தெருமுனைக் கூட்டங்கள் : திருச்செங்கோடு கழகம் முடிவு
திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் 30.06.2019 அன்று காலை 10 மணிக்கு பெரியார் மன்றத்தில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு, நகர செயலாளர் பூபதி தலைமை வகிக்க, கழகத் தோழர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
1) தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது; 2) ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவுக் கூடம், எட்டுவழிச் சாலை போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை விளக்கும் வகையில் துண்டறிக்கைப் பிரச்சாரம் செய்வது; 3) காமராஜர் பிறந்தநாள் விழாவை ஏதேனும் அரசுப் பள்ளியில் கொண்டாடுவது – ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கார்த்தி நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 04072019 இதழ்