முழக்கத்திற்குப் பாராட்டு!

கொளத்தூரில் நடைபெற்ற நாத்திகர் விழா நிகழ்ச்சியில் மாநாட்டில் மூன்றாவது தீர்மானமாக கணவன் இறந்த பிறகு பெண்களுக்கு நடக்கும் சடங்குகளின் தடுக்க கோரி மூடநம்பிக்கைகளில் இது கொடூரமான மூடநம்பிக்கை என்பதை சுட்டிக்காட்டி தீர்மானம் இருப்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது, படிக்கிற போது நா தழுதழுக்கிறது.

அதேபோல கடந்த வாரம் வந்த முழக்கத்தில் ‘நாத்திகர் விழா சிந்தனை இரண்டு தொகுப்பில்’ 1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பு கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதற்கு கீழே இருக்கிற கட்டுரையில் ஆசிரியர் ஊசி ஒன்று எனக்கு வேண்டும் மாணவர்கள் வாங்கி வர வேண்டும் என்று சொல்லி ஒரு மாணவர் கிளம்ப எல்லோருமாக சேர்ந்து வாங்கி வருகிறோம் என்று, உடன் இருந்த மாணவர்களும் உடன் செல்ல அவர்கள் வாங்கி வந்த விதமும் அந்த ஊசியின் கதையும், தெருவில் இழுத்து வருகிற தேரின் கதையையும் எளிமையாக புரிய வைத்த பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நா ராமநாதன் அவர்களின் பெரியார் இயல் பாடங்கள் தொகுதி ஒன்றிலிருந்து பெரியார் முழக்கத்தில் வெளியிட்டிருப்பது சிறப்பு படிப்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது கட்டுரையை வெளியிட்டதற்கு ஆசிரியருக்கு நன்றி.
– சாமிநாதன்
(நாமக்கல் மாவட்டத் தலைவர்). பெரியார் முழக்கம் 26062025இதழ்

You may also like...