இராசிபுரத்தில் கழகம் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம்
திராவிடர் விடுதலைக் கழகம் இராசிபுரம் சார்பில் 10.11.2019 அன்று காலை 10 மணியளவில் இராசிபுரம் பட்டணம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சுமதி மதிவதனி வரவேற்புரையாற்றினார். இராசிபுர நகர அமைப்பாளர் பிடல் சேகுவேரா தலைமை வகிக்க, நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்வில், பொன். நல்லதம்பி (தி.மு.க பேரூர் செயலாளர்), சுந்தரம் (அ.தி.மு.க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர்), இரத்தினம் (வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் மதுரை), மோகன் தாஸ் (தி.மு.க மாவட்ட மாணவரணி அமைப்பாளர்), கைலாஷ் (இராசிபுரம் ஒன்றிய செயலாளர் ம.தி.மு.க.) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டனர்.
காலை அமர்வில், ‘பெரியார்-அம்பேத்கர் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். உணவு இடைவேளைக்கு பின், ‘இட ஒதுக்கீடு மற்றும் சட்ட எரிப்பு போராட்ட வரலாறு’ குறித்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் உரையாற்றினார். பயிலரங்கத்தின் இறுதியில் புதிய தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, கழகத் தலைவர் மற்றும் பரப்புரைச் செயலாளர் இருவரும் பதில் அளித்தனர். மதிய உணவாக மாட்டுக் கறி வழங்கப்பட்டது. மதிய உணவிற்கான செலவை சேந்தமங்கலம் சிவக்குமார் ஏற்றுக் கொண்டார். பயிலரங்கத்தில் 45க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களுக்கு கழகத் தலைவர் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டவர்களுக்கும், தோழமை அமைப்பின் நிர்வாகி களுக்கும், கழக நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து உதவி புரிந்து வருபவர் களுக்கும் கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசுகளை கழகத் தலைவர் வழங்கினார். ஆத்தூர் மகேந்திரன், சென்னிமலை செல்வராசு ஆகியோர் பயிலரங்கத்திற்கு புதிய தோழர்கள் பலரை அழைத்து வந்திருந்தனர். நிகழ் விற்கு மல்லசமுத்திர ஒன்றிய அமைப் பாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 14112019 இதழ்