பல்லடத்தில் குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்; கழகத் தலைவர் சிறப்புரை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 29.07.2024 திங்கள்கிழமை மாலை 5.00 மணிக்கு பல்லடம் NGR சாலையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தி.வி.க. பல்லடம் நகர அமைப்பாளர் மு.கோவிந்தராசு தலைமை தாங்கினார். செம்பருதி வரவேற்புரை யாற்றினார். கழகத் தோழர்கள் பழனிச்சாமி, அஜித், கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்க நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினரின் பகுத்தறிவு பாடல்கள் பாடப்பட்டன.
தோழர் அனுப்பட்டி சீனி.செந்தேவன் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன், கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், கழகப் பொருளாளர் துரைசாமி, திமுக பல்லடம் நகரப் பொருளாளர் குட்டி பழனிச்சாமி ஆகியோர் உரையாற்றினர்
கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் குடிஅரசு இதழின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பரமசிவம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சாகுல் ஹமீது, விசிக பொறுப்பாளர் ரங்கசாமி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் பிரகாசு, திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, பல்லடம் தாய்த்தமிழ்ப் பள்ளி தாளாளர் ராசேசு கண்ணா மற்றும் கழகத்தின் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு வடக்கு மாவட்ட, மாநகர நிர்வாகிகள் – தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
பொதுக் கூட்டத்தை திவிக திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு நெறியாள்கை செய்தார்.
பல்லடம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் பொதுக்கூட்ட மேடையில் கழகத் தலைவர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்.
பல்லடத்தைச் சேர்ந்த தோழர் முகில்நிலா மணிகண்டன் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு ரூ15,000/- நன்கொடையாக வழங்கினார்.
நிறைவாக பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சண்முகம் நன்றியுரை ஆற்றினார்.
பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்