரியார் இயக்கத் தோழர்களும் பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வந்திருந்தனர். ஏராளமான இளைஞர்கள் பெரியார் படம் போட்ட டீ சட்டையுடன் உணர்வுபூர்வமாக பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவரின் உரையும் அழுத்தமானதாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. சீமான் என்ற ஏமாற்றுப் பேர்வழி நாக்கில் நரம்பின்றி சாக்கடை மொழியில் பெரியாரைப் பேசுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்று எச்சரிப்பதாக இருந்தது இக்கூட்டம். கூட்டம் கருங்கடலில் மூழ்கி இருந்த நிலையில் ‘சீமான் ரசிகர்கள்’ கூட்டத்துக்கு ஆள் வரவில்லை என்று பொய்யாக வெளியிட்ட ‘ட்வீட்’டுகளை மக்கள் மத்தியில் படித்துக்காட்டிய போது கூட்டத்தினர் கைத்தட்டி எள்ளி நகையாடினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உள்ளிட்ட கழகத் தோழர்களும், திராவிடர்...

“பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?”

“பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?”

As “மாநாட்டுத் தீர்மானங்கள் !” திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?” “வாருங்கள் வரலாறு பேசுவோம்!!” பரப்புரை பயணத்தின் நிறைவு மாநாடு மயிலாடுதுறை – 22.03.2025 . மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தீர்மானம் எண் 1 : “தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும்.அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று பெரியார் பணி...

அடைமழையாகப் பரப்புரைக் கூட்டங்கள் 2024 – கழகத்தின் களப்பணிகள்

அடைமழையாகப் பரப்புரைக் கூட்டங்கள் 2024 – கழகத்தின் களப்பணிகள்

ஜனவரி: சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வட சென்னை, திருப்பூரில் கழக சார்பில் பொங்கல் விழாக்கள் நடந்தன. திருவல்லிக்கேணி விழாவில் சென்னை மேயர் பிரியா சிறப்பு விருந்தினர். திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையர் குடும்ப விழாவை இந்திய அரசியலும் பார்ப்பனியமும் என்ற கருத்தரங்கமாக நடத்தினர். சிறப்புரை : கொளத்தூர் மணி. பிப்ரவரி: ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கழகம் தொடர் கூட்டங்களை நடத்தியது. சென்னை, சேலம், திண்டுக்கல், திருச்சி மற்றும் ஈரோடு தெற்கு பகுதிகளில் கூட்டங்கள் நடந்தன. பிப்ரவரி 03: மதுரை மாவட்டக் கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்குப் பாராட்டு விழா. பிப்ரவரி 15: திண்டுக்கல், திருப்பூர், சென்னை மாவட்டங்களில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” “சமூக ஒற்றுமையைக் காப்போம்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. மேட்டூரில் பரப்புரைக் கூட்டத்துக்கு ஜலகண்டபுரம் காவல்துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று கூட்டங்கள் நடந்தன....

சீமானுக்கு ஒரு திறந்த மடல் – கலாநிதி சேரமான்

சீமானுக்கு ஒரு திறந்த மடல் – கலாநிதி சேரமான்

சீமானுக்கு ஒரு திறந்த மடல் – கலாநிதி சேரமான் முப்பாட்டன் முருகனின் வழித்தோன்றலே. ஜேக்கப்பின் பேரனே. செபஸ்தியன் ஈன்றெடுத்த சைமனே. சட்டமன்றத் தேர்தலில் களமாடி வென்று, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக மும்முடி சூடுவதற்கான ஆயத்தங்களில் மும்முரமாக நீங்கள் ஈடுபட்டிருக்கும் சூழலில் உங்களுக்கு மடல்  எழுதி சிரமம் கொடுக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தோம். தொப்பை வண்டியோடும், வேட்டைக்குப் பயன்படுத்தும் கட்டுத் துப்பாக்கிகளுடனும் காவலுக்கு நிற்கும் தமிழக காவல்துறையினரை ஆட்சிக்கு வந்ததும் மீன்பிடிப்படகுகளில் அனுப்பி  சிங்களப் படைகள் மீது போர் தொடுத்துக் கச்சதீவை மீட்க வேண்டும்! சிங்களக் கடற்படையால் நடுக்கடலில் தாக்கப்படும் தமிழக மீனவர்களைக் காப்பதற்கு உங்கள் கொப்பாட்டனார் இராசராச சோழன் வழியில் கப்பற் படை அமைக்க வேண்டும்! காவிரி ஆற்று நீரைத் தடுக்கும் கர்நாடகாவுக்குள் உங்கள் ஓட்டனார் இராசேந்திர சோழன் வழியில் பாய்மரக் கப்பல்கள் சகிதம் நுழைந்து ரெட்டிமார்மீது போர் தொடுத்து காவிரி ஆற்று  நீரை தமிழகத்திற்குள் பாய்ச்ச வேண்டும்! கண்ணகியை நிந்தித்த...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தீர்மானம் 1 பெரியார் அடையாளப்படுத்திய ஆரிய திராவிட போராட்டம் இப்போது மனு நீதி எதிர் சமூக நீதி, ஹிந்து இராஷ்ட்ரம் எதிர் அரசியல் சட்டம் என்று வடிவெடுத்து இருக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சி பெரும்பான்மை அற்ற நிலையிலும் பார்ப்பனிய மனுவாத சீரழிவுக் கொள்கையை நோக்கி நாட்டை இழுத்து செல்கிறது. இதற்கு எதிரான தத்துவார்த்த போராட்டம் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது, திராவிட மாடல் ஆட்சி தான் இதைத் தடுத்து நிறுத்தும் வலிமைபெற்ற அரணாக நிற்கிறது. அதை சீர்குலைக்க எந்தவித முறைகேடுகளையும் பயன்படுத்தி அகற்றுவதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. திராவிட மாடல் ஆட்சியின் இருத்தல் என்பது பார்ப்பனிய ஹிந்து இராஷ்டர முறியடிப்புக்கான தேவையாகவும் அவசியமானதாகவும் வரலாறு கோரி நிற்கிறது. இந்த அடிப்படை கருத்தை கவனத்தில் கொண்டு அரசுக்கு வலிமை சேர்க்க வேண்டிய அவசியத்தை இந்த செயலவை வலியுறுத்துகிறது. இந்த...

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

சேலம்: சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.09.2024 அன்று சேலம் தாதகாப்பட்டியில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏற்காடு தேவபிரகாசு தலைமை தாங்கினார். அமைப்பாளர் வெற்றிமுருகன் முன்னிலை வகித்தார். இதில் வருகிற 16.10.2024 அன்று சேலம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநர் ரவியைக் கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், பெரியார் நினைவு நாளில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A (h) மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை விளக்கி மாணவர்களிடையே விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது எனவும், மாணவர் விடுதிகளில் சந்திப்பு – அறிவியல் கண்காட்சி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மாநகரத் தலைவர் பாலு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகரச் செயலாளர்...

குன்றக்குடி அடிகளார் மற்றும் சேரன் மாதேவி நூற்றாண்டு சிறப்பு வாசகர் வட்டம்

குன்றக்குடி அடிகளார் மற்றும் சேரன் மாதேவி நூற்றாண்டு சிறப்பு வாசகர் வட்டம்

“குன்றக்குடி அடிகளார்” மற்றும் “சேரன் மாதேவி” நூற்றாண்டு சிறப்பு நிமிர்வோம் வாசகர் வட்ட 24வது சந்திப்பு 29.09.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சந்திப்பிற்கு தௌபீக் தலைமை தாங்கினார். மயிலை அஸ்வின் வரவேற்புரையாற்றினார். பொன்மலர் முன்னிலை வகித்தார். முதல் நிகழ்வாகத் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் படத்தைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார். பின்னர் “வைதீக எதிர்ப்பு மரபில் பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும்!” என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனும், “பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சியில் சேரன்மாதேவி” என்ற தலைப்பில் கழக இளைஞரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளர் ஜெயப்பிரகாசும் சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக நிறை நன்றி கூறினார். வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாசு நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, ஆய்வாளர் பழ.அதியமான் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார்...

சரவணக்குமார் எழுதிய இரு நூல்கள் வெளியீடு! கழகப் பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

சரவணக்குமார் எழுதிய இரு நூல்கள் வெளியீடு! கழகப் பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

சென்னை: எழுத்தாளரும், கழகத் தோழருமான சரவணக்குமார் எழுதிய ‘ஊர் வாயி’, ‘இவர்களும் தெய்வமாக்கப்படலாம்’ என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா 06.10.2024 அன்று பெருங்குடியில் உள்ள கழகப் பொதுச் செயலாளரின் இல்லத்தில் நடைபெற்றது.. நூலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி பெற்றுக் கொண்டார். இதில் நூலாசிரியர் சரவணக்குமார், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், அருள் நாராயணா, கோபிநாத், அன்னூர் விஷ்ணு, அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 10.10.2024 இதழ்

திருப்பூரில் எழுச்சி; கழக சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றம்!

திருப்பூரில் எழுச்சி; கழக சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றம்!

திருப்பூர் : தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் 06.10.2024 அன்று காலை 11 மணி தொடங்கி இரவு 8 மணி வரை முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது. வீரபாண்டி பிரிவு, கொளத்துப்பாளையம், இராயபுரம், பெரியார் காலனி, 15-வேலம்பாளையம், அனுப்பர் பாளையம், அம்மாபாளையம், ஆத்துப்பாளையம், மாஸ்கோ நகர் உள்ளிட்ட இடங்களில் திருப்பூர் மாநகர அமைப்பாளர் சரஸ்வதி, தெற்கு பகுதி பொறுப்பாளர் இராமசாமி, மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர் கடத்தூர் அய்யப்பன், கார்த்தி, மோகன், மதன், சூர்யா, கார்த்திகா ஆகியோர் கழகக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தனர். இந்நிகழ்விற்குக் கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு முன்னிலை வகித்தார். இதில் கழக சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர் முத்து, மாநகரத் துணைத் தலைவர்...

தோழர் தேவ.சீனி சுந்தரம் மறைந்தார் உடல் கொடையாக வழங்கப்பட்டது

தோழர் தேவ.சீனி சுந்தரம் மறைந்தார் உடல் கொடையாக வழங்கப்பட்டது

மதுரை: பெரியார் திராவிடர் கழகத்தின் சிவகங்கை முன்னாள் மாவட்டத் தலைவரும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் காப்பாளருமான தளபதி அவர்களின் தந்தையுமான தேவ.சீனி.சுந்தரம் 21.09.2024 அன்று முடிவெய்தினார். 23.09.2024 அன்று நடைபெற்ற இறுதி நிகழ்வை பெண்களே முன்னின்று நடத்தினர்.சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அவரது “உடல் கொடை”யாக வழங்கப்பட்டது. முன்னதாக கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் த.தே.ம.மு. தலைவர் மீ.த.பாண்டியன், த.தே.பே, தி.க உள்ளிட்ட தோழமை அமைப்பினரும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்

மயிலாப்பூரில் சிந்தனைப் பலகை திறப்பு!

மயிலாப்பூரில் சிந்தனைப் பலகை திறப்பு!

தந்தை பெரியார் 146வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் பெரியார் சிந்தனைப் பலகையை ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி திறந்து வைத்தார். பகுதித் தமிழ் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வை மயிலைப் பகுதித் தோழர்களான மாணிக்கம், அருண், அஸ்வின், கார்த்திக் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்

கள்ளக்குறிச்சியில் பெரியார் பிறந்தநாள் விழா

கள்ளக்குறிச்சியில் பெரியார் பிறந்தநாள் விழா

கள்ளக்குறிச்சி: தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக சார்பில் 17.09.2024 அன்று கடுவனூர் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து சங்கராபுரம் பெரியார் சிலைக்கு ரிஷிவந்தியம் ஒன்றியத் தலைவர் மா. குமார் ரிஷிவந்தியம் ஒன்றியத் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. செந்தமிழ் பட்டு கிராமத்தில் சே.வே.இராஜேசு தலைமையிலும் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் ரிஷிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர் இரா. கார்மேகம், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ. முருகன், தே.ராமச்சந்திரன், தென்னரசு, சூர்யா நீதிபதி, மு. நாகராஜ், கா.பழனிச்சாமி, சு.வல்லரசு, வீ.தனுஷ், க.குபேந்திரன், மணிவேல், சுதாகர், ஐயப்பன், ராஜ்குமார், சரத்குமார், ராஜா, வே.ராஜா பிரசாந்த், மாரியாபிள்ளை, விஜய், குரல் குணா, ரோனித், விஸ்வா, ராகுல், விவேகன், பகுத்தறிவாளன், யாழினி ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்

மேட்டுப்பாளையத்தில் பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்; திருப்பூர் துரைசாமி, சிற்பி இராசன் பங்கேற்பு

மேட்டுப்பாளையத்தில் பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்; திருப்பூர் துரைசாமி, சிற்பி இராசன் பங்கேற்பு

மேட்டுப்பாளையம்: பெரியார் 146வது பிறந்த நாள் விழா 29.09.2024 அன்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதற்குக் கோவை மாவட்டக் கழகத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக சிவரஞ்சனி திரையரங்கம் முன்பு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர் அமுல்ராஜ் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். முதல் நிகழ்வாகப் பெரியாரியலாளர் சிற்பி ராசனின் மந்திரமல்ல! தந்திரமே! அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் மூலம் சாமியார்களின் பித்தலாட்டங்களைத் தோலுரித்துக் காட்டினார். பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நவீன் குமார், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாகக் கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி சிறப்புரையாற்றினார். மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர் அமுல்ராஜ் நன்றி கூறினார். நிகழ்வில் கோவை மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர் செல்வம்,திருப்பூர் மாநகரத் துணைத் தலைவர் மாரிமுத்து,...

குமாரபாளையத்தில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

குமாரபாளையத்தில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

நாமக்கல் : தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா மற்றும் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் 22.09.2024 அன்று குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கழக நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்டக் காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். முதல் நிகழ்வாக பெரியாரியலாளர் சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. குமாரபாளையம் நகரக் கழகத் தலைவர் தண்டபாணி, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்கள். நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேலும் கழகத் தலைவருக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.கே.குமார், நகரச் செயலாளர் சரவணன் ஆகியோர் பயணாடை அணிவித்து மகிழ்ந்தனர். இதில் மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, வெண்ணந்தூர், காளிப்பட்டி, ராசிபுரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நகரத் துணைச் செயலாளர் பி.மாதேஸ்வரன் நன்றி...

திருப்பூர் கழகத் தோழர் கோமதி மறைவு

திருப்பூர் கழகத் தோழர் கோமதி மறைவு

திருப்பூர் மாநகரக் கழகக் களப்பணியாளர் திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த கோமதி 18.09.2024 மாலை உடல்நலக்குறைவால் முடிவெய்தினார். அவரது உடல் 19.09.2024 அன்று அடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் திருப்பூர், கோவை, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 26.09.2024 இதழ்

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

சேலம் மேற்கு: சேலம் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பறை முழக்கத்தோடு தொடங்கிய இந்நிகழ்விற்கு மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக மேட்டூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி, அறிவுமதி, தேன்மொழி, காயத்ரி ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தோழர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா கொள்கை முழக்கங்களை எழுப்ப.. தொடர்ந்து தோழர்கள் கொள்கை முழக்கங்களை எழுப்பினர். அதன் பிறகு தோழர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணி சமத்துவபுரம் பெரியார் சிலையில் தொடங்கி நங்கவள்ளி, மேட்டூர் RS, மேட்டூர், கொளத்தூர், காவலாண்டியூரில் நிறைவுபெற்றது. நங்கவள்ளி...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு ஒன்றிய அரசு அலுவலகங்களில் வடநாட்டார் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு ஒன்றிய அரசு அலுவலகங்களில் வடநாட்டார் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் வட நாட்டு அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அதை எதிர்த்துப் போராட வேண்டுமென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியார் பிறந்தநாள் விழாவில் அறிவித்தார். அன்றே பெரியார் எச்சரித்தார்! பறிபோகும் மாநில உரிமைகள் என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பேசியக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பறிக்கப்படும் மாநில உரிமைகளைப் பட்டியலிட்டார். தன்னாட்சிக் குரல் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலேயே தொடங்கிவிட்டது. பெரியார் சுதந்திர நாளை துக்கநாள் – பார்ப்பனிய பனியாக்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்ட நாள் என்றார். தமிழ்நாடு விடுதலையே ஒரே தீர்வு என்றார். அண்ணா தென்னக மாநிலங்களின் கூட்டமைப்பைக் கொண்ட “திராவிட நாடு” கேட்டார். அரசியலுக்காக அதைக் கைவிட்ட போது கோரிக்கை கைவிடப்படுகிறது. ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே நீடிக்கிறது என்றார். இப்போது மாநில உரிமைகளுக்காகத்தான் நாம் போராட வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் அதிகாரிகளாக இந்தி பேசும்...

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

கோவை: மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து 12.9‌.2024 அன்று கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் வெங்கட் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், திமுக மாணவரணிப் பொறுப்பாளர் மதிவாணன், மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் மூர்த்தி, பெண்ணிய செயற்பாட்டாளர் லோகநாயகி, மாநகரத் தலைவர் நிர்மல்குமார், CPIML ரெட்ஸ்டார் இனியவன், புரட்சிகர இளைஞர் முன்னணிப் பொறுப்பாளர் மலரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் சூலூர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். முன்னதாக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில்...

திருச்சியில் குடும்ப விழா!

திருச்சியில் குடும்ப விழா!

திருச்சி: மணப்பாறையைச் சேர்ந்த கழகத் தோழர் பாலசுப்பிரமணியம் – சித்ரா இல்ல குடும்ப விழா 08.09.2024 அன்று அவரது நடுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது‌. இதில் பெரியாரியலாளர் சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் விழா மகிழ்வாக பாலசுப்பிரமணியம் – சித்ரா ஆகியோர், கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.6000/- வளர்ச்சி நிதியாக வழங்கினார்கள். இந்த விழாவில் கழகத் தோழர்கள் மனோகரன், டார்வின் தாசன், குமரேசன், தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19.09.2024 இதழ்

நல்லாசிரியர் விருது பெற்ற வேலூர் கழகத் தோழர்

நல்லாசிரியர் விருது பெற்ற வேலூர் கழகத் தோழர்

தோழர் ‘தெருவிளக்கு’ கோபிநாத் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவராக தற்போது பணியாற்றிவருகிறார். மேலும் வேலூர் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் இரவு நேரப் பள்ளிகளை நடத்தி அவை பரவுவதற்கான தொடக்க புள்ளியாகச் செயல்பட்டவர். தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்திலிருந்து வெளிவரும் பாடப் புத்தகங்களில் உள்ள ஓவியங்களை வரையும் பணியைச் செய்தவர். பள்ளி மாணவர்களிடையே நாடகங்களைப் பயிற்றுவிக்கும் பயிற்றுநர். கிராமியக் கலைகளில் வித்தகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 19.09.2024 இதழ்

சேலத்தில் பெரியார் முகமூடியுடன் தோழர்கள் அணிவகுப்பு தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடந்து முடிந்த பெரியார் பிறந்தநாள் விழா!

சேலத்தில் பெரியார் முகமூடியுடன் தோழர்கள் அணிவகுப்பு தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடந்து முடிந்த பெரியார் பிறந்தநாள் விழா!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா பழனியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பழனியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பழனி ஒன்றியத்துக்கு உட்பட்ட அ.கலையம்புத்தூர், அழகாபுரி, மானூர், புது ஆயக்குடி, பழைய ஆயக்குடி, பச்சளநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் பெயர் பலகையைக் கழகத் தலைவர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். கழகத் தலைவரை அப்பகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் மருதமூர்த்தி, மாவட்டச் செயலாளர் மாக்சிம் கார்க்கி, மாவட்ட அமைப்பாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாச்சிமுத்து, துணை அமைப்பாளர் சங்கர், பழனி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் பெரியார், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவர் கபாலி, ஒன்றிய அமைப்பாளர் சக்திவேல், ஆயக்குடி பேரூர் அமைப்பாளர் ஜெயசங்கர், தமிழ்நாடு...

காவல்துறையைக் கண்டித்துப் பொதுக்கூட்டம்

காவல்துறையைக் கண்டித்துப் பொதுக்கூட்டம்

மேட்டூர் நகரக் கழக சார்பில் மேட்டூர் சரகக் காவல்துறையினரின் போக்கைக் கண்டித்துக் கண்டனப் பொதுக்கூட்டம் 04.09.2024 அன்று மேட்டூர் சதுரங்காடியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு தலைமை வகித்தார். மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. இதில் சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இரா.திருமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மேட்டூர் சரகக் காவல் துறையின் அடாவடிப் போக்கினைக் கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் இருக்கும் காவல் நிலையங்களில் காவல்துறை அதிகாரிகளால் நடைபெறும் விதிமீறல்கள், லஞ்சம், போதை பொருள் விற்பனைக்கு ஆதரவு, எளிய மக்களிடம் மிரட்டி அடித்து பணம் பறித்தல் போன்ற விவரங்களைத் திரட்டி ஆதாரத்துடன் பொதுக்கூட்டத்தில் எடுத்துரைத்தார். மேலும் மேட்டூர் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் முதல் மேட்டூர் சரகச் சாதாரணக் காவலர் வரையில் உள்ளோர் சட்ட விரோதச் செயல்களை மீண்டும்...

தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித்...

சேலத்தில் தலைவர், சென்னையில் பொதுச்செயலாளர் பங்கேற்பு கல்வி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலத்தில் தலைவர், சென்னையில் பொதுச்செயலாளர் பங்கேற்பு கல்வி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித்...

ரூ.10,000 நன்கொடை

ரூ.10,000 நன்கொடை

திருப்பூர் மாநகரக் கழகச் செயலாளர் மாதவன், தனது புது இல்லத் திறப்பின் மகிழ்வாக புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.10,000/-யைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்

கோவை: பெரியார் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாட முடிவு

கோவை: பெரியார் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாட முடிவு

கோவை: கோவை மாவட்டக் கழக ஆலோசனைக் கூட்டம் 01.09.2024 அன்று கோவை தமிழ்ப்புலிகள் கட்சி அலுவலகத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைவர் பெரியாரின் 146ஆவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் காந்திபுரம் பெரியார் சிலை, நியூ சித்தாபுதூர், பீளமேடு, உப்பிலிபாளையம் காந்தி நகர், உக்கடம், கவுண்டம்பாளையம், சிவானந்தகாலனி உள்ளிட்ட பகுதிக் கழகங்களில் பெரியார் பிறந்தநாள் விழா – சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. கோவையின் புறநகர் பகுதிகளான அன்னூர், காரமடை, சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளிலும் பெரியார் பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதில் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் நிறைவு!

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் நிறைவு!

திண்டுக்கல்: திண்டுக்கல் – தேனி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 22.08.2024 அன்று பழனி அ.கலையம்புத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கழகப் பொருளாளர் சு.துரைசாமி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், கழகத் தலைமைக்குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், இரா.உமாபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கடந்த ஒரு ஆண்டாகத் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும், இணையதள செயல்பாடுகளில் கழகத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றுப் பேசினார். கூட்டத்தின் முடிவில் திண்டுக்கல் – தேனி மாவட்டப் பொறுப்பாளர்களைக் கழகத் தலைவர் அறிவித்தார். அவை பின்வருமாறு:- திண்டுக்கல் மாவட்டத் தலைவராக மருதமூர்த்தி, மாவட்டச் செயலாளராக மாக்சிம் கார்க்கி, மாவட்ட அமைப்பாளர் மற்றும் இணையதளப் பொறுப்பாளராக ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நாச்சிமுத்து, தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளராக ஆயுதன், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவராக கபாலி, ஒன்றியச் செயலாளராக ஜோசப், ஒன்றிய அமைப்பாளராக...

சேலத்தில் இளைஞர் – மகளிர் – மாணவர் அணிகள்  கலந்துரையாடல்

சேலத்தில் இளைஞர் – மகளிர் – மாணவர் அணிகள் கலந்துரையாடல்

சேலம் : சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – மகளிர் அணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 01.09.2024 இளம்பிள்ளை நேரு,வேடியப்பன் இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. சேலம் (கி) மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலை வகித்தார். கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் (கி) மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் தமிழரசன் ஆகியோர் இளைஞர்கள் மத்தியில் தங்களது கள அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேலும் சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – மகளிர் அணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகக்த்திற்குப் புதியப் பொறுப்பாளர்களை நியமித்தார். அவை பின்வருமாறு:- மாவட்ட இளைஞர் அணித் தலைவராக ஏற்காடு தேவபிரகாஷ்,...

ஆதிதிராவிடர் நல ஆணையத்திடம் நேரில் வழங்கப்பட்டது! தமிழ்நாட்டுக் கிராமங்களில் நிலவும் தீண்டாமைகள் பட்டியல் தயாரித்தது கழகம்

ஆதிதிராவிடர் நல ஆணையத்திடம் நேரில் வழங்கப்பட்டது! தமிழ்நாட்டுக் கிராமங்களில் நிலவும் தீண்டாமைகள் பட்டியல் தயாரித்தது கழகம்

சேலத்தில் 2023, ஏப்ரல் 29,30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டில், வைக்கம் நூற்றாண்டை முன்னிட்டு ஜாதி – தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்கட்டமாகத் தேநீர்க் கடைகளில் நிலவும் இரட்டைக்குவளை முறை, வைக்கத்தைப் போலவே தாழ்த்தப்பட்ட மக்கள் பொது வீதிகளில் நடமாடும் உரிமைகளைத் தடுத்தல், கோயில் நுழைவு அனுமதி மறுப்பு என்று ஜாதி தீண்டாமைகள் நிகழும் கிராமங்களைக் கண்டறிந்து, அதன் பட்டியலைக் கழகத் தலைமைக்குச் செயல்வீரர்கள் அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் திண்டுக்கல், கோவை, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, திருப்பூர், ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் ஜாதித் தீண்டாமைக் கணக்கெடுப்புப் பணிகளைக் கழகச் செயல்வீரர்கள் மேற்கொண்டனர். கணக்கெடுப்புப் பணிகளுக்கு என்று பிரத்யேகமாக படிவங்களைத் தயாரித்து களத்தில் இறங்கினர் கழகச் செயல்வீரர்கள். தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகக் கிராமம், கிராமமாகச் சென்றும், பல்வேறு ஊர்களில் தங்கியும் இந்தக்...

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட திவிக கலந்துரையாடல் கூட்டம் பள்ளிபாளையம் ஐந்து பனையில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட சமுதாயக் கூடத்தில் 14.08.2024 மாலை 05.00 மணி அளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலந்துரையாடல் கூட்டத்தில் நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.சரவணன், மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, ராசிபுரம் நகரச் செயலாளர் பிடல் சேகுவாரா, காளிப்பட்டி பெரியண்ணன், திருச்செங்கோடு பொறுப்பாளர் பூபதி, கீற்று இணையதளப் பொறுப்பாளர் கார்த்தி, குமாரபாளையம் நகரத் தலைவர் மீ.தா.தண்டபாணி, செயலாளர் செ வடிவேல், தோழர்கள் மோகன், சந்திரா, மணியம்மை, மாதேஸ்வரன், ஆ பிரகாஷ், நாகராஜ், கடச்சநல்லூர் அமைப்பாளர் செல்வகுமார் ஐந்து பனை வாசகர் வட்ட சக்திவேல் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைக் பகிர்ந்து கொண்டனர். ஜாதி ஆணவப் படுகொலைகளைத்...

சென்னையில் மாணவர், இளைஞர் அணிகள் ஆலோசனை

சென்னையில் மாணவர், இளைஞர் அணிகள் ஆலோசனை

சென்னை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 18.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி மாணவி தோழி தலைமைத் தாங்கினார். தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, மாணவர்கள் முன்வைத்தக் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். கூட்டத்தில் பங்கேற்ற ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் எதிர்வரும் காலங்களில் மாணவர் நலன் சார்ந்தப் போராட்டங்களை முன்னெடுப்பது, தோழமை மாணவர் இயக்கங்களுடன் இணைந்துப் பணியாற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. நிறைவாகத் திருப்பூர் பிரசாந்த் நன்றி கூறினார். சென்னை மாவட்டக் கழக இளைஞரணியில் இளைய தலைமுறையினர் சந்திப்பு நிகழ்வு 25.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமையகத்தில் இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாசு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி பங்கேற்றுச் சிறப்பித்தார். மேலும் இட ஒதுக்கீடு – பெரியார் – திராவிடம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து...

நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம் கருத்தரங்கம்

நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம் கருத்தரங்கம்

திருப்பூர்: திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மகன் பிறந்தநாள் விழா மற்றும் ‘நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம்’ கருத்தரங்கம் 10.08.2024 அன்று பொங்குபாளையம் கூத்தநாயகி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மாநகர அமைப்பாளர் முத்து வரவேற்புரையாற்றினார். திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கோவை மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் வீ.சிவகாமி, பல்லடம் தேன்மொழி, சூலூர் தமிழ்ச்செல்வி, கோவை மாநகரச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், கழகப் பொருளாளர் சு.துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக “நூற்றாண்டு கண்ட திராவிடர் இயக்கம்” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிகழ்வின் மகிழ்வாகப் புரட்சி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ 2000/- யைப் பெரியார் விழுது...

பேச்சுப்போட்டியில் திருப்பூர் மகிழவன் இரண்டாம் இடம்

பேச்சுப்போட்டியில் திருப்பூர் மகிழவன் இரண்டாம் இடம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறியாளர் அணி நடத்திய மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் இரண்டாம் இடத்தைப் பிடித்து ரூ.3,00,000/- பரிசுத் தொகையை வென்றார். பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததையடுத்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும் குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத்திற்கு ரூ.1000/- மற்றும் பெரியார் முழக்கத்திற்கு ரூ.5000/- நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்

கோவையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கதே” பரப்புரைக் கூட்டம்

கோவையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கதே” பரப்புரைக் கூட்டம்

கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் “அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கதே” பரப்புரை விளக்கக் கூட்டம் 28.08.2024 அன்று உக்கடம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகரச் செயலாளர் வெங்கட் தலைமை தாங்கினார். சூலூர் தமிழ்ச்செல்வி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற தோழமை இயக்கத் தலைவர்களான திராவிடத் தமிழர் கட்சி வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார், திமுக வழக்கறிஞரணி அன்புச் செழியன், தமிழ்ப்புலிகள் கட்சி தம்பி செந்தில், வழக்கறிஞர் சரவணன், கழகக் கோவை மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், கழகக் கோவை மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். நிறைவாகக் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்